Thursday, January 14, 2016

மகிழ்ச்சித் திருநாள் பொங்கல்..!.







பால் பொங்கல் பொங்குது பன்னீரிலே..!

தமிழர் திருநாளாம்  பொங்கல் திருநாள் உலகெங்கும் குதூகலமாகக் கொண்டாடப்படும் மகிழ்ச்சித்திருநாளாகத்திகழ்கிறது..

மழைக்கு அதிபதியான வருணன் தனது வெப்பவீச்சுக் கதிர்களால் பூமியிலிருந்து ஒரு பங்கு நீரை எடுத்துக்கொண்டு பதிலாக பத்து மடங்கு மழையாக பொழிகிறதே போல சூரியனைப் பூஜிப்பதால் வாழ்க்கைக்கு தேவையான எல்லாம் பத்து மடங்காக கிடைக்கும் என்பது நம்பிக்கை... 
''பரிதியே பொருள் யாவிற்கும் முதலே" என்றும் , செங்கதிர்த்தேவனின் சிறந்த ஒளியினைத் தேர்கிறோம்.. நம்மை வழிநடத்துக .. என்றும் பாரதியும் அறிவுறுத்துகிறார்..


கலப்பை விநாயகர் - 

வெளியில் இருந்து வீட்டை நோக்கி படையெடுக்கும் பூச்சிகள்,வீட்டிற்குள் நுழையவிடாமல் தடுப்பதற்கு வீடுமுன் கட்டப்படும் கூரைப்பூ என்று காப்புக்கட்டும் - பூளைப்பூ, ஆவாரம் பூ, மாவிலை ஆகியவை  உலர்ந்து கீழே விழும் போது அதை தாண்டி வீட்டிற்குள் பூச்சிகள் நுழையாது காக்கின்றன..
ஆவாரம் பூ, மாவிலைகள் ஆக்சிஜன் செரிவை அதிகரிக்கிறது. 
பொங்கல் நாளில் இஞ்சி மற்றும் மஞ்சள் கிழங்கு போன்ற  வழிபாட்டுப் பொருள்கள் . மஞ்சள்காமாலை, அம்மை போன்ற நோய்களை பரப்பும் வைரஸ் கிருமிகளை அழிக்கும் என்று அறிவியல் பூர்வமாக நிரூபிக்கப்பட்டுள்ளது. 
 
. கோடையில் தோன்றும் நுண்கிருமிகளின் வளர்ச்சியை தடுக்கவும், குடலில் ஏற்படும் தொற்றினால் ஒவ்வாமை ஏற்படுவதை தடுக்கவும் பனங்கிழங்கு, வெற்றிலை, வாழைப்பழம், தேங்காய் போன்ற வழிபாட்டு பொருட்கள் உதவுகின்றன


புரதச்சத்து நோய் எதிர்ப்பு சக்தியை தரக்கூடிய பச்சை மொச்சை பொங்கலன்று உணவில் சேர்த்துக் கொள்வதால் உடலில் வலிமை அதிகரிக்கிறது. 
 

14 comments:

  1. பொங்கல் வாழ்த்துகள். நாம் செய்யும் காரியங்களின் காரணங்களை அறிந்து செய்வது நல்லதுதான்! அருமை.

    ReplyDelete
  2. இனிய பொங்கல் தின நல்வாழ்த்துகள் அம்மா...

    ReplyDelete
  3. தங்களுக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துகள்!

    ReplyDelete
  4. இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  5. ஏர்க் கலப்பையுடன் விநாயகர்! வித்தியாசமான படம்! இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  6. தமிழர் திருநாள் வாழ்த்துக்களை
    மகிழ்வோடு நவில்கின்றேன்
    கனிவோடு ஏற்றருள்வீர்

    ReplyDelete
  7. வணக்கம்
    அம்மா
    தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும் எனது இனிய பொங்கல் வாழ்த்துக்கள்-2016

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
  8. நகம் வளர வெட்டுகிறோம்.
    நஞ்செனும் உறவை வெட்டுகிறோம்.
    நயமற்ற பழக்கங்கள் விலக்குவோம்.
    நல்லுணர்வுப் பொங்கல் பொங்குவோம்.
    துமிழ் மொழியை வளர்ப்போம்.
    தமிழ் உணர்வை வளர்ப்போம்.
    அமிழ்த்தும் கொடிய வஞ்சகமழிப்போம்.
    அமிர்தத் தமிழ் பொங்கலிடுவோம்.
    இனிய பொங்கல் வாழ்த்துகள் உரித்தாகுக.
    http://kovaikkavi.wordpress.com

    ReplyDelete
  9. நகம் வளர வெட்டுகிறோம்.
    நஞ்செனும் உறவை வெட்டுகிறோம்.
    நயமற்ற பழக்கங்கள் விலக்குவோம்.
    நல்லுணர்வுப் பொங்கல் பொங்குவோம்.
    துமிழ் மொழியை வளர்ப்போம்.
    தமிழ் உணர்வை வளர்ப்போம்.
    அமிழ்த்தும் கொடிய வஞ்சகமழிப்போம்.
    அமிர்தத் தமிழ் பொங்கலிடுவோம்.
    இனிய பொங்கல் வாழ்த்துகள் உரித்தாகுக.
    http://kovaikkavi.wordpress.com

    ReplyDelete
  10. 2016 தைப்பொங்கல் நாளில்
    கோடி நன்மைகள் தேடி வர
    என்றும் நல்லதையே செய்யும்
    தங்களுக்கும்
    தங்கள் குடும்பத்தினருக்கும்
    உங்கள் யாழ்பாவாணனின்
    இனிய தைப்பொங்கல் வாழ்த்துகள்!

    ReplyDelete
  11. இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  12. இனிய வாழ்த்து கண்டேன். நன்றி.

    ReplyDelete
  13. தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும் தமிழர் திருநாளாம் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்.

    ReplyDelete