Thursday, October 30, 2014

மஹிமை மிக்க துலா ஸ்நானம்


மஹிமையுள்ள கங்கையும், இந்த உலகிலுள்ள மூன்றரைக் கோடி புண்ய தீர்த்தங்களுடன் இறைவனின் உத்தரவினால் துலா மாதமான ஐப்பசியில்  
 தங்களிடம் சேர்ந்துவிட்ட பாவத்திலிருந்து விடுபட ஐப்பசியில் காவிரியை நாடி வருவதாக பல புராணம் கூறுகிறது. 

சங்கல்பம், மந்த்ரம் முதலிய எதுவும் இல்லாமலும் வேறு ஞாபகத்துடனும், உலக்கையை அமிழ்த்துவது போல் தலையை அமிழ்த்தி ஸ்நாநம் செய்பவருக்கும் ஏழ் பிறவியில் உண்டான பாபங்கள் நீக்கும் புனிதத்தன்மை மிக்கது. 
பாவசுத்தியுடனும், நியமத்துடனும் ஸ்நானம் செய்பவருக்கு 
பலன் மிகஅதிகம்.
நூறு வருஷ காலம் கங்கையில் விடாமல் நியமத்துடன் ஸநானம் செய்தால் அடையும் பலனைத் துலா மாஸத்தில் அரங்கநகரப்பனைச் சூழந்துள்ள காவேரியில் துலா ஸ்நாநம் செய்வதனால் அடைந்துவிடுகிறான்.
துலா ஸ்நானத்திற்கு மிகவும் முக்கியமான தலங்கள் சிவாலய சிறப்புடைய மயிலாடுதுறையும், விஷ்ணுவாலய சிறப்புடைய ஸ்ரீரங்கமும் ஆகும். 
இந்த ஸ்நானத்திற்கு கடை முழுக்கு  என்று பெயர்.
 
துலா மாதம்  அம்மாமண்டபம் காவிரிப் படித்துறையில் இருந்து காலையிலே ஐந்தரை மணிக்கு ஆலய யானை தலையில் தங்கக் குடத்தில் நீர் எடுத்துச்செல்வது வழக்கம்.. 
 
: Lord Anjaneya, Amma Mandapam, Srirangam
அம்பிகை பார்வதி மயில் உருவம் எடுத்து சிவனை வழிபட்ட தலம் மாயூரம் என்று வடமொழியிலும், மயிலாடுதுறை என்று தமிழிலும் வழங்கப்படும் தலம் தஞ்சாவூரிலிருந்து சிதம்பரம் செல்லும் வழியில் உள்ளது. 
திருக்கடையூரில் சிவன் எமனை பதவியிலிருந்து நீக்கி விட்டார். அப்போது எமன் (தர்மதேவன்) மாயூரத்தில் உள்ள மாயூரநாதரை வழிபட்டு மீண்டும் அந்த பதவியை பெற்றான். எனவே இத்தலம் தர்மபுரம் என்றும் அழைக்கப்படுகிறது. 
ஆயிரமானாலும் மாயூரமாகுமா என்பது பழமொழி. ஆயிரம் வருஷம் கங்கையில் தினம் குளித்தால்  கிடைக்கும் புண்ணியம் ஐப்பசி மாதத்தில் மாயவரம் காவிரியில் ஒரு நாள் குளித்தாலே கிடைத்துவிடும் என்பது ஐதீகம்.

8 comments:

  1. ஸ்ரீ ரங்க தரிசனம்.. இனிய பதிவு..
    வாழ்க நலம்..

    ReplyDelete
  2. சிறந்த பக்திப் பதிவு
    தொடருங்கள்

    ReplyDelete
  3. sreeranga dharsanam
    swarga dharisanam

    subbu thatha

    ReplyDelete
  4. காவிரி சூழ்பொழில் சோலைகள் நடுவினில் கருமணி துயில்கின்றது... கண்ணனின் நித்திரை வண்ணங்கள் காட்டிடும் ஸ்ரீரங்கம் தெரிகின்றது..

    ReplyDelete
  5. துலாஸ்நானம் பற்றிய அருமையான தகவல்கள். அழகான படங்கள்.நன்றி

    ReplyDelete
  6. அறியாத தகவல்களை அறிந்து கொள்ள முடிந்தது. நல்ல பகிர்வு.

    ReplyDelete

  7. துலாஸ்நானம் பற்றிய அருமையான தகவல்கள். அழகான படங்கள்.நன்றி



    அறியாத தகவல்களை அறிந்து கொள்ள முடிந்தது. நல்ல பகிர்வு.

    ReplyDelete
  8. துலா ஸ்நானம் காவிரியில் ஒரு சில முறை வாய்த்திருக்கிறது.....

    தகவல்களும் படங்களும் அருமை.

    ReplyDelete