Monday, August 11, 2014

ஸ்ரீலட்சுமி ஹயக்ரீவ ஜெயந்தி


ஞானானந்தமயம் தேவம் நிர்மல ஸ்படிகாக்ருதிம்
ஆதாரம் ஸர்வ வித்யானாம் ஹயக்ரீவ முபாஸ்மஹே

ஸ்படிகம் போன்று நிர்மலமானவரும், ஞான சொரூபியானவரும், எல்லா கலை களுக்கும் ஆதாரமானவருமான ஹயக்ரீவரை வணங்குகிறேன்' 

 ‘ஓம் வாகீஸ்வராய வித்ம ஹே
ஹயக்ரீவாய திமஹி தன்னோ ஹம்ஸ ப்ரசோதயாத்’ 

என்ற ஹயக்ரீவ காயத்ரி மந்திரத்தை  தினமும் சொல்லி வந்தால், 
கல்விபில் கவனமும் நாட்டமும் அதிகரிக்கும்..

படிப்பில் மந்த நிலையில் உள்ளவர்கள், எவ்வளவு படித்தாலும் மறதி ஏற்படுபவர்கள் ஹயக்ரீவருக்கு விரதம் இருந்து அஹயக்ரீவருக்கு உகந்த ஸ்லோகத்தை சொல்லி வந்தால் நல்ல பலன் கிடைக்கும்.


















கல்விக்கு அதிபதியான சரஸ்வதி தேவியின்  குரு ஸ்ரீஹயக்ரீவ மூர்த்தி

அறியாமை எனும் இருளில் இருந்து ஞானம் எனும் ஒளியை நோக்கி அழைத்து செல்லும் ஞான ஆசிரியனாக ஹயக்ரீவர் அருள்புரிகிறார்

கல்விச் செல்வத்தோடு சேர்த்து பொருள் செல்வத்தை 
வழங்கும் விதமாக  தனது மடியில் லட்சுமி தேவியுடன்  
ஸ்ரீலட்சுமி ஹயக்ரீவராக அருள்புரிகிறார். 
ஹயக்ரீவ ஜெயந்தி ஆவணிமாத திருவோண 
நட்சத்தித்தன்று கொண்டாடப்படுகிறது
நவராத்திரியில் மஹாநவமி (சரஸ்வதி ஆவாஹனம்) 
அன்றும் ஹயக்ரீவருக்கு ஆராதனைகள் நடைபெறுகிறது
ஒவ்வொரு மாதமும் வரும் திருவோண 
நட்சத்திரத்தன்றும் ஸ்ரீஹயக்கீரவருக்கு பூஜை செய்யலாம். 
மஞ்சள் நிறம் ஸ்ரீஹயக்கீரவருக்கு உகந்தது. 

கையில் புஸ்தகத்தோடு காட்சி தரும்  ஹயக்ரீவர் முகம் 
குதிரை போன்றும் உடல் மனித உடலாகவும் இருக்கும். 

திருவோண நட்சத்திரத்தன்று விரதமிருந்து 
கடலைப்பருப்பை  வேகவைத்து வெல்லத்தூள் , நெய், ஏலம், 
வறுத்த முந்திரி சேர்த்து கலந்து  ஹயக்ரீவ பிரசாதம் தயார் செய்து, -
மஞ்சள் நிற பூக்களால் அர்ச்சித்து, பூஜை செய்யலாம். 
ஞானம் எனும் கல்விச் செல்வத்துக்கு அழிவே கிடையாது.  .  

கல்விச் செல்வத்தை வழங்க வழங்க, ஞானமும் கல்வியும் வழங்குபவருக்கு  அதிகரிக்கும்.  கடைசி வரை வரக்கூடியது கல்வி செல்வமாகும்

கல்வியிலும்,, இசை, நடனம் போன்ற கலைகளிலும் 
சிறந்து விளங்குவதற்கு ஞானத்தின் இருப்பிடமாக 
விளங்கும் ஹயக்ரீவரை வணங்கலாம்
படிப்பில் சற்று மந்தமாக இருப்பவர்கள், ஞாபக சக்தி குறைவாக உள்ளவர்கள், பேச்சு சரியாக வராதவர்கள் ஹயக்ரீவரை வணங்கினால் சகல குறைகளும் நீங்கி ஞானம் அதிகரிக்கும். 

செல்வாக்குடன் சொல்வாக்கும் நிறைந்து விளங்க   
ஹயக்ரீவரை வணங்கி வழிபட்டால் தடைகள், 
தடங்கல்கள் நீங்கி தொழில் சுபிட்சமாக நடக்கும்.
புதன்கிழமையன்றும், திருவோண நட்சத்திரத்திலும் ஹயக்ரீவருக்கு அபிஷேக ஆராதனைகள் செய்து ஏலக்காய் மாலை சாற்றி வழிபடஞானமும் அறிவும் மேம்படும். ஞாபக சக்தி கூடும்..
செங்கல்பட்டு அருகில் செட்டிப் புண்ணியம், 
கடலூர் அருகில் திருவந்திபுரம், 
பாண்டிச்சேரி அருகில் முத்தியால்பேட்டை ஆகியவை 
ஹயக்ரீவ ஸ்தலங்கள் ஆகும்

கடலூர் மாவட்டம் திருவந்திபுரத்தில் உள்ள தேவநாத சுவாமி கோயில்
 108 திவ்ய தேசங்களில் ஒன்றாகும். 

ஔஷத மலையில் ஸ்வாமி வேதாந்த தேசிகனுக்கு ஹயக்ரீவர் எப்படி காட்சி தந்தாரோ, அதே கோலத்தில் இங்கு இவரை தரிசிக்கலாம். 
.. 
குதிரை முகம் கொண்ட அசுரன் வேதங்களை அபகரித்துச் செல்ல, அரக்கனை வென்று வேதங்களை மீட்க திருமால் எடுத்த அவதாரமே ஹயக்ரீவ அவதாரம். 
வைணவப் பெரியாரான வேதாந்த தேசிகருக்கு கலை, 
ஞானம் அனைத்தையும் அருளியவர் ஹயக்ரீவர்

ஸ்ரீவித்யா உபாசகர்கள் ஹயக்ரீவரை குருவாக வணங்குவர். 

 ஹயக்ரீவர்- அகத்தியர் சம்வாதத்தில்தானே 
லலிதா சகஸ்ரநாமம் கிடைத்தது!

மத்வ சம்பிரதாயத்தவரான வாதிராஜர் ஹயக்ரீவ உபாசகர் ஹயக்ரீவ விக்ரகத்துக்கு பிரசாதம் நிவேதனம் செய்து வழிபட்டு,  அந்தத் தட்டை எடுத்து தலைமேல் வைத்தபடி அமர்ந்து கொள்வார். 

அப்போது ஒரு குதிரை அங்கு தோன்றி அவர் தோள்களின்
மேல் கால்களை வைத்துக் கொண்டு பிரசாதத்தை 
உண்டுவிட்டு மறைந்துவிடும். 
வாதிராஜர்மேல் பொறாமைகொண்ட சிலர் பிரசாதத்தில்  விஷத்தைக் கலந்துவிட்டதைஅறியாத வாதிராஜர் வழக்கம்போல் ஹயக்ரீவ விக்ரகத்துக்கு நிவேதனம் செய்துவிட்டு, பின்னர் தட்டை தலைமேல் வைத்துக்கொண் டார். 
குதிரையும் தோன்றி பிரசாதம்  தின்று விட்டு மறைந்தது. சற்று நேரத்தில் பார்த்தால், பஞ்சலோகத்திலிருந்த ஹயக்ரீவ விக்ரகம் நீலநிறமாகிவிட்டதாம்

விஷம் வைத்தவர்கள் உண்மையை உணர்ந்து அவரைப் பணிந்திட, மீண்டும் பழைய நிலையை அடைந்ததாம். அந்த ஹயக்ரீவ விக்ரகத்தை இன்றும் அவர்கள் மடத்தில் காணலாம்.
Hayagriva Avatar
Hayagreeva Saligrama

17 comments:

  1. வணக்கம்
    அம்மா
    கருத்துக்களும் படங்களும் சிறப்பாக உள்ளது பகிர்வுக்கு வாழ்த்துக்கள் அம்மா
    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
  2. ஸ்ரீ ஹயக்ரீவ ஸ்வாமியைப் பற்றிய பதிவில் மனம் ஒன்றியது.
    அழகிய படங்கள்.. மகிழ்ச்சி..

    ReplyDelete
  3. http://www.blogintamil.blogspot.in/2014/08/normal-0-false-false-false.html

    //முதல் இணைப்பு = “மணிராஜ் - நானிருக்க பயமேன்” இணைப்பிற்குள் சென்றால் அன்புச்சகோதரி ராஜராஜேஸ்வரியி அவர்களின் வலைப்பூ! என்னை கோவை – மேட்டுப்பாளையம் நாகசாய் மந்திருக்கு அழைத்துச் சென்று சேவிக்க வைத்துவிட்டார்! பாபாவின் லீலையே லீலை! நீங்களும் வலைப்பூவிற்குள் சென்று பகவானை தரிசித்துவாருங்கள்!//

    வலைச்சரத்தில் முதல் அறிமுகம் ! ;) பாராட்டுக்கள் + நல்வாழ்த்துகள்.

    ReplyDelete
  4. ஸ்ரீ லக்ஷ்மி ஹயக்க்ரீவர் ஜயந்தி
    பற்றிய மிக அருமையான பகிர்வு.

    >>>>>

    ReplyDelete
  5. இன்று சிரத்தையாக 1008 காயத்ரி
    மஹாமந்திர ஜபம் செய்து முடித்ததும்
    ஓடோடி வந்துள்ள முதல் பதிவு இது
    மட்டுமே.

    வேறெங்கும் தான் நான் அதிகமாகச்
    செல்வது இல்லை என்பதும்
    என் காயத்ரி அம்பாளுக்கே தெரியுமே !

    >>>>>

    ReplyDelete
  6. அழகழகான படங்கள் .... வழக்கம் போலவே

    >>>>>

    ReplyDelete
  7. அற்புதமான விளக்கங்கள்.

    சுவையான பல்வேறு புராணக்கதைகள்.

    >>>>>

    ReplyDelete
  8. ஞானானந்த மயம் ....
    ஸ்லோக ஆரம்பமே ஞானம்
    அளிப்பதாக உள்ளது.

    >>>>>

    ReplyDelete
  9. ஹயக்கிரீவர் பிரஸாதங்கள் தான் என்னை
    மிகவும் கவர்கின்றன.

    வறுத்த முந்திரி மிதக்க ஆஹாஹ்ஹாஹ்ஹா.
    இப்படி அடிக்கடி காட்டி வெறுப்பேற்றலாமா ....?

    தங்களின் திருக்கரங்களால் என்றாவது ஒருநாள்
    ஏதாவது ஒரு பிரஸாதம் ஒரு சிமிட்டா அளவு
    கிடைக்காத என்ற ஏக்கத்துடன் நானும் பல நாட்களாக .....

    ஆஹா, அதற்கென்ன தருகிறேன் ...
    இதென்ன பிரமாதம் என்று ஒரு
    வாயாவார்த்தை கூட கிடையாதே !

    போங்கோ உங்களுடன் நான்
    டூஊஊஊஊஊ ........ ;(((((

    >>>>>

    ReplyDelete
    Replies
    1. *****தங்களின் திருக்கரங்களால் என்றாவது ஒருநாள்
      ஏதாவது ஒரு பிரஸாதம் ஒரு சிமிட்டா அளவு
      கிடைக்காத என்ற ஏக்கத்துடன் நானும் பல நாட்களாக .....*****

      கிடைக்காத = கிடைக்காதா

      Delete
  10. தங்களுடன் உரிமையுடன் சண்டை போடக்கூட
    இப்போதெல்லாம் எனக்கு நேரமில்லாமல் உள்ளது.
    10-15 நாட்கள் போகட்டும். சேர்த்து வைத்து சண்டை
    போட்டுக்கொள்கிறேன்.

    >>>>>

    ReplyDelete
  11. அனைத்துக்கும் என் மனம் நிறைந்த நன்றிகள்.

    அன்பான இனிய நல்வாழ்த்துகள். பாராட்டுக்கள்.

    வாழ்க! வாழ்க!! வாழ்க!!!

    ;) 1365 ;)

    ooo ooo ooo

    ReplyDelete
  12. ஹயக்கிரீவரின் அவதாரம், அவரின் சிறப்பம்சம்கள், தகவல்கள், ஸ்லோகங்கள் அனைத்தும் மிக பயனுள்ளவையாக இருந்தன. பகிர்வுக்கு நன்றிகள்.

    ReplyDelete
  13. Parakalka Mutt, in Mysore, is associated with Sri Lakshmi Hayagriva. The idol there is said to have been given to Ramanujacharya by Saraswati herself, as she was pleased with his Bhasya.

    ReplyDelete
  14. லக்ஷ்மிஹயகிரீவர் பற்றிய செய்திகள் அறிந்து கொண்டேன். நன்றி பகிர்விற்கு.

    ReplyDelete
  15. மிக நல்ல பகிர்வு...
    வாழ்த்துக்கள் அம்மா.

    ReplyDelete
  16. thanks for info with hayagreeva pictures

    ReplyDelete