Tuesday, August 12, 2014

ஸ்ரீ .லக்ஷ்மி கடாட்சம்






ஸ்ரீலக்ஷ்மி வைகுண்டத்தில் மகாலக்ஷ்மியாகவும், 
இந்திரனிடத்தில் சொர்க்க லக்ஷ்மியாகவும், 
மன்னர்களிடத்தில் ராஜலக்ஷ்மியாகவும், 
வீரர்களிடம் தைரிய லக்ஷ்மியாகவும், 
குடும்பத்தில் கிரக லக்ஷ்மியாகவும் விளங்குகிறாள். 

மஹாலஷ்மி பாற்கடலில் தோன்றியவள்..உப்பின் பிறப்பிடம் கடல்

வெள்ளிக்கிழமைகளில்  உப்பு வாங்குதல் மிகவும் விஷேசம்..


Gajalakshmi


மஹாலக்ஷ்மிமலரின் அழகு. அருள் பார்வையுடன் திகழும் செல்வத்தின் தெய்வம். விஷ்ணு பிரியை. கிரியா சக்தி.

திருப்பாற்கடலில் இருந்து அமுதத்துடன் தோன்றியவள். அமுத மயமானவள். பொன்னிற மேனியுடன் கமலாசனத்தில் (செந்தாமரையில்) வீற்றிருக்கிறாள்.  நான்கு யானைகள் எப்போதும் நீராட்டுகிறது.

செல்வ வளம் தந்து வறுமையை அகற்றி அருள் புரிபவள்.

கஜலக்ஷ்மி  பாற்கடலில் இருந்து வெளிப்பட்டதும், அஷ்டதிக்கு கஜங்கள் எனப்படும் எட்டு யானைகள் தமது மனைவியரான பெண் யானைகளுடன், அவளுக்கு மங்கல நீராட்டின என்று புராணங்கள் கூறுகின்றன.

பல்லவர்கள் அமைத்துள்ள குடைவறைக்கோயில்களில் பலவற்றில், யானைகள் நீரை முகந்து நீராட்ட, தாமரை மலரில் வீற்றிருக்கும் திருமகளைக் காண முடியும்.

யானைகளின் பிளிறலை லக்ஷ்மி விரும்பிக்கேட்கிறாள் என வேதமந்திரமான ஸ்ரீசூக்தம் கூறுகிறது.

கோலக்ஷ்மி என்று பசுக்களை அழைக்கின்றனர்.
கிரகப்பிரவேசம் நடத்தும் போது, பசுக்களை வீட்டிற்குள் அழைத்துச் செல்வதன் மூலம், லக்ஷ்மி தேவி முதலில் செல்கிறாள் என்பது ஐதீகமாக உள்ளது.

அஷ்ட லக்ஷ்மி,ஆதி லக்ஷ்மி, மகா லக்ஷ்மி, தனலக்ஷ்மி, தானிய லக்ஷ்மி, சந்தான லக்ஷ்மி, வீர லக்ஷ்மி, விஜய லக்ஷ்மி, கஜலக்ஷ்மி, ஆகிய லக்ஷ்மியின் அம்சங்கள். .......        


16 விளக்குகள் நெய்யினால் ஏற்றி, மஹாலக்ஷ்மி அர்ச்சனைக்கு வில்வம் இலை, தாமரை பூ அல்லது வெள்ளி காசு , பூக்கள் குங்குமம், குபேரன் படம்  லஷ்மி படம், அர்ச்சனை செய்ய காசுகளை பயன்படுத்தி வெள்ளிக்கிழமைகளில் பூஜிப்பது விஷேசம்..


காயேன‌ வாசா ம‌ன‌சேந்திரியை வா புத்யாத்ம‌நா வா ப்ர‌க்ருதேஸ்வ‌பாவாத்
க‌ரோமி ய‌த்ய‌த்ச‌க‌ல‌ம் ப‌ர‌ஸ்மை நாராயணாயேதி ச‌ம‌ர்ப‌யாமி !!!




12 comments:

  1. தூய்மையும் ஒளியும் பொருந்திய இடங்களில் வீற்றிருப்பவள் மஹாலஷ்மி! மனிதர்களும் அகத்தூய்மை, புறத்தூய்மையுடன் இருக்க, மனிதர்களின் அகத்தினுள்ளும் இறைவனுடன் அம்பாளும் வீற்றிருப்பாள்! அவர்களின் வாழ்வினில் குறையேது! பரந்தாமனும் அம்பாளும் வீற்றிருக்கும் இடமல்லவா! ஓம் கிருஷ்ணா!

    கிருஷ்ணரின் பிறந்த நாள் வர இருக்கின்றது! அச்சாரமாக அம்பிகையின் அற்புதப் பகிர்வு! வாழ்த்துக்கள் சகோதரி!
    அபிராமி துணையால் அருளும் நிறைவும் பெற்று வாழ வாழ்த்துக்கள் சகோதரி!

    ReplyDelete
  2. லக்சஷ்மியின் அம்சங்களையும் கோலக்ஷ்மி பற்றியும் அறியத் தந்தமைக்கு அவள்அருட் கடாட்ஷம்அனைவருக்கும் கிட்டட்டும். மிக்க நன்றி ! தொடருங்கள் ....வாழ்த்துக்கள்

    ReplyDelete
  3. லஷ்மி கடாட்ஷம் பற்றி சிறப்பான பகிர்வு. அனைத்து தகவல்களும், படங்களும் அழகாக இருக்கின்றன . லஷ்மி கடாட்ஷம் உங்களுக்கும், உங்க குடும்பத்தினருக்கும் கிடைக்கட்டும். நன்றி

    ReplyDelete
  4. அஷ்ட லக்ஷ்மியும் அனைத்துப் படங்களும் அழகினாலேயே எம்மை வசீகரிக்கின்றது.
    இன்றும் அரிய பல தகவல்கள் அறிந்தேன்.
    அனைவருக்கும் அன்னையின் அருள் கிட்டட்டும்.
    வாழ்த்துக்கள் சகோதரி!

    ReplyDelete
  5. மகாலக்ஷ்மியைப் பற்றிய அத்தனை செய்திகளையும், சிறப்புகளையும் படத்துடன் விளக்கியிருப்பது அருமை..

    ReplyDelete
  6. ஸ்ரீ லக்ஷ்மி கடாக்ஷம் தங்களால் இன்று
    எனக்கும் கிடைக்கப்பட்டது. சந்தோஷம்.

    >>>>>

    ReplyDelete
  7. //ஸ்ரீ லக்ஷ்மி வைகுண்டத்தில்............
    ......................................................................
    ......................................................................
    .......................................................................
    குடும்பத்தில் கிருஹ லக்ஷ்மியாகவும்
    விளங்குகின்றாள் //

    அவளே நம்
    பதிவுலகில் ஸ்ரீ இராஜராஜேஸ்வரி என்கிற
    கம்பீரமான பெயரில் விளங்கி, தினமும் தன்
    பதிவினை தரிஸிக்க வருவோர்க்கெல்லாம்
    அருளை வாரி வாரி வழங்கி அள்ளி அள்ளித்
    தந்து அசத்தி மகிழ்விக்கின்றாளாக்கும் ! ;)

    >>>>>

    ReplyDelete
  8. மேலிருந்து மூன்றாவது படம் கொள்ளை அழகு
    தங்களின் தங்கத் தாமரைகளால் மட்டுமே ! ;)

    >>>>>

    ReplyDelete
  9. வெள்ளிக்கிழமைகளில்

    உப்பு வாங்க வேண்டிய தகவல்
    உப்பிப்போக வைத்து
    உவகை அளிக்கிறது.

    உப்பு வாங்கி
    உடனே காரசாரமாக
    உப்புமா கிண்டி சாப்பிட்டால்

    பரமானந்தமாக இருக்குமே !

    >>>>>

    ReplyDelete
  10. எனது இப்போதைய கிரியா சக்தியாகிய
    தங்களுக்கு என் வந்தனங்கள்.

    >>>>>

    ReplyDelete
  11. காயேன வாசா.....................
    ..........................சமர்ப்பயாமி.

    அதே அதே ! ;) ததாஸ்து !

    அனைத்துக்கும் என் மனம் நிறைந்த இனிய நன்றிகள்.
    அன்பான நல்வாழ்த்துகள். பாராட்டுக்கள்.
    வாழ்க! வாழ்க!! வாழ்க!!!

    ;) 1366 ;)

    ooo ooo

    ReplyDelete
  12. அருமையான படங்கள். யானைகாலில் கொலுசு அழகு.
    இலக்குமியின் கருணை பார்வை எல்லோருக்கும் கிடைக்கட்டும்.
    வாழ்த்துக்கள்.

    ReplyDelete