Friday, January 31, 2014

ஜோதியில் அருளும் ஸ்ரீ சௌந்தர்யபூஷணி




ஆனந்த மாய் என்அறிவாய் நிறைந்த அமுதமுமாய்
வானந்தமான வடிவுஉடை யாள்மறை நான்கினுக்கும்
தானந்த மான சரணார விந்தம் தவளநிறக்
கானந்தம் ஆடரங் காம்எம்பி ரான்முடிக் கண்ணியதே.

ஐம்பூத வடிவாகத் திகழ்பவள் அபிராமி. அமிர்தமாகவும், அறிவாகவும், ஆனந்தமாகவும் விளங்குகிறாள். வேதங்களாலும் அறிய முடியாத அம்பிகையின் திருவடித் தாமரைகள் திருவெண் காட்டிலே (சுடலையில்) திருநடமிடும் எம்பிரானின் தலை மாலையாக விளங்குகின்றன
துணையும் தொழுந் தெய்வ மும்பெற்ற தாயும் சுருதிகளின்
பணையும் கொழுந்தும் பதி கொண்ட வேரும் பனிமலர்பூங்
கணையும் கருப்புச்சிலையுமென் பாசாங்குசமும் கையில்
அணையும் திரிபுர சுந்தரியாவது அறிந்தனமே.

அழகிய மலரினை அம்பாகவும், இனிய கரும்பினை வில்லாகவும் , பாசமும் அங்குசமும் கரங்களில் பெற்றிருக்கும் திரிபுரசுந்தரியே! 
எமைப் பெற்ற தாயே! நீ வேதமாகவும் அவற்றின் கிளை (சாகை) களாகவும், துளிகளாகவும் (உபநிடதம்) அதன் வேராகவும் (பிரணவம்) விளங்குகிறாய் என்பதை அபிராமியின் தெய்வீக அருளால் அறிந்துணர்ந்தோம்.


ஸ்ரீசரஸ்வதி வெளிப்பட்ட தினம் தை மாதத்தில் வரும் வளர்பிறை பஞ்சமி  ‘வசந்த பஞ்சமி’ என்று கொண்டாடப்படுகிறது..!

கல்வி, இசை, நாட்டியம், நாடகம் மற்றும் அனைத்துக் கலைகளுமே ஸ்ரீசரஸ்வதியின் எழில் ரூபங்கள் என்று ஆகமங்கள் கூறுகின்றன.

நாகர்கோயில் பார்வதிபுரம் ஸ்ரீ ஐயப்பன் கோயில் அருகில் அமைந்துள்ள
ஸ்ரீ வனமாலீஸ்வரர் கோயிலில் பிரம்மா உருவாக்கித் தந்ததாகக் கூறப்படும்108 கிலோ எடையுள்ள சரஸ்வதி விக்கிரகம் உள்ளது.

பிரமிப்பைத் தரும் விதத்தில் தங்க சரஸ்வதி எழுந்தருளியுள்ளாள். 
சரஸ்வதியை வழிபடும் பக்தர்களுக்கு சிவப்பு நிறத்தினால் ஆன 
‘ரக்த சந்தனம்’ பொடி, பிரசாதமாக வழங்கப்படுகிறது.

சரஸ்வதி தியான ஸ்லோகம்
ஸரஸ்வதி நமஸ்துப்யம் வரதே காமரூபிணி
வித்யாரம்பம் கரிஷ்யாமி ஸித்திர் பவதுமே ஸதா

சதுர்புஜம் சந்த்ரவர்ணாம் சதுரானன வல்லபாம்
நமாமி தேவி வாணீத்வாம் ஆச்ரிதார்த்த ப்ரதாயினீம்
பாஹி பாஹி ஜகத்வந்த்யே நமஸ்தே பக்தவத்ஸலே
நமஸ்துப்யம் நமஸ்துப்யம் நமஸ்துப்யம் நமோ நம:

Rajeswari Jaghamani's profile photoRajeswari Jaghamani's profile photoRajeswari Jaghamani's profile photoRajeswari Jaghamani's profile photoRajeswari Jaghamani's profile photoRajeswari Jaghamani's profile photoRajeswari Jaghamani's profile photoRajeswari Jaghamani's profile photoRajeswari Jaghamani's profile photoRajeswari Jaghamani's profile photo

விளக்குப் பூஜையில் விளக்கு எரிந்து, அதனால் இருள் விலகி, அங்கு ஒளி பிரகாசிக்கிறது.விளக்கு தன்னையே அழித்துக்கொண்டு, மற்றவர்களுக்கு வெளிச்சம் தருகிறது. 

டெல்லியில் தென்னாட்டவர் நிறைந்தப் பகுதியான் ஜனக்புரி என்ற இடத்தில் ஜோதியில் அம்பாள் அருள் புரியும்  கோவில்இருக்கிறது. 

24 மணி நேரமும் விடாமல் தீபம் எரிந்த வண்ணம் இருக்க, அதை உன்னிப்பாகக் கவனிப்போமானால் அம்பாள் அங்கு அமர்ந்து அருள் புரிவது விளங்கும்.
test


அங்கு ஸ்ரீராஜராஜேஸ்வரியும் சௌந்தர்யபூஷணியாக நின்றபடி 
அருள் புரிகிறாள். அங்கு ஜோதியிலேயே அன்னையைதரிசிக்கலாம்..!


இருளில் உள்ள பொருள்களை தனது ஒளிவிடும் சுடரினால் 
விளங்கும்படி செய்வதனால் அது விளக்கு என்று ஆயிற்று.

தை மாத வெள்ளிக்கிழமை என்பது மகாலட்சுமியின் பரிபூரண 
அருளைப் பெறுகிற அற்புத நாள்.அம்பாளை வழிபட்டு சுக்கிர வார 
விரதம் மேற்கொள்ளுவதால் சகல சௌபாக்கியங்களும் ஏற்படும். 

மீனாட்சி கண்ணாலேயே கருணை செய்யும் மேன்மை மிக்கவள். 

விசாலாட்சி இகத்திற்கு இதமளிக்கும் சக்தியாகும்..

காமாட்சி இரு கண்களிலும் கருணை பொழிந்து நலன்களை 
அருளும் சகல சக்தியும் வாய்ந்த தெய்வமாக திகழ்கிறாள்..!

சுக்கிர வார விரதத்தால் சகல சக்தியும் வாய்ந்த அம்பாள் 
சகல சௌபாக்கியங்களும் அருள்வாள்.







17 comments:

  1. சௌந்தர்யபூஷனி அருமை அறிந்தேன் நன்றி சகோதரியாரே

    ReplyDelete
  2. அற்புதமான படங்கள் மூலம் தரிசனம் கிடைத்தது... நன்றி அம்மா...

    வாழ்த்துக்கள்..,.

    ReplyDelete
  3. சுக்கிர வார விரதத்தின் மகிமை அறிந்தேன் அம்பாளின் தரிசனங்களும் கிடைக்கப் பெற்றேன். நன்றி தொடர வாழ்த்துக்கள்....!

    ReplyDelete
  4. பல அருமையான தகவல்களை அழகிய படங்களுடம் பதிவு செய்து இருக்கிறீர்கள்.பாராட்டுக்கள்

    ReplyDelete
  5. கடைசி படத்தில் கரும்புக்காரியின் வெள்ளிக்கவசம் அழகோ அழகு!

    வெள்ளிக்கிழமை மகிமையில் விரதமும் ஒன்றல்லவா!

    ReplyDelete
  6. என் சோர்வையெல்லாம் போக்கியது அம்பாளின் தரிசனம்!

    ReplyDelete
  7. அம்மனின் படங்கள் விளக்கங்கள் மிகவும் அருமை அம்மா. அதிலும் சரஸ்வதி தேவி பற்றிய தகவல் புதிய தகவல். நன்றி அம்மா.

    ReplyDelete
  8. வெள்ளிக்கிழமையில் நிறைவான அம்மன் தரிசனம்.

    ReplyDelete
  9. கண்கள் குளிர்ந்தது படங்களாலே
    மனதும் குளிர்ந்தது பதிவினால்.

    ReplyDelete
  10. அம்பாள் தரிசனம் அருமை. மனதுக்கு நிறைவு தரும் பதிவு.
    பக்தி மனம் நிறைந்த பதிவை பகிர்ந்து கொண்டதற்கு நன்றி.

    ReplyDelete

  11. ’தை வெள்ளிக்கிழமை’யான நேற்று ஸகல செளந்தர்யபூஷணியாகக் காக்ஷியளித்த ஸ்ரீ இராஜராஜேஸ்வரி அம்பாளை, அதே அம்பாளின் பதிவினில் கண்டதும் பூரித்துப்போனேன்.

    >>>>>

    ReplyDelete

  12. விளக்கிற்கான
    விளக்கத்தினை
    விளக்கமாக
    விளக்கிச்சொல்லியுள்ளது

    மனதுக்கும்
    மூளைக்கும்
    ஜோதியாய்ப்
    பிரகாஸம்
    அளித்தது. ;)

    >>>>>

    ReplyDelete
  13. கண்ணாலேயே கருணை செய்யும் மீனாக்ஷி ;)

    இகத்திற்கு இதமளிக்கும் விசாலாக்ஷி ;)

    இரு கண்களாலும் கருணை மழை பொழிபவள் காமாக்ஷி ;)

    இவை அனைத்தையும் ஒருங்கே அளித்து தினமும் எங்களை மகிழ்விப்பவர் இந்தப்பதிவர் ஸ்ரீ இராஜராஜேஸ்வரி அம்பாள் எனவும் சொல்லலாம் தானே ! ;)

    >>>>>

    ReplyDelete

  14. பச்சைக்கலர் புட்டாப்புடவையில் கையில் கரும்புடன் காட்சியளிக்கும் காமாக்ஷி அம்மன் படம் நன்னாயிருக்கு ;)

    ஞான சரஸ்வதிக்குக்கீழ் வட்டவடிவமான படங்களாகப் பத்துத் தாமரைகளை வரிசையாகக் காட்டியுள்ளது ஜோராக உள்ளது.

    சொட்டுச்சொட்டாக ரஸித்து ருசித்து ரோஸ் மில்க் அருந்துவதுபோல மனதுக்கு மகிழ்வளிக்கிறது.

    >>>>>

    ReplyDelete
  15. ஜோதியில் அருளும் ஸ்ரீ செளந்தர்யபூஷணி அம்பாளுக்கு என் அன்பான வந்தனங்கள்.

    அருமையான அழகான படங்களுடன் கூடிய அற்புதமான பதிவுக்குப் பாராட்டுக்கள், வாழ்த்துகள், நன்றிகள்.

    o o o o o

    ReplyDelete
  16. MISSING COMMENT :

    5 க்கு 2 பழுதில்லை என்பார்கள். 5க்கு நாலாகவே எனது கமெண்ட்ஸ் வெளியிடப்பட்டுள்ளன. மிக்க மகிழ்ச்சி. ஆனாலும் இன்னொன்று காணாப்போச்சே ! ;) நன்னாத்தேடிப் பாருங்கோ, ப்ளீஸ்.

    இதோ அதன் நகல்:

    பச்சைக்கலர் புட்டாப்புடவையில் கையில் கரும்புடன் காட்சியளிக்கும் காமாக்ஷி அம்மன் படம் நன்னாயிருக்கு ;)

    ஞான சரஸ்வதிக்குக்கீழ் வட்டவடிவமான படங்களாகப் பத்துத் தாமரைகளை வரிசையாகக் காட்டியுள்ளது ஜோராக உள்ளது.

    சொட்டுச்சொட்டாக ரஸித்து ருசித்து ரோஸ் மில்க் அருந்துவதுபோல மனதுக்கு மகிழ்வளிக்கிறது.

    >>>>>


    ReplyDelete
  17. ஹைய்யா !

    இப்போ அஞ்சுக்கு ஆறாக !

    ஆரஞ்சாக !!

    ஆரஞ்சு ஜூஸாக !!!

    மிக்க நன்றி ;)))))

    ReplyDelete