Thursday, January 9, 2014

‘முத்தமிழ் விழா’ -‘அரையர் சேவை’



வைகுந்தம் புகுதலும் வாசலில் வானவர்
வைகுந்த தமர் என்று எமதிடம் புகுதென்று
வைகுந்தத் தமரரும் முனிவரும் வியந்தனர்
வைகுந்தம் புகுவது மண்ணவர் விதியே

என்பது  ‘திருவாய்மொழி’
பகல் பத்துக்கும் இராப் பத்துக்கும் இடையே உள்ள நாளே 
வைகுண்ட ஏகாதசியாக அமைகிறது. 

‘வைகுண்ட ஏகாதசி’ தொடங்கி பத்து நாட்கள் திருவாய்மொழி ஓதி இறுதி நாளில் நம்மாழ்வார் பரமபதம் எய்தும் காட்சியை, நிகழ்த்திக் காட்டுவர். 

 திருவரங்கத்தில் திவ்வியப் பிரபந்த அத்யயனத் திருவிழாவின் நடுநாயக நாளாக அமைவதே வைகுண்ட ஏகாதசியாகத்திகழ்கிறது..!

அந்நியர் படையெடுப்புக் காலத்தில் திருப்பதியிலும், யாரும் அறியா வண்ணம் பத்து ஆண்டு காலம் இருந்திருக்கிறார் திருவரங்கன். 

அந்த வரலாற்றுச் செய்தியை அடிப்படையாகக் கொண்டு திருப்பதியிலும் அத்யயன உற்சவம்  நடத்தப்படுகிறது. 

ஸ்ரீவைணவத் தலங்கள் அனைத்திலுமே அத்யயன உற்சவமும், ஸ்ரீவைகுண்ட ஏகாதசித் திருநாளும் பக்தி சிரத்தையுடன் கொண்டாடப்பெறுகிறது.

வைகுண்ட ஏகாதசி - நம்மாழ்வார் பரமபதம் அடைந்த திரு நாளாகும்.

ஆழ்வார்கள் காலத்துக்கு முன்னர் திருவரங்கம் பெரிய கோயிலில், வைகுண்ட ஏகாதசியன்று வடமொழியில் மறைகளை செவிமடுத்து, பரமபத வாயில் திறப்பு விழாவை நடத்தி வந்தது..,

அதை ஈடு செய்ய தமிழ் வேதங்களை அரங்கன் செவிமடுக்க... இப்போதைய ‘அரையர் சேவை’ ஏற்பட்டது.
ஒன்பதாம் நூற்றாண்டில் தமிழகத்தில் காட்டுமன்னார் கோவிலில் தோன்றிய நாதமுனிகள் பெரும் தவமியற்றி, யோக நெறியில் நின்று நம்மாழ்வாரிடமிருந்து மறைந்த நாலாயிர திவ்விய பிரபந்தத்தைப் பெற்று, பாடல்களுக்கு இசையமைத்து, தாளம் வழங்கி ‘முத்தமிழ்’ ஆக்கி நாடெங்கும் பரவச் செய்தார்.
100333780brwdn8lu
வைணவர்கள் அறிய வேண்டிய முக்கிய மந்திரங்களை மனதில் கொண்டு நாலாயிர திவ்விய பிரபந்தத்தை முறைப்படுத்தி, தொகுத்து அளித்தார்.

நாதமுனியின் பேரன் ஆளவந்தார்.

ஒப்பற்ற சிஷ்யராகவும், உலகப் புகழ்பெற்ற ஆசிரியராகவும் விளங்கிய பகவத் ராமானுஜரோடு இணைந்து, ஆயிரங்கால் மண்டபத்தில் பல்லாயிரம் மக்கள் அரங்கனோடு இணைந்து அனுபவிக்கும் வகையில் இந்த ‘அத்யயன’ உற்சவத்தை திருவரங்கத்தில் மீண்டும் அமைத்தனர்.

அப்போது திருமங்கையாழ்வாரை நினைவுகூர்ந்து சிறப்பிக்க அவரது திருநெடுந்தாண்டகத்தை முதன்மைப்படுத்தினர்.
திருமங்கையாழ்வார் காலத்தில், நம்மாழ்வார் திருவாய்மொழிப் பாடல்களை இசையுடன் ஓதி பத்து நாட்கள் மட்டுமே விழா எடுத்தனர்.

திருமங்கையாழ்வார் நெல்லை மாவட்டம் ஆழ்வார்திருநகரில் கோயில் கொண்டுள்ள நம்மாழ்வார் திருமேனியை ஸ்ரீரங்கத்துக்கு எழுந்தருளச் செய்து விழா கொண்டாடினார்.
பின்னர் திருவரங்கத்திலேயே ஆழ்வார்களுக்கு விக்கிரகங்கள் அமைத்துக் கோயில் எழுப்பி, எழுந்தருளச் செய்தனர்.

திருவிழாவின்போது அவர்களது பாடல்களை ‘அரையர் சேவை’யாக நடத்தினர். ‘அரையர்’ என்ற சொல் முத்தமிழ் வித்தகரைக் குறிக்கும். ‘அத்யயன உற்சவம்’ என்பது ‘முத்தமிழ் விழா’ எனத்திகழ்கிறது ..!
இப்போது திருநெடுந்தாண்டகம் தொடங்கி பத்து நாட்கள் பகல்பத்து எனவும், நம்மாழ்வாரின் திருவாய்மொழித் திருநாள் இராப் பத்து எனவும் கொண்டாடப்படுகிறது.
dsc009001dsc00871


[Nambi+procession.jpg]

13 comments:

  1. வணக்கம்
    அம்மா.

    தங்களி பக்கம் வந்தால் ஒரு இறை தரினம் கிடைத்த ஒரு திருப்தி. அழகான பாடல்கள் அதற்கு உரிய வகையில் விளக்கங்கள் படங்கள் எல்லாம் நன்றாக உள்ளது... வாழ்த்துக்கள் அம்மா.

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
  2. அரையர் சேவையை ஆரம்பித்து வைத்த நாதமுனிகள் திருநாடு அடைந்த இடம் என்று கருதபடும் ’சொர்க்கபள்ளம்’ சென்று தரிசனம் செய்தோம் ஜனவரி 1ம் தேதி.
    நாதமுனி திருவடி போற்றி போற்றி.!
    வாழ்த்துக்கள்.
    நன்றி.

    ReplyDelete
  3. Thank you for giving us Divya Dharshan of Lord Sri Ranganatha through your pictures.. The origins and significance of the Araiyar Sevai has been explained beautifully..

    ReplyDelete
  4. சிறப்பான தகவல்களுடன் அற்புதமான படங்களின் மூலம் தரிசனம் கிடைத்தது அம்மா... நன்றி...

    வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  5. அரையர் சேவை படங்கள் அத்தனையும் மிக அருமையாக உள்ளன.

    தங்களின் இந்தப்பதிவின் மூலம் இன்றும் எனக்கு திவ்ய தரிஸனம் கிடைத்துள்ளது.

    நேரில் ஸ்ரீரங்கம் கோயிலில் அந்த மிகப்பெரிய கொட்டகையில் ஸ்வாமிக்கு பலரும் மாற்றி மாற்றி அரையர் சேவை பாடிய நிகழ்ச்சிகளை பலதடவை கண்டு மகிழும் வாய்ப்புகள் கிடைத்துள்ளன.

    அவைகளெல்லாம் நினைவுக்கு வந்து மகிழ்வளித்தன. சந்தோஷம் ;)

    ReplyDelete
  6. தங்களின் நாளைய பதிவு எண்ணிக்கை: 1 1 5 0

    அதற்கு என் அட்வான்ஸ் நல்வாழ்த்துகள். ;)))))

    ReplyDelete
  7. முத்தமிழ் விழாவின் பொருளுணர்த்தி சத்தான பகிர்வு தந்த தோழிக்கு
    என் மனமார்ந்த பாராட்டுக்களும் வாழ்த்துக்களும் .

    ReplyDelete
  8. அரையர் சேவை பற்றிய விளக்கமான செய்திகள்.
    அதுவும் அழகிய படங்களுடன்!.. மிக்க மகிழ்ச்சி!..

    ReplyDelete
  9. அறையர் சேவை பற்றிய விளக்கங்கள் மிக அருமை. குறிப்பாக வைகுண்ட ஏகாதேசி பற்றிய விளக்கங்களை இன்றைக்கு தெரிந்து கொள்ள முடிந்தது. பகிர்ந்துக்கொண்டதற்கு நன்றி.

    ReplyDelete
  10. அரையர் சேவை நேரில்கண்டதில்லை. இருந்தால் என்ன.? உங்கள் பதிவைப் பார்த்துவிட்டேனே. வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  11. சிறப்பான பகிர்வு..
    பகல்பத்து உற்சவத்தில் எட்டாம் மறும் ஒன்பதாம் நாட்களான நேற்றும் இன்றும் சென்று நம்பெருமாளையும் அரையர் சேவையும் கண்டு வந்தேன்...

    ReplyDelete
  12. அரையர் சேவை பற்றிய செய்திகள் அறிந்தேன். மோகினி அலங்காரம் கண்ணாரக் கண்டேன் . நன்றி.

    ReplyDelete
  13. அரையர் சேவை பற்றிய தகவல்களும் படங்களும் மிக அருமை. பகிர்ந்து கொண்டதற்கு நன்றி.

    ReplyDelete