Monday, January 13, 2014

பூ பூக்கும் மாதம் தை மாதம்.







பூ பூக்கும் மாசம் தை மாசம்ஊரெங்கும் வீசும் பூவாசம்
மஞ்சள மஞ்சள எடு தங்கச்சி 
புஞ்சையும் நஞ்சையும் இந்த பூமியும் சாமியும் இனி
நம் கட்சி நம் கட்சி நம் கட்சி

மார்கழியின் பனி மூட்டம் விலகி,பூமி எங்கும் புத்துணர்வு பொங்க மலர்ச்சியாக வண்ணவண்ண மலர்களால் மலர்ச்சியுற்று  வாழ்வைப்பிரகாசிக்கவைக்கும் புத்துணர்வு பொங்கிவரும் மாதமான
தை மாதத்தில்  தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகை சிறப்பாக கொண்டாடப்படுகிறது.

அறுவடை செய்யும் மாதம் தை,
கதிரவன் தெற்கிலிருந்து வடக்கு நோக்கி பயணம் செய்யும் மாதம் தை ,
பனி காலம் முடிந்து இளவேனில் பருவம் துவங்கும் மாதம் தை
பூ பூக்கும் மாதம் தை,
தை மாதத்தில் வரும் முழு நிலவு (பௌர்ணமி) மிகவும் வெளிச்சமாக இருக்கும், அதனை அறுவடை நிலா என்று அழைப்பார்கள். 
அந்த நிலவொளியில் நெல் கதிர் அறுவடை நடக்கும். 
தை மாதத்தில் வயல்வெளி எங்கும் கதிர்கள் விளைந்து அறுவடைக்கு தயாராக இருக்கும்,
தைப்பொங்கல் தினத்துக்கு முந்தைய நாளான போகியன்று வீட்டுக்கு வெள்ளைய டித்து, வேண்டாத பொருட்களை அகற்றி சுத்தப்படுத்துவது வழக்கம்.
வீடு மட்டுமல்ல மனதில் இருக்கும் தீய எண்ணங்களும், தவறான எண்ணங்களும் நீக்கப்படவேண்டும் என்பது இதில் உள்ள தாத்பர்யமாகும்.

இயற்கைக்கும், இறைமைக்கும் நன்றி நவில்கின்ற பொன்னாளாக பொங்கல் நாளைத் தமிழர் திருநாள் பொங்கல் உலகெங்கும் உள்ள தமிழர்கள் குதூகலமாகக் கொண்டாடுகிறார்கள்

போகி என்பது மார்கழிக் கடைசி நாளில் கொண்டாடப் படுகிறது போகிப் பொங்கல். 'பழையனக் கழித்து, புதியன புகவிடும் ' திருநாள். பழையவற்றையும், உபயோகமற்றவையும் விட்டெறியும் நாள்..

“”போக புத்தியை - தாழ்ந்த உலகியல் ஆசைகளை - ஞான அக்னியால் எரிக்க வேண்டும்” என்ற கருத்தே போகிப் பண்டிகையின் மூலம் உணர்த்தப்படுகிறது.

போகி என்ற இந்திரனுக்கு வணக்கம் செய்வது போகிப் பண்டிகை. இந்திரன் மேகங்களை இயக்குபவன். மேகங்களே வேளாண்மைக்குத் தேவையான நீரைப் பொழிகின்றன. மழை தெய்வமான இந்திரனை வணங்கும் நாளாகப் போகிப் பொங்கல் அமைகிறது..!

வேப்பிலை, பூளைப்பூ, ஆவாரம் பூ  ஆகியவற்றை தோரணமாக கட்டி வீட்டு மூலைகளில் தொங்க விட்டு மங்கல வாழ்வுதனை மகிழ்ச்சியோடு துவங்கும் காப்புக் கட்டுகிறோம் ..!
ஆவாரம் பூவை ‘பொங்கல் பூ’ என்று அழைக்கின்றனர்.

வேப்பிலையும், பூக்களும் கிருமி நாசினியாக செயல்படுவதால், வீட்டை சுத்தப்படுத்தியதும் ஆங்காங்கே கட்டி வைப்பார்கள்.

வீட்டுக்கு முன் வண்ண கோலமிட்டு, களிமண் பிடித்து அதில்
 ஆவாரம் பூவை செருகி வைப்பார்கள்.

நோய் நொடிகளும், துஷ்ட தேவதை களும் வீட்டில் அண்டாமல் இருக்க வேண்டும் என்ற நம்பிக்கையில் இந்த காப்பு கட்டும் நிகழ்ச்சி தொன்று தொட்டு நடந்து வருகிறது.

ஆவாரை பூத்திருக்க சாவரைக்கண்டதுண்டோ  என்பது 
தமிழ் மூதாட்டி ஔவையின் திருவாக்கு..!

ஆவாரம் பூ சிறந்த கிருமி நாசினி .. விதை சித்த மருந்துகளில் 
முக்கிய இடம் பிடித்துள்ளது.

மார்கழி,  தை மாதம் தான் ஆவாரம் பூக்களின் சீசன்.

தைப்பொங்கலை வரவேற்கும் விதமாக மலை மற்றும் காடுகளில் ஆவாரம் பூ செடிகளில் பூக்கள் பூத்துக் குலுங்கி மஞ்சள் வண்ணத்தில் மங்களகரமாக காட்சி அளிக்கும்

காணும் பொங்கல் தினத்தில் பூப்பறி திருவிழா என்ற பெயரில் உற்றார், உறவினர்களுடன் மேட்டூர், ஒகேனக்கல் காடுகளுக்கு சென்று 
ஆவாரம் பூக்களை பறிக்கும் நிகழ்ச்சியும் நடைபெறும்..!


வீட்டுக்கூரைகளிலும் மூலைக்ளிலும் பொதிந்து வைக்கப்படும் கூரைப்பூவில் ஆறு விதமான தாவரங்கள்   ஒவ்வொன்றுக்கும் பல்வேறு குணம் உண்டு.

"மா இலை' காற்று மண்டலத்தில் ஆக்சிஜன் செறிவை அதிகப்படுத்தி காற்றை சுத்தப்படுத்தும், 

"கூரைப்பூ' - கண்ணுப்பிள்ளைப்பூ - பூளைப்பூக்கள்  பூச்சிகள் பிரவேசத்தை தடுக்கும், சீரான உடல் நலத்திற்கும்  விஷ முறிவுக்கு உதவும்.

"வேம்பு இலை' நோய் எதிர்ப்பு தன்மை கொண்டது, 
கொசுக்களை தடுக்கும். 

"ஆவாரை பூத்திருக்க, சாவாரை கண்டதுண்டோ' என்ற முன்னோர் மொழிக்கேற்ப "ஆவாரம் பூ', சர்க்கரை நோய், தோல் வியாதிகளை தடுக்கும்.

"தும்பைச் செடி' மார்கழி பனி முடிந்து, கோடை துவங்குவதால் ஏற்படும் காலநிலை பிணிகளை குணமாக்கும். 
"பிரண்டை' வயிற்றுப் புண் நீக்கும், செரிமானத்திற்கு உகந்த சிறப்புகள் கூரைப்பூ. ஆறு தாவரங்களையும், மஞ்சள் துணியில் கட்டி, வீட்டின் முன் தொங்கவிட்டால், "மங்கலம், பாதுகாப்பு, ஆரோக்கியம்,' கிடைக்கும் என, நம் முன்னோர்கள் பொக்கிஷமாக போற்றியுள்ள்னர்..! 
கிராமங்களில், "அம்மை, அக்கி, மஞ்சள் காமாலை,' நோய்களிலிருந்து 
பாதுகாக்க, கூரைப்பூக்களை இன்றும் பயன்படுத்தி வருகின்றனர். 

ஆங்கில மருந்துகளுக்கு அடங்காமல், ஆட்டி வைக்கும் நோய்கள் வந்த பிறகு தான், பாட்டி வைத்தியம், நாட்டு வைத்தியத்தை தேடிக் கொண்டிருக்கிறோம்.
ஆம், நாமே தொலைத்து, நாமே தேடிக் கொண்டிருக்கும் மருத்துவ புத்தகங்களில், "கூரைப்பூவின்' பக்கமும் ஒன்று.

"மலர்ச் செண்டு' கொடுக்கும் நவீனத்தில் இருந்தாலும், 
நம் பாரம்பரியத்தை பாதுகாக்கும் கடமையை உணர்ந்து, 
கூரைப்பூ பயன்படுத்தி பலனடைவோம் ..!

27 comments:

  1. அருமையான பகிர்வுக்குப் பாராட்டுக்களும் உங்களுக்கும்
    உங்கள் குடும்பத்தினர் அனைவருக்கும் என் இனிய பொங்கல்
    திரு நாள் வாழ்த்துக்கள் தோழி !

    ReplyDelete
  2. அனைவருக்கும் இனிய பொங்கல் நல் வாழ்த்துக்கள்!..

    ReplyDelete
  3. அறியாதன பல அறிந்தோம்
    பொங்கல் சிறப்புப் பதிவு வெகு சிறப்பு
    பகிர்வுக்கும் தொடரவும் நல்வாழ்த்துக்கள்

    தங்களுக்கும் தங்கள் குடும்பத்தார் அனைவருக்கும்
    இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்

    ReplyDelete
  4. பல வித பூக்களின் பயன்கள் அறிந்து வியந்தேன் இயற்கையின்
    ஏற்பாட்டை எண்ணி எண்ணி .
    அருமையான தொகுப்பு. நன்றியும் இனிய பொங்கல் நல வாழ்த்துக்களும் !

    ReplyDelete
  5. போகிப்பண்டிகையின் விளக்கம் - தெரியாத ஒரு புது விளக்கம். நன்றி.

    ReplyDelete
  6. கூறைப்பூக்கள் மாதிரி இன்னும் எத்தனை,எத்தனையோ பாட்டி வைத்தியங்களை நாம் தொலைத்திருக்கிறோம். தொலைத்ததை,எவ்வாறு தேடிக்கண்டுப்பிடிக்க போகிறோமோ???

    ReplyDelete
  7. அருமையான பதிவு போகிப் பொங்கலையும், பூக்களின் புதுமைகளையும் அறிந்து ஆச்சரியமாக இருக்கிறது.
    தொலைத்து விட்டு தேடுவதை நினைத்தால் வருத்தமாகவும் இருக்கிறது.
    மிக்க நன்றி ....! உங்கள் அனைவருக்கும் என் இனிய பொங்கல் வாழ்த்துக்கள் உரித்தாகட்டும்......!

    ReplyDelete
  8. மிகவும் அருமையான விளக்கம் அம்மா... வாழ்த்துக்கள்...

    தித்திக்கும் தைப்பொங்கல் மற்றும் உழவர் திருநாள் நல்வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  9. தெரியாத பலவிடயங்கள் அறிந்துகொண்டேன். ஊரில் ஆவாரம்பூ பறித்த நினைவுகள் நெஞ்சினில்.
    உங்களுக்கும்,உங்க குடும்பத்தவர்களுக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  10. பூ வெனப்
    பூரிக்க
    வைக்கும்
    தலைப்’பூ’.

    >>>>>

    ReplyDelete
  11. மனதில்
    தைக்கும்
    ”தை”க்கான
    அழகான
    வரவேற்’பூ’.

    >>>>>

    ReplyDelete
  12. அசத்தலான
    படங்களின்
    தொகுப்’பூ’.

    >>>>>

    ReplyDelete
  13. தங்களுக்கும் தங்கள் குடும்பத்தார் அனைவருக்கும் என் மனம் நிறைந்த இனிய மகர சங்கராந்தி + பொங்கல் திருநாள் நல் வாழ்த்துகள். ;)))))

    >>>>>

    ReplyDelete
  14. பூப்பூவாய் என் மனதை மயக்கிடும் தங்களின் இந்தபதிவுக்குப் பாராட்டுக்கள், வாழ்த்துகள் நன்றிகள்.

    >>>>>

    ReplyDelete
  15. உலகத்தார் அனைவரும் உல்லாசமாக ‘தை’த்’தை’ என குதூகலமாகக் குதித்து மகிழட்டும்.

    என்றும் அன்புடன் VGK

    oooooo

    ReplyDelete
  16. தைமாதப் பொங்கலுக்கு தாய் தந்த செல்வமிது...

    உங்களுக்கும், உங்கள் குடும்பத்தாருக்கும், மற்றும் நம் வாசக நண்பர்கள் அனைவருக்கும் பொங்கல் நல் வாழ்த்துகள்.

    ReplyDelete
  17. கையில் அக்னி படம் சூப்பர்.

    ReplyDelete
  18. அது எப்படிங்க... பொங்கல் வாழ்த்துச் சொல்லும் பதிவை இவ்வளவு அட்டகாசமா வண்ணக்கோலங்களாக அள்ளிவீசுறீங்க...?
    ரொம்ப அருமை. தங்களுக்கும் தங்களின் அன்பான குடும்பத்தினர், நண்பர்களுக்கும் என் இனிய உழவர் திருநாள் மற்றும் தமிழர் திருநாள் வாழ்த்துகள் - நா.முத்துநிலவன்

    ReplyDelete
  19. படங்களும் பதிவும் அருமை!

    உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்!!

    ReplyDelete
  20. தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும் இனிய பொங்கல் நல் வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  21. தங்களுக்கும் தங்களது குடும்பத்தார்க்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துகள் !!!

    ReplyDelete
  22. இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  23. சின்னம் சிறுமியாய் அண்ணனுடன் சேர்ந்து ஓட்டு
    வீட்டின் ஏறவானத்தில் பூ சொரிகிய நாட்கள் நீணைவுக்கு வருகிறது
    தோழி

    ReplyDelete
  24. வழக்கம் போல சிலிர்ப்பான படங்கள் .. இனிய தமிழ்ப் புத்தாண்டு மற்றும் பொங்கல் நல்வாழ்த்துக்கள்

    ReplyDelete
  25. அருமையான பூ பூக்கும் மாதம் தைமாதம்.

    பாடல். பூக்கள், மற்றும் வேப்பிலை, ஆவரபூ பற்றிய விளக்கம் அருமை. இந்த ஊரில் பூளைப்பூ கிடைக்காது. அதனால் வேப்பிலை, மாவிலை சாமந்தி பூவைத்து கட்டிவிடுவேன் வாசலில்.
    வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  26. பூ வனம் என்றாலே அதற்கென்றே வாய்த்த தனி அட்ராக்ஷன் தான்!
    அன்பான பொங்கல் வாழ்த்துக்கள்.

    ReplyDelete