Friday, December 7, 2012

தனமழை வர்ஷிக்கும் ஸ்ரீஸ்வர்ணாகர்ஷன பைரவர்








ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் க்லீம் ஸ்வர்ண பைரவாய
ஹூம்பட் ஸ்வாஹா

ஓம் நமோ பகவதே சுவர்ணாகர்ஷண பைரவாய
தன தான்ய வ்ருத்தி கராய சீக்ரம் ஸ்வர்ணம்
தேஹி தேஹி வச்யம் குரு ஸ்வாஹா.


சுவர்ண பைரவர் சிவபெருமானின் 64 மூர்த்தங்களிலும் வேறுபட்டவர். 


ஓம் பைரவாய வித்மஹே ஹரிஹரப்ரம்ஹாத்மகாய தீமஹி
தன்னோ : ஸ்வர்ணா கர்ஷணபைரவ ப்ரசோதயாத்
என்னும் ஸ்வர்ணாகர்ஷண பைரவர் காயத்ரியை 21 முறை சொல்லி  
ஸ்வர்ணாகர்ஷண பைரவர் 12 நாமாக்களான 
ஸ்வர்ணப்ரத
ஸ்வர்ணவர்ஷீ
ஸ்வர்ணாகர்ஷண பைரவ
பக்தப்ரிய
பக்த வச்ய
பக்தாபீஷ்ட பலப்ரத
ஸித்தித
கருணாமூர்த்தி
பக்தாபீஷ்ட ப்ரபூரக
நிதிஸித்திப்ரத
ஸ்வர்ணா ஸித்தித
ரசஸித்தித
 என்று நம்பிக்கையுடன் கூறி பைரவரை வழிபடுவர்களுக்கு பைரவர் பொற்குவியலைக் கொடுப்பார்.


ஸ்ரீசொர்ண பைரவர் மூலமந்திரம்:

ஓம் ஏம் ஐம் க்லாம் க்லீம் க்லூம்
ஹ்ராம் ஹ்ரீம் ஹ்ரூம் சகவம்ஸ
ஆபதுத் தாரணாய அஜாமிள பந்தநாய 
லோகேஸ்வராயஸ்வர்ணாகர்ஷண பைரவாய 
மமதாரித்ரிய வித்வேஷணாய
ஓம் ஸ்ரீம் மஹா பைரவாய நமஹ

பைரவருக்கு க்ஷேத்திரபாலர் என்னும் பெயரும் உண்டு. 
க்ஷேத்திரங்களைக் காப்பவர் என்ற பொருள். 
சிவன் கோயிலின் பாதுகாவலராக பைரவரே விளங்குகிறார். 
கிரகங்கள் அனைத்தையும் தன் கட்டுப்பாட்டில் வைத்திருப்பவர்  பைரவர்.. 
அனைத்து கிரகங்களுக்கும் அதிபதியாகவும் ,  சனி பகவானுடைய  குருவாகவும் திகழ்கிறார்...

ஸ்வர்ணாகர்ஷண என்றால் எளிதில் கவரக்கூடிய என்று பொருள். 
இவர் செந்நிற மேனியையும் அன்று மலர்ந்த தாமரை மலர் முகம், பொன்னிற சடை, முடியில் பிறைச்சந்திரன், கரங்களில் தாமரை, அமுத கும்பம், மணிகள் பொதிந்த சங்கம், அபயம், வரதத்தோடு பொன் சொரியும் குடத்தை ஒரு கரத்தால் தாங்கி, மறுகரத்தால் தம்மை தழுவும் ஆதி சக்தியை ஒரு புறத்துத் தழுவியவர் என ஆகமம் கூறுகிறது. 

ஸ்வர்ணாகர்ஷண பைவர மூர்த்தி அம்பாளுடன் சேர்ந்து அருள்பாலிப்பார். பக்தர்களுக்கு சகல சௌபாக்கியங்களும் அருளும் அம்பிகை 
மகா ஸ்வர்ண பைரவி. 
பொன் சொரியும் குடம் ஏந்தி அபயம் தரும் முத்திரை கொண்டு ஸ்வர்ண பைரவருடன் இணைந்து அருள்பாலிக்கிறார். 
வாழ்க்கை காத்து செல்வச் செழிப்பை வழங்குபவர். 
ஸ்வர்ணாகர்ஷண பைரவரை வடக்கு திசை நோக்கி அமர்ந்து வழிபடுவது சிறப்பு. 
அஷ்டமிஅன்று,அஷ்ட லட்சுமிகளே பைரவ வழிபாட்டில் ஈடுபடுவதால் அஷ்ட லட்சுமிகளே வழிபடும் அந்த அஷ்டமி நன்னாளில்,நாம்  ஸ்ரீபைரவரை வணங்கிவந்தால்,அஷ்ட ஐஸ்வர்யங்களும் கிடைக்கும்.
தேய்பிறை அஷ்டமி,குறிப்பாக கார்த்திகை மாத தேய்பிறை அஷ்டமி பைரவ வணக்கத்திற்கு மிகவும் சிறந்தது.
அச்சமூட்டும் வடிவமாகவும், காக்கும் கடவுளாகவும், வணங்கப்படும் பைரவர் சாந்தம் தவமும் முகத்தினராய் செல்வத்தை வாரி வழங்கும் வள்ளலாய் காணும்  சொர்ண பைரவரின் ரிஷிமூலம் சிதம்பரம் பொன்னம்பலப் பெருமானாம் ஸ்ரீ நடராஜ மூர்த்தமே சொர்ண பைரவரின் வடிவமாகப்போற்றப்படுகிறது .... .
ஆகாயத் தலமான  சிற்றம்பலத்தில் சொர்ண பைரவராக இறைவன் காட்சியளித்ததால் `ஸ்ரீ சொர்ணாகர்ஷன பைரவர்' என்று போற்றப்படுகிறார்.

ஸ்வர்ணாகர்ஷண பைரவரைக் கனகசபையில் எழுந்தருளச் செய்து சிறப்பு வழிபாடுகள் செய்யப்படுகின்றது. 

ஸ்ரீ சொர்ண பைரவருடைய வழிபாட்டில் சொர்ண லாபமும் பயம் நீங்கியும், சர்வ அட்ட சித்தியும் ஏற்படும் என்பது ஐதீகம் ....

பொன்னும் மணியும் குவியும் திருப்பதி திருமலையில் திருமலையானிடத்தில் இருக்கும் சக்கரம் சொர்ணாகர்ஷண சக்கரம் என்பதால் தான் பொன்னும் பொருளும் குவியும் திருப்பதியாக இது விளங்குகிறதாக நம்பிக்கை உண்டு ....
 மனத்தினை ஒருமுகப்படுத்தி சொர்ண பைரவராகிய என்னை வணங்கினாலே போதும், வேறு மூலிகைப் பிரயோகங்கள் ஏதும் தேவையில்லை என்று ரசவாத சித்தியில் வல்லவரான கொங்கண முனிவரிடம்  கூறி மறைந்தார்  இலுப்பைக்குடி பைரவர்..
சொர்ண பைரவரை வழிபட்ட கொங்கண முனிவர் ஜீவ சமாதி திருப்பதியில் உள்ளது.
தமது சீடரான கொங்கணவரின் ஜீவ சமாதியில் செல்வம் கொட்டப்படுவதால் சொர்ண பைரவரும் மகிழ்ச்சி அடைந்து  காணிக்கை செலுத்தியவர்களுக்கு ஒன்றுக்குப் பத்தாக செல்வங்களை வாரி வழங்குகின்றார்.
முற்காலத்தில் தில்லை தீட்சிதரர்கள் தம் வாழ்க்கைக்காக  எவரிடமும் பொன்னோ பொருளே பெறாமல் தினசரி அர்த்தசாம பூசை நிறைவு பெற்றவுடன் செப்பினால் செய்த தாமரை மலர், வில்வ இலைகள்,அல்லது செப்புத் தகட்டை  பொன்னம்பலத்தில் உள்ள பைரவரின் உற்சவ மூர்த்தியின் பாதத்தில் வைத்து விடுவார்களாம். 

மறுநாள் பைரவரைப் பணிந்து அந்த மலரை எடுத்துக் கொள்வார்களாம். அது அவர்களுடைய பணிக்கேற்ப பொன்னாக மாறியிருக்குமாம்.

 சிதம்பரம் தீட்சிதர்கள் இச்செய்தியினை மிகவும் இரகசியமாக வைத்திருந்ததனால் இது `சிதம்பர இரகசியம்' என்று வழங்கப்பட்டது
Swarna Akarshana Bhairava Yantra - Powerhouse of Money and Gold
நடராசர் சன்னதியின் கீழ்ப்புறத்தில் அமைந்துள்ள  உற்சவமூர்த்தியான இந்த சொர்ண பைரவருக்கு நாள்தோறும் நடராஜருக்கு நடைபெறும் அபிஷேக காலங்களிலும், விசேஷ தினங்களிலும் பக்தர்களின் வேண்டுதலுக்காக பொற்சபையில் இம்மூர்த்தியை எழுந்தருளச் செய்து விசேஷ அபிஷேகங்கள் நடத்தி நெய்யினால் சுடப்பட்ட வடைகளை மாலையாக அணிவித்து உபசாரம் செய்கின்றனர்.


வெண்பூசணி யில் பைரவருக்கு விளக்கு பல நலன்களை அளிக்கவல்லது  ..
http://farm3.staticflickr.com/2686/4091483857_020dbb879f_z.jpg?zz=1

ஸ்வர்ணாகர்ஷன  பைரவ அஷ்டகம் 
பண்:  நாத நாமகிரியை 

தனம்தரும் வயிரவன் தளிரடி பணிந்திடின் தளர்வுகள் தீர்ந்து விடும் 
மனந்திறன் தவன்பதம் மலரிட்டு வாழ்த்திடின் மகிழ்வுகள் வந்து விடும் 
சினந்தவிர்த் தன்னையின் சின்மயப் புன்னகை சிந்தையில் ஏற்றவனே
தனக்கிலை யீடு யாருமே என்பான் தனமழை பெய்திடுவாய் 

வாழ்வினிய வளந்தர வையகம் நடந்தாய் வாரியே வழங்கிடுவாய்
தாழ்வுகள் தீர்ந்திட தளர்வுகள் மறைந்திட தானென வந்திடுவாய் 
காழ்ப்புகள் தீர்த்தாய் கானகம் நடந்தான் காவலாய் வந்திடுவாய் 
தனக்கிலை யீடு யாருமே என்பான் தனமழை பெய்திடுவாய்

முழுநில வதனில் முறையோடு பூஜைகள் முடித்திட அருளிடுவாய் 
உழுதவன் விதைப்பாய் உடமைகள் காப்பாய் உயர்வுகள் செய்திடுவாய் 
முழுமலர் தாமரை மாலையை ஜெபித்து முடியினில் சூடிடுவாய் 
தனக்கிலை யீடு யாருமே என்பான் தனமழை பெய்திடுவாய்

நான்மறை ஓதுவார் நடுவினில் இருப்பாய் நான்முகன் நாநென்பாய்
தேனினிலே பழத்தை சேர்த்தவன் ருசிப்பாய் தேவைகள் நிறைத்திடுவாய் 
வான்மழை எனவே வளங்களை பொழிவாய் வாழ்த்திட வாழ்த்திடுவாய் 
தனக்கிலை யீடு யாருமே என்பான் தனமழை பெய்திடுவாய்

பூதங்கள் யாவும் தனக்குள்ளே வைப்பாய் பூரணன் நானென்பாய்
நாதங்கள்  ஒலிக்கும் நால்வகை மணிகளை நாணிலில் பூட்டிடுவாய் 
காதங்கள் கடந்து காட்டிடும் மாயம் யாவையும் போக்கிடுவாய் 
தனக்கிலை யீடு யாருமே என்பான் தனமழை பெய்திடுவாய்

பொழில்களில் மணப்பாய் பூசைகள் ஏற்பாய் பொற்குடம் ஏந்திடுவாய் 
கழல்களில் தண்டை கைகளில் மணியணி கனகனாய் இருந்திடுவாய் 
நிழல் தரும் கற்பகம் நினைத்திட பொழிந்திடும் நின்மலன் நாநென்பாய் 
தனக்கிலை யீடு யாருமே என்பான் தனமழை பெய்திடுவாய்

சதுர்முகன் ஆணவத் தலையினை கொய்தாய் சத்தோடு சித்தனானாய் 
புதரினில் பாம்பை தலையினில் வைத்தாய் புண்ணியம் செய்யென்றாய்
புதரினைக் குவித்து செம்பினை எரித்தாய் பசும்பொன் இதுவென்றாய் 
தனக்கிலை யீடு யாருமே என்பான் தனமழை பெய்திடுவாய்

ஜெயஜெய வடுகனாதனே சரணம் வந்தருள் செய்திடுவாய் 
ஜெயஜெய க்ஷேத்திர பாலகனே சரணம் ஜெயங்களை தந்திடுவாய் 
ஜெயஜெய  வயிரவா செகம்புகழ் தேவா செல்வங்கள் தந்திடுவாய் 
தனக்கிலை யீடு யாருமே என்பான் தனமழை பெய்திடுவாய் 


Golden Umbrella of Lord Mahakala-Bhairava.


காஞ்சி காமாட்சி அம்மன் ஆலய உள் கோபுரத்தில் பைரவர் ..


15 comments:

  1. படங்களும் பகிர்வும் ரொம்ப ரொம்ப நல்லா இருக்கு நன்றி வாழ்த்துகள்.

    ReplyDelete
  2. ரொம்ப ரொம்ப அருமையான பதிவு..தொடருங்கள்..

    ReplyDelete
  3. அருமையான விளக்கம்! நல்ல நல்லதகவல்கள்! நன்றி!

    ReplyDelete
  4. ஒரு நாள் குழந்தை வேண்டுபவர்களுக்காக சந்தானலட்சுமி சமேத ஸ்ரீநிவாசப் பெருமாள்.அடுத்தநாள் வீர ஆஞ்சநேயரின் திருக் கோலங்கள்.இன்னுமொருநாள் விநாயகரின் பல்வேறு பக்தி மணம் கமழும் புகைப்படங்கள்.
    இன்று தனஆகர்ஷன சொர்ண பைரவர்!
    அற்புதமான தரிசனங்கள் உட்கார்ந்த இடத்திலேயே!
    அருமை, அருமை!

    ReplyDelete
  5. நல்ல ஒரு பதிவு மிக்க நன்றி
    சுவாரஸ்யமாக உள்ளது.

    ReplyDelete
  6. அருமையான பதிவு.
    வாழ்த்துகள்.

    ReplyDelete

  7. என் மனைவி ஒரு பைரவ பக்தை. காசியில் பைரவ சந்நதியில் பண்டா முதுகில் தட்டி ( அறைந்து ) பிறகு பிரசாதம் தருகிறார்...!

    ReplyDelete
  8. படங்களும் பகிர்வும் அருமை.

    ReplyDelete
  9. அன்பின் இராஜ இராஜேஸ்வரி - பைரவர் பற்றிய பதிவு அருமை - எத்தனை படங்கள் - எத்தனை விளக்கங்கள் - எத்தனை பாடல்கள் - தினந்தினம் எப்படித்தான் எழுத இயலுமோ தெரியவில்லை. இறையருள் பூரணமாகப் பெற்றவர் இராஜ இராஜேஸ்வரி.

    பைரவரின் 12 நாமாக்கள், மூல மந்திரம், மகா ஸ்வரண் பைரவி, அஷடமி வழிபாடு, தேய்பிறை அஷ்டமி வழிபாடு, ஸ்வர்ண காஷன் பைரவர், கொங்கண முனிவர், சிதம்பர இரகசியம், சிதமபர் சொர்ண பைரவருக்கு வடை மாலை, வெண்பூசனி விளக்கு, தங்கக் குடை, கோபுரத்தில பைரவர், காசியில் பைரவர் என எத்தனை எத்த்னை படங்களுடன் விளக்க்ங்கள் - புல்லரிக்க வைக்கிறது.

    தங்களீன் உழைப்பும் திறமையும் பிரமிக்க வைக்கிறது.

    நல்வாழ்த்துகள் இராஜ இராஜேஸ்வரி
    நட்புடன் சீனா

    ReplyDelete
  10. பைரவரால் நமக்கு தனமழை வர்ஷிக்குதோ இல்லையோ ஸ்ரீ ஸ்வர்ணாகர்ஷன பைரவரைப்பற்றி மழை மழையாய்த்தகவல்களை அள்ளி அள்ளிக் கொடுத்தி அசத்திட்டீங்களே!

    எப்படீங்க இதுபோலெல்லாம் ஏதாவது தினமும் பதிவுகள் தர முடிகிறது?

    மிகவும் வியந்து போகிறேன்.

    நிச்சயம் தெய்வப்பிறவியாய்த்தான் இருக்கணும்.


    >>>>>

    ReplyDelete
  11. தனக்கிலை யீடு யாருமே என்பான் தனமழை பெய்திடுவாய் !

    பைரவா!

    நீ அந்தத்தங்கப்பதிவருக்கே எல்லா அருள் மழையையும் பெய்யக்கடவது.

    எனக்கு ஒரே ஒரு வடை மட்டும் போதும்.

    அதை மட்டும் எனக்குத் தரச்சொல்லுங்கோ.

    அடிக்கடி பெரிய பெரிய வடை மாலைகளைக்காட்டி என் பசியைக் கிளப்பி தொல்லைப்படுத்தறாங்கோ!!

    >>>>

    ReplyDelete
  12. ஸ்வர்ணாலர்ஷண பைரவரின் 12 நாமாக்கள், மூல மந்திரம், முதலியன மிக நன்றாகக் கொடுத்துள்ளீர்கள்.

    இந்த கார்த்திகை மாதம் தேய்பிறை அஷ்டமியில் இங்குள்ள ஸ்ரீ நாகநாதர் சிவன் கோயில் உள்ள ‘கால பைரவரின்’ தனி சந்நதிக்குச் சென்று, தரிஸித்தோம்.

    ஒரு ஸ்பூன் தயிர் சாத நைவேத்யம் கிடைத்தது.

    நீங்க தான் ஒரு பிரஸாதமும் இதுவரை தரவே மாட்டீங்கறீங்கோ. ;(

    பாராட்டுக்கள், வாழ்த்துக்கள், நன்றிகள்.

    ReplyDelete
  13. Aragalur gramamathil (in Kallakurichi taluk, Athur, Salem) ull Sri Perianaayagi Amman samedha Sri Kaamanaatheeswar kovilil 8 Bhairavargalaiyum dharisikalam.

    ReplyDelete
  14. thadikompu dinukal (dst) sorna bhairaver migavum arputhamanavar

    ReplyDelete