Thursday, December 13, 2012

சிவ சிம்மாசனம்







god shiva

கைலாசவாஸா கருணாவிலாஸா,
எந்தனை ஆளும் ஜோதிப்பிரகாசா
சம்போ சங்கர தாண்டவனே சிவ
மஹேஸ்வரனே சிவ மஹாதேவனே கைலாசவாஸா"

 25 ஆயிரம் ருத்ராட்சம் கொண்டு உருவாக்கப்பட்டுள்ள சிவ சிம்மாசனத்தை வழிபட்டால் முன்னோர் சாபம், குலதெய்வ குறைபாடுகள், தெய்வக் குற்றங்கள், திருமணத் தடைகள் போன்ற பிரச்சனைகள் தீரும் என்பது பக்தர்களின் நம் பிக்கை.இந்த சிம்மாசனத்தில் கல்விக் கடவுளான சரஸ்வதி தேவியின் எந்திரம் உள்ளிட்ட அனைத்து வகையான எந்திரங்களும் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளன.

 25 ஆயிரம் ருத்ராட்சங்களைக் கொண்டு, சிவ சிம்மாசனம் ஒன்றை உருவாக்கப்பட்டுள்ளது...
அனைத்து வகையான நவரத்தினங்கள், மூலிகைகள், எந்திரங்கள், மணி மாலைகள், சிவனின் முத்திரைகளான சூலம், உடுக்கை, பிரம்பு, ஓலைச்சுவடி, தண்டம், கைத்தடி, வலம்புரி மற்றும் இடம்புரி விநாயகர், வலம்புரி சங்கு, கோமேதகத்தில் நாகலிங்கம், பான, படிகலிங்கம் ஆகியவை கொண்டு, சிவ சிம்மாசனம் உருவாக்கப்பட்டுள்ளது. 

ஒரு முகம் முதல் 21 முகம் வரையுள்ள ருத்ராட்சங்கள் சிம்மாசனத்தில் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளன.

சிம்மாசனத்தில், மதுரை மீனாட்சி அம்மன், சப்த கன்னிமார் சிலைகள் ஆகம விதிப்படி பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளன. 

தேக்கு மரத்தால் சிம்மாசனம் ஒன்றை உருவாக்கி , அதன்பின், ருத்ராட்ச மணிகளை சிம்மாசனத்தில் ஆணி கொண்டு பதித்து, ஒன்பது வகையான நவரத்தினங்கள், மரகதலிங்கம் ஆகியவற்றையும் பிரதிஷ்டை செய்துள்ளது.. 

ஒரு லட்சத்து எட்டு மூலிகைகளாலான எந்திரங்களை சிம்மாசனத்தின் அடியில் வைக்கப்பட்டுள்ளது..
 நாமக்கல் மாவட்டம் முத்துக்காளிப்பட்டி ஸ்ரீசிவசக்தி பீடத்தில் 
இருக்கும் சிவ சிம்மாசனம்

சித்தர்கள் அனைவரும் மூலிகையில் ஐக்கியமானவர்கள். 

மூலிகை வேர்களாக, கொல்லிமலையில் இருந்து ஏர்சிங், சிவனார் மூலிகை, அலுங்கண்ணி, மயூர ரக்சை, ராஜ வணங்கி, வேங்கை ஆகிய அரிய வகை வேர்களை பிரதிஷ்டை செய்துள்ளது..

தட்சிணாமூர்த்திக்குரிய ஓலைச்சுவடிகள், சிவனுக்குரிய அனைத்து அம்சங்கள், கல்விக்காக சரஸ்வதியின் எந்திரம், நேபாளத்தில் இருந்து பிரத்தியங்கராதேவி எந்திரம், நாகதோஷத்தை நீக்கவல்ல கோமேதக நாகலிங்கம் ஆகியவற்றையும், சிம்மாசனத்தில் பிரதிஷ்டை செய்துள்ளது..

சிம்மாசனத்தை வணங்குவதால், முன்னோர் சாபம், பெண்கள் சாபம், குலதெய்வ குறைகள், திருமண தடைகள், புத்திர பாக்கியம், கடன் பிரச்னை, சிறந்த கல்வி, ஆரோக்கியம் ஆகியவை பெற்று, மனம் நிம்மதி அடையும்.


சிவ சிம்மாசனத்தை சிதம்பரம், திருநள்ளாறு, காசி ஆகிய புண்ணிய தலங்களில் விசேஷ வழிபாடு  செய்யப்பட்டுள்ளது..

ருத்ராட்சம் என்றால் சிவனின் கண்கள் என்று பொருள். 

சிவனின் கண்களின் நீர் துளிகளில் இருந்தே, ருத்ராட்ச மரங்கள் தோன்றின. அதன் மணிகளே, ருத்ராட்சம் என்று பெயர் பெற்றது. 

இவ்வகை ருத்ராட்சம், ஒன்று முதல் 21 முகம் வரை உள்ளது. 

இவற்றை அணிவதால் ஏற்படும் பலன்கள் ஏராளம். 

ருத்ராட்சம் மருத்துவ குணம் கொண்டது. 

ஆண், பெண் இருபாலரும் அணியலாம்.

ருத்ராட்சம் பற்றி இன்னொரு பதிவு ....
http://jaghamani.blogspot.com/2011/04/blog-post_22.html

ருத்ராட்சத்தேரும் , ருத்ராட்சப்பந்தல்களும் 










"miracle beads".

rudraksha tree





















25 comments:

  1. ருத்ராட்ஷா பூ , மரம் , முதல் முறையாக பார்க்கிறன்.விண்மீன்கள் நடுவே சிவதரிசனம் மிக்க அழகு..எங்க ஊர் கோவிலிலும் சமீபத்தில் ருத்ராட்ச பந்தல் அமைத்தனர்..பகிர்விற்கு நன்றி..

    ReplyDelete
  2. இந்த சிவசிம்மாசனம் எங்கிருக்கிறது தோழி? அறிய பல அதிசய தகவல்கள். நீல நிற ருத்ரஷக் காயை இப்போதுதான் பார்க்கிறேன்.

    ReplyDelete
  3. ருத்ராட்சம் பற்றி அறிய தகவல்கள் படங்கள் தெரிந்து கொள்ளமுடிந்தது. நன்றி

    ReplyDelete
  4. ருத்ராட்ச பந்தல்கள் நிறைய சிவன் கோவில்களில் பார்த்து இருக்கிறேன்.
    ருத்ராட்ச சிம்மாசனம் பார்த்தது இல்லை.

    படங்கள் எல்லாம் அழகு.

    ReplyDelete
  5. படங்கள் அனைத்தும் மிக அருமை.பகிர்வுக்கு மிக்க நன்றி....

    நன்றி,
    மலர்
    http//www.ezedcal.com/ta(வலைப்பூ உரிமையாளர்களுக்கான தலையங்க அட்டவணை உருவாக்க உதவும் வலைதாளம் பயன்படுத்தி பயன்பெறுங்கள்)

    ReplyDelete
  6. // ருத்ராட்சம் என்றால் சிவனின் கண்கள் என்று பொருள் //

    இந்தப் பதிவின் மூலம் ருத்ராட்சம் பற்றி எனக்குத் தெரியாத பல செய்திகளைத் தெரிந்து கொண்டேன். நன்றி!

    ReplyDelete
  7. ருத்ராட்சத்தின் சிறப்புப் பற்றி அருமையான பல தகவல்களை அழகிய படங்களுடன் தந்துள்ளீர்கள்....

    எத்தனை சிறப்புகளை எம் முன்னோர்கள் எமக்குத் தந்துவிட்டுச் சென்றுள்ளனர்....அத்தனையும் அற்புதம்.

    பகிர்வுக்கு மிக்க நன்றி சகோதரி...

    ReplyDelete
  8. Aha great post. All are very valueable and new information. Thanks for the post.
    viji

    ReplyDelete
  9. அறியாத தகவல்கள்! அருமையான படங்களுடன் அழகான விளக்கம்! நன்றி!

    ReplyDelete
  10. நல்ல பகிர்வு. ருத்ராட்சம் பற்றி அறியாத தகவல்கள்...

    ReplyDelete
  11. ருத்ராட்சமரம், பூ புகைப்படங்களை முதல் முறையாக பார்க்கிறேன்.
    படங்களும் தகவல்களும் அருமை.

    ReplyDelete
  12. ருத்ராட்சம் மாலையை பார்த்திருக்கிறேன்.தவிர மற்றவை நான் அறிந்திராத,பார்த்திராத விடயங்கள். உங்க பகிர்வின் மூலம் முதன் முதல் அறிந்துகொண்டேன்.மிக்க நன்றி. நீங்க போடும் படங்கள் எல்லாமே அத்தனை அழகு.

    ReplyDelete
  13. ருத்திராட்சம் என்றால் சிவனின் கண்கள் என்று அர்த்தம் என்பதை இப்பொழுது தான் தெரிந்து கொன்டேன்.மிகவும் அரிய தகவல்கள்.ருத்திராட்ச மரம் ,பூ எல்லாம் இப்பொழுது தான் பார்க்கிறேன்.
    பிரமாதமாக இருக்கிறது.

    ராஜி

    ReplyDelete
  14. ருத்ராட்சம் கண்டிருக்கிறேன்.பூமுதல் மரம் காயெல்லாம் அறிமுகப்படுத்திவிட்டீர்கள் ஆன்மீகத்தோழி.நன்றி !

    ReplyDelete
  15. ருத்ராக்ஷம் பற்றிய A to Z தகவல்கள் அனைத்தையும் சிவ சிம்ஹாஸ்னமாகத் தந்துள்ளது, தங்களின் தனிச்சிறப்பு.

    மனமார்ந்த பாராட்டுக்கள்.

    ReplyDelete
  16. ருதராக்ஷப்பூனை என்று சிலர் கிண்டலாகச் சொல்வது போல உள்ளதே!

    அப்படியென்றால் என்ன? எதற்காக அப்படிச்சொல்லுகிறார்கள்?

    ஏதேனும் தவறாக இருந்தால் இதை வெளியிட வேண்டாம். பதிலும் தர வேண்டாம்.

    நிஜமாலுமே தெரியாமல் தான், தெரிந்து கொள்ளும் ஓர் ஆர்வத்தில் தான் நான் இதைக் கேட்டுள்ளேன்.

    ReplyDelete
  17. ருதராக்ஷப்பூனை என்று சிலர் கிண்டலாகச் சொல்வது போல உள்ளதே!

    அப்படியென்றால் என்ன? எதற்காக அப்படிச்சொல்லுகிறார்கள்?

    ஏதேனும் தவறாக இருந்தால் இதை வெளியிட வேண்டாம். பதிலும் தர வேண்டாம்.

    நிஜமாலுமே தெரியாமல் தான், தெரிந்து கொள்ளும் ஓர் ஆர்வத்தில் தான் நான் இதைக் கேட்டுள்ளேன்.

    ReplyDelete
  18. மலைச்சாரலில், ஓர் அத்தி மரத்திலிருந்த பொந்து ஒன்றில், நாகம் ஒன்று வசித்து வந்தது. மற்றொரு பொந்தில், கழுகு ஒன்று வாசம் செய்தது.

    இரண்டுமே, மிகவும் வயது முதிர்ந்தவை. வெளியே சென்று தீனி தேட முடியாத நிலை. அதனால், அம்மரத்தில் வசித்த மற்ற பறவைகள், தங்களுக்குக் கிடைத்த தீனியில், கொஞ்சம் அவற்றுக்கென்று கொடுத்து வந்தன. அந்தத் தீனியைத் தின்றே அவை வாழ்ந்து வந்தன.

    ஒருநாள், பூனை ஒன்று அந்தப் பக்கமாக வந்தது. அப்போது அம்மரத்திலிருந்த பறவைகளின் கூட்டிலிருந்து அப்பறவைக் குஞ்சுகளின், "கீச் கீச்' என்று சத்தம் கேட்டது. ஆகா! இங்கே நமக்கு நிறைய தீனி கிடைக்கும் போலிருக்கிறதே! என்று எண்ணியது பூனை. அதன் நாக்கிற்குச் சுவை தட்டியது.

    உடனே, மெது மெதுவாக மரத்திலேறி அவற்றை நோட்டம் பார்த்தது பூனை. அதைக் கண்ட அக்குஞ்சுகள் பயந்துபோய், என்றுமில்லாமல் பெருங்கூச்சலிட்டன.

    ""ஏன் இப்படிக் கூச்சல் போடுகிறீர்கள்?'' என்று கேட்டுக்கொண்டே கழுகு, தன் பொந்திலிருந்து எட்டிப் பார்த்தது. சந்தடி செய்யாது பூனை வந்து கொண்டிருப்பதைப் பார்த்துவிட்டது.

    ""என்னைப் பார்த்து இக்குஞ்சுகள் எல்லாம் இப்படி பயந்து கத்துகின்றனவே! நீங்களாவது தைரியம் சொல்லக் கூடாதா?'' என்று கேட்டுக்கொண்டே கழுகின் பக்கம் வந்து, வணக்கம் செய்தது பூனை.

    ""நீ யார்?'' என்று கேட்டுக் கொண்டே, தன் கண்களை இடுக்கிக் கொண்டு அதைப் பார்த்தது கழுகு.

    ""நான் நெடுஞ்செவியன் என்னும் பூனை. உங்களிடமெல்லாம் நட்புகொள்ள வந்தேன்,'' என்றது பூனை.

    ""ஓடு! ஓடு! இங்கு நிற்காதே! இல்லையேல், உன் உயிருக்கே ஆபத்து நேரும்,'' என்று பயமுறுத்தியது கழுகு.

    ""என்ன! எடுத்த எடுப்பிலேயே இப்படிச் சொல்கிறீர்களே! என்னைப் பற்றி தெரிந்துகொண்டு பேசுங்கள். ஒருவனை பார்த்த மாத்திரத்திலேயே தீர்மானித்துவிடக் கூடாது. அவைகள் நடத்தையைப் பார்த்தே தீர்மானிக்க வேண்டும்,'' என்றது பூனை.

    ""நீ ஏன் இங்கு வந்தாய்... நட்புகொள்ள வந்தாயா? உண்மையைச் சொல்?'' என்று சற்று அதட்டலாகவே கேட்டது கழுகு.

    ReplyDelete
  19. ""நான், கங்கா நதியில் நாள்தோறும் குளித்து முழுகி விரதம் இருந்து வருகிறேன். நீர் மிகுந்த தர்மவான் என்று மற்ற பறவைகள் பேசிக் கொண்டது என் காதில் விழுந்தது. வயது முதிர்ந்த சான்றோரிடமே தருமம் கேட்க வேண்டும் என்று சாஸ்திரம் சொல்கிறது. அதனால்தான், இப்போது உம்மைத் தேடி வந்தேன்,'' என்றது அந்த ருத்திராட்ச பூனை.

    ""அப்படியா!'' என்று கழுகு யோசித்துக் கொண்டிருந்த வேளையில், விரிவாகப் பேசத் தொடங்கியது.

    ""என்ன இப்படி யோசிக்கிறீர்கள்? சத்துருவும் தன் வீட்டுக்கு வந்தால், சாதுக்கள் அவனுக்கு சன்மானம் அளிப்பர். தன்னை வெட்டுகிறவனுக்கே, மரம் நிழல் தரவில்லையா?

    ""சாதுக்கள், தம் வீட்டுக்கு யார் வந்தாலும் பூஜிக்கின்றனர்! இது மாதிரி அவமானப்படுத்துவதில்லை. அதிதி யார் வீட்டுக்கு வந்து மனம் வாடி திரும்புகிறானோ, அவன் தன் பாவத்தை அவ்வீட்டு எஜமானனுக்குக் கொடுத்துவிட்டு, அவனுடைய புண்ணியதைக் கைக்கொண்டு போகிறார் தெரியுமா!

    ""ஆகையால்தான் மழை பொழிகிறது; சூரியன் எரிகிறது! சண்டாளன் வீட்டில் சூரியன் பிரகாசிப்பதில்லையா?'' என்று சமத்காரமாய்ப் பேசியது பூனை.

    ""அது சரி! நீ மாமிசப் பிரியனாயிற்றே! அதிலும், கொன்று தின்ன அஞ்சமாட்டாயே!'' என்றது கழுகு.

    ReplyDelete
  20. அது கேட்ட பூனை, ""சிவ சிவா!'' என்று தன் காதுகளைப் பொத்திக் கொண்டது.

    ""நான் தரும சாஸ்திரங்கள் படித்தவன். அதனால் நான் வைராக்கியம் கொண்டவன். அதுமாதிரியான பொல்லாத கருமங்களையெல்லாம் நான் அடியோடு விட்டுவிட்டேன்.

    ""எவன் மற்றொருவனைக் கொன்று தனக்குச் சுகத்தைத் தேடிக் கொள்கிறானோ, அவன் நரகத்தை அடைகிறான். அதனால், கொலை செய்வதுபோல் வேறொரு பாதகம் இல்லை என்கிறது தரும சாஸ்திரம்.

    ""அதனால், கொலை செய்யாமல் இருப்பதுபோல் வேறொரு தருமம் இல்லை என்று தீர்மானித்து, காட்டிலுள்ள காய், கனி, கிழங்குகளையே சாப்பிட்டு வருகிறேன் நான்!'' என்றெல்லாம் பேசி கழுகின் மனதைத் கவர்ந்து பூனை.

    உடனே, கழுகுக்கு, அப்பூனையின் மேல் பூரண நம்பிக்கை ஏற்பட்டுவிட்டது.

    ""சரி, அப்படியென்றால் நீ இங்கு தங்கிக் கொள்ளலாம்,'' என்று அனுமதி கொடுத்துவிட்டது கழுகு.

    அதன்பிறகு கேட்க வேண்டுமா? பூனை தன் கைவரிசையைக் காட்டத் தொடங்கிவிட்டது. அதன் உள்நோக்கத்தை நிறைவேற்றிக் கொண்டது. நாளடைவில் அப்பூனை, அங்கிருந்த பறவைக் குஞ்சுகளைச் சந்தடி செய்யாது கொன்று தின்னத் தொடங்கியது.

    ReplyDelete

  21. ""என்ன இது! நாள்தோறும் நம் குஞ்சுகளின் எண்ணிக்கை குறைந்து வருகிறதே நம்முடைய கூட்டில்!'' என அந்தந்த பறவைகளும் ஆழ்ந்து யோசிக்கத் தொடங்கின.

    இதையறிந்த பூனை, சில நாட்களில் அங்கிருந்த கழுகினிடத்தில்கூட சொல்லிக் கொள்ளாமல் ஓடிப்போய்விட்டது.

    அதுகண்ட பறவைகள், அப்பூனை தங்கியிருந்த கழுகின் மரப் பொந்தை வந்து பார்த்தன. என்ன கொடுமை! அங்கு தம் குஞ்சுகளின் எலும்புகளும், சிறகுகளும் இருப்பதைக் கண்டன; கடுங்கோபம் கொண்டன.

    ""துரோகி! இந்தக் கழுகே அபகரித்து குஞ்சுகளையெல்லாம் தின்றிருக்கிறதே!'' என்று பேரிரைச்சல் போட்டு, அப்பறவைகளனைத்தும், அக்கழுகின் மேல் பாய்ந்து கொத்திக் கொன்றன.

    ஆகையால், ஒருவனுடைய குணத்தைப்பற்றி ஒன்றும் தெரிந்து கொள்ளாமல், அவனுக்கு இடம் கொடுக்கக்கூடாது

    சாத்தான் மட்டுமா வேதம் ஓதும் ???

    ருராட்சப்பூனைகளும் தர்மசாஸ்திரம் பேசுமே ..!

    மகாபாரதத்தில் கூட ஒரு பூனை போலி சந்நியாசியாக வேடமிட்டு ஒரு காலைத் தூக்கி தவம் செய்வதாக
    (ஊர்த்வ பாஹு) நடித்துக் கொண்டே மற்ற எலி, பறவைகளை பிடித்து தின்னக் காத்திருந்ததாக ஒரு கதை உண்டு.

    ReplyDelete
  22. Respected Madam,

    வணக்க்ம்.

    நீங்க இவ்வளவு அழகாக பொறுமையாக இந்தக்கதையை ஒரு குட்டியூண்டு பாப்பாவுக்குச் சொல்வது போலச் சொல்லிப்புரிய வைப்பீங்கன்னு நான் நினைக்கவே இல்லை.

    இதை ஒரு தனிப்பதிவாகவே போட்டிருக்கலாம் ... அப்போது இதுபற்றி மேலும் சிலருக்கும் எல்லோருக்கும் இந்தக்கதை தெரிந்திருக்கும்.

    மிகவும் சிரமப்பட்டு சிரததையெடுத்து அன்போடு அழகாக தாலாட்டு போல கதை சொல்லியுள்ளதற்கு என் நன்றிகள்.

    பல் வேலைகள் உள்ள தங்களை சிரமப்படுத்திட்டேனோன்னு மனசுக்கு கஷ்டமாகவும் இருக்கு.

    தாங்கள் ஒருவரே எனக்குத்தெரிந்த தகவல் களஞ்சியமாக இருப்பதால், அடிக்கடி இதுபோல எனக்கு சந்தேகங்கள் வரும் போது நான் பிறகு யாரைப்போய்க் கேட்பதாம்?

    உங்களைத்தான் கேட்பேனாக்கும்.
    ஹுக்க்கும்! ;)))))

    ReplyDelete
  23. //மகாபாரதத்தில் கூட ஒரு பூனை போலி சந்நியாசியாக வேடமிட்டு ஒரு காலைத் தூக்கி தவம் செய்வதாக
    (ஊர்த்வ பாஹு) நடித்துக் கொண்டே மற்ற எலி, பறவைகளை பிடித்து தின்னக் காத்திருந்ததாக ஒரு கதை உண்டு. //

    ஆஹா, அதை இன்னொரு நாளைக்குச் சொல்லுங்கோ.

    எதுவாக இருந்தாலும் அதை நீங்க சொல்லி நாங்க கேட்கணும்.

    அப்போது தான் அது மிகுந்த சுவாரஸ்யமாக இருக்குமாக்கும்.

    ஒருவேளை அதைத்தனிப் பதிவாகவே கொடுப்பதாய் இருந்தால்

    அதிலும் நிறைய அனிமேஷன் படங்களைக்காட்டத்தவறாதீங்கோ.

    அதுலும் ஸ்வாமி படங்கள் இருக்கட்டும்.

    அதிலும் உங்கள் விளக்கங்கள் + பாடல்கள் + ஸ்லோகங்கள் எல்லாமே இருக்கட்டும்.

    அப்போது தான் எல்லோருக்குமே சந்தோஷமாக இருக்கும்.

    மிக்க நன்றி, மேடம். பார்ப்போம்,

    ReplyDelete
  24. //இராஜராஜேஸ்வரி said...
    அது கேட்ட பூனை, ""சிவ சிவா!'' என்று தன் காதுகளைப் பொத்திக் கொண்டது.

    ""நான் தரும சாஸ்திரங்கள் படித்தவன். அதனால் நான் வைராக்கியம் கொண்டவன். அதுமாதிரியான பொல்லாத கருமங்களையெல்லாம் நான் அடியோடு விட்டுவிட்டேன்.

    ""எவன் மற்றொருவனைக் கொன்று தனக்குச் சுகத்தைத் தேடிக் கொள்கிறானோ, அவன் நரகத்தை அடைகிறான். அதனால், கொலை செய்வதுபோல் வேறொரு பாதகம் இல்லை என்கிறது தரும சாஸ்திரம்.

    ""அதனால், கொலை செய்யாமல் இருப்பதுபோல் வேறொரு தருமம் இல்லை என்று தீர்மானித்து, காட்டிலுள்ள காய், கனி, கிழங்குகளையே சாப்பிட்டு வருகிறேன் நான்!'' என்றெல்லாம் பேசி கழுகின் மனதைத் கவர்ந்து பூனை.

    உடனே, கழுகுக்கு, அப்பூனையின் மேல் பூரண நம்பிக்கை ஏற்பட்டுவிட்டது.

    ""சரி, அப்படியென்றால் நீ இங்கு தங்கிக் கொள்ளலாம்,'' என்று அனுமதி கொடுத்துவிட்டது கழுகு.

    அதன்பிறகு கேட்க வேண்டுமா? பூனை தன் கைவரிசையைக் காட்டத் தொடங்கிவிட்டது. அதன் உள்நோக்கத்தை நிறைவேற்றிக் கொண்டது. நாளடைவில் அப்பூனை, அங்கிருந்த பறவைக் குஞ்சுகளைச் சந்தடி செய்யாது கொன்று தின்னத் தொடங்கியது.//

    இந்த இடங்களிலெல்லாம் நீங்களே அந்தப் பூனை போலவும், கழுகு போலவும் பேசி நடித்துக்காட்டியது போல கற்பனை செய்து பார்த்து மகிழ்ந்தேன்.

    நல்லவே கதை சொல்றீங்கோ. எனக்கு மிகவும் பிடித்துப்போச்சு, உங்களையும் உங்கள் கதை சொல்லும் திறமையையும். மிகவும் சந்தோஷமாக உணர்கிறேன்.

    ;))))))

    ReplyDelete