Saturday, July 28, 2012

ஆயிரம் கண்ணுடையாள்'





நாயகி நான்முகி நாராயணி கை நளின பஞ்ச
சாயகி சாம்பவி சங்கரி சாமளை சாதி நச்சு
வாயகி மாலினி வாராகி சூலினி மாதங்கி என்று
ஆயகியாதி உடையாள் சரணம் அரண் நமக்கே


ஆயிரம் கண்ணுடையாள் நீலி திரிசூலி நீங்காத பொட்டுடையாள் சமயபுரத்தாளேசாம்பிராணி வாசகியே 
சமயபுரத்தை விட்டு சடுதியிலே  வந்து காத்திடுவாய் !

அன்னை பராசக்திக்கு "விச்வ ஸாக்ஷிணீ' என்ற பெயர் உண்டு. "விச்வம்' என்றால் "உலகம்'. "ஸாக்ஷிணீ' என்றால் "சாட்சியாக இருப்பவள்'. உலக மக்கள் செய்யும் செயல்களுக்கெல்லாம் அவள் சாட்சியாக இருக்கிறாள். "ஸர்வதோக்ஷி'  - எங்கும் தலையும், முகமும், கண்களும் கொண்டவள்.

"ஆயிரம் கண்ணுடையாள்' என போற்றுகிறோம்... இதனால், அவள் பார்வைக்கு தப்பி, எந்த ஒரு மனிதனும் எந்தச் செயலையும் செய்ய முடியாது.

அவள் பார்க்கவில்லை என்று இப்போது நினைத்துக் கொண்டிருப்பவர்கள்  அவள் முன்னால் நின்று தண்டனை பெறும்போது தான் இதை உணர்வார்கள்.


கண்ணாத்தாள், கண்ணுடைய நாயகி, ஆயிரம் கண்ணுடையாள்' என்றெல்லாம் போற்றும் பராசக்தியை, பாரதியாரும்

ஓம்சக்தி ஓம்சக்தி ஓம் -பராசக்தி
ஓம்சக்தி ஓம்சக்தி ஓம்

சொல்லுக் கடங்காவே-பராசக்தி
சூரத் தனங்கலெல்லாம்;
வல்லமை தந்திடுவாள்-பராசக்தி
வாழியென் றேதுதிப்போம் "என்று போற்றுகிறார்.

மாயவனின் தங்கையாக இருப்பதால் அவளுக்கு "மாயி' "மகமாயி' என்றும் பெயருண்டு.

சிவகங்கை நாட்டரசன்கோட்டையில் கண்ணுடையநாயகியாக அருள்புரிகிறாள். உலகம் முழுவதும் நடக்கும் அத்தனை நிகழ்வுக்கும் ஒரே சாட்சியாக இருப்பவள் அம்பிகை.......

ஞானிகளுக்கு மூளையின் அனைத்து கண்ணறைகளும் திறந்திருப்பதாலே முக்காலமும் அறியும் சக்தி உண்டாகிறது.

சகஸ்ராக்ஷியாக இருக்கும் அம்பிகையே குண்டலினி சக்தியாக இருந்து, மூலக்கனலை எழுப்பி ஞானத்தை வழங்குகிறாள்

  உலகையே ஆள்பவள் என்பதால் உலகாளும் நாயகிக்கு ஒவ்வொரு ஊரிலும் ஒரு திருநாமம்.ஆயிரம் திருநாமங்களைப் பெற்றவள்


துஷ்டர்களைஅழிப்பதற் கென்றே ஆயிரம் கைகள். அதில் ஆயிரம் ஆயுதங்கள் ஏந்தி   எங்கும் நிறைந்தவளின்  பார்வைக்குள்ளே உலகம் அடங்கி இருக்கிறது. 

 . "துர்க்கம்' என்றால் "வழி'. அவள் பக்தர்களை துயரங்களில் இருந்து மீட்டு நல்வழி காட்டுபவள். 

சிவபெருமான் துஷ்டர்களை வதம் செய்த தருணத்தில், அவருடைய கையில் சூலமாக நின்று சூலபாணியாக விளங்கியதால் தேவிக்கு சூலினி என்று பெயர். 

முருகப்பெருமான் சூரனை வதம் செய்தபோது சக்திவடிவே வேலாக நின்று உதவி செய்தது. இதனால் அவள் "சக்தி' என பெயர் பெற்றாள். 

தேவியைப் பார்த்த அளவிலேயே பக்தன் தாயைக் கண்ட மழலைபோல பரவசப் பட்டு மகிழ்ச்சி அடைய வேண்டும் என்று தான் அம்பிகை அபயகரத்துடன் நமக்கு காட்சி தருகிறாள். 
சூலம் தேவிக்குரிய ஆயுதம். அது மூன்று இலைகளைக் (பிரிவு) கொண்டது. 
சூட்சும செய்திகளைத்தாங்கி அருள்கிறது..

மனிதனின் விழிப்பு, கனவு, தூக்கம் என்ற மனிதனுக்குள்ள மூன்று நிலைகளாகவும் , மனம்,வாக்கு, காயம்(உடல்) மூன்றாலும்  மனிதன் ஒன்றுபட்டு இருக்க வேண்டும்.என்பதையே சூலத்தின் வடிவம் காட்டுகிறது. 


வாழ்வில் அறம், பொருள், இன்பம் இம்மூன்றையும் முறையாகக் கடைபிடிப்பவர்கள் தேவியின் அருள் பெற்று மகிழ்வார்கள்.

 "இச்சை (நியாயமான ஆசை), கிரியை (அதை செயல் படுத்தும் தன்மை), ஞானம்' (அதனால் ஏற்படும் பலன்)  மூன்று சக்திகளும் நமக்கு சித்திக்க வேண்டும் என்பதையும் சூலம் காட்டுகிறது. 


ஆசை, காமம், வெகுளி - மும்மலங்களையும்  வேரறுத்து, நல்லவனாக மாற்றி தன்னடி சேர்த்துக்கொள்கிறாள் அன்னை,,,,

மும்மலங்களிலும் ஒட்டாமல் பிரிந்து நிற்கும் அம்பிகை சூலத்தின்
மூன்று பிரிவுகளும், 

எல்லாம் சேர்ந்து இணைந்த கைப்பிடியை அம்பிகை பிடித்து  இருப்பது  மூன்று தீய குணங்களும், பக்தர்களை நெருங்க விடாமல்  கட்டுப்படுத்தி வைத்திருப்பதாக அம்மன் சொல்லும் வகையில்அமைந்திருப்பதாக தேவிபுராணம் சொல்ல்லும்..

ஓம் சக்தி ஓம், ஓம் சக்தி பராசக்தி ஓம்!!!


சூலத்தை வெறும் கொல்லும் ஆயுதம் அல்ல ...

தத்துவார்த்தமாக தரிசிக்க வேண்டும். எனவே தான் அம்பிகையை "திரி வர்க்க தாத்ரீ' (படைத்தல், காத்தல், அழித்தலாகிய தொழிலுக்கு அதிபதி) என்று போற்றுகிறோம்.

நெற்றியில் உன் குங்குமமே நிறைய வேண்டும்
நெஞ்சில் உன் திருநாமம் பதிய வேண்டும்
கற்றதெல்லாம் மென்மேலும் பெருக வேண்டும்
கவிதையிலே உன் நாமம் பாட வேண்டும்
சுற்றமெல்லாம் நீடூழி வாழ வேண்டும் 
ஜோதியிலே நீயிருந்து ஆள வேண்டும் !!

காற்றாகி கனலாகி கடலாகினாய் கயிறாகி உயிராகி உடலாகினாய்
நேற்றாகி இன்றாகி நாளாகினாய் நிலமாகி பயிராகி உணவாகினாய்
தோற்றாலும் ஜெயித்தாலும் வாழ்வாகினாய் தொழுதாலும் அழுதாலும் வடிவாகினாய் பாடாத நாளில்லை தாயே உன்னை !

Chocolate saree for god made out of five thasand chocolates

22 comments:

  1. ஆஹா! ஆயிரம் கண்ணுடையாளா?

    என் இரண்டு கண்களை மட்டும் வைத்துக்கொண்டு, இதைப் பார்த்துப் படித்து ரஸித்துக் கருத்துக்கள் சொல்ல மிகவும் தாமதமாகுமே!

    வழக்கம் போல் பொறுமையாகத் தான் வரவேண்டும்.

    ReplyDelete
  2. ஆயிரம் கண்ணுடையாள் நல்ல பகிர்வு அக்கா... அனைத்து படங்களுமே அழகாக உள்ளது....

    ReplyDelete
  3. ஆயிரம் நாமங்கள் அன்னை, ஆயிரம் கண்ணுடையாள் அன்னை லோகமாதா தரிசனம் திவ்யமாக இருக்கிறது.நன்றி.

    நேற்று எங்கள் வீட்டுக்கு அருகில் இருக்கும் சிவதுர்க்கைக்கு பழங்களால் அலங்காரம்.

    உங்களை நினைத்துக் கொண்டேன்.
    நன்றி.

    ReplyDelete
  4. ”ஆயிரம் கண்ணுடையாள்
    நீலி திரிசூலி நீங்காத
    பொட்டுடையாள்
    சமயபுரத்தாளே” என்ற
    பாடல் வரிகளுடன்
    சமயபுரம் மஹமாயீ
    அம்மனைக் காட்டியுள்ளது
    மிகவும் திருப்தியாக உள்ளது.

    ReplyDelete
  5. //"விச்வ ஸாக்ஷிணீ' ["விச்வம்' என்றால் "உலகம்'. "ஸாக்ஷிணீ' என்றால் "சாட்சியாக இருப்பவள்']

    உலக மக்கள் செய்யும் செயல்களுக்கெல்லாம் அவள் சாட்சியாக இருக்கிறாள்.//

    அருமையான விளக்கம். ;)

    ReplyDelete
  6. //"ஸர்வதோக்ஷி'
    எங்கும் தலையும், முகமும், கண்களும் கொண்டவள்.

    "ஆயிரம் கண்ணுடையாள்' என போற்றுகிறோம்.

    இதனால், அவள் பார்வைக்கு தப்பி, எந்த ஒரு மனிதனும் எந்தச் செயலையும் செய்ய முடியாது.

    அவள் பார்க்கவில்லை என்று இப்போது நினைத்துக் கொண்டிருப்பவர்கள் அவள் முன்னால் நின்று தண்டனை பெறும்போது தான் இதை உணர்வார்கள்.//

    படிக்கும்போதே மெய்சிலிரிக்க வைக்கும் வரிகள், இவை.

    குற்றம் புரிபவர்கள் அனைவரும் இதனைக் கட்டாயம் உணர்ந்து கொண்டால் நல்லது.

    நன்றாகவே நயம்படச் சொல்லியுள்ளீர்கள். ;)

    ReplyDelete
  7. தேவிக்கு ”சூலினி” மற்றும் "சக்தி” என்று பெயர் வந்ததற்கான விளக்கம் வெகு அருமையாகத் தந்துள்ளீர்கள்.

    ReplyDelete
  8. அறிந்தேன் பராசக்தியின் மகிமையை! படங்கள் கொள்ளை கொள்ளும் அழகு!

    ReplyDelete
  9. சூலத்தின் வடிவம் காட்டுவதாகச் சொல்லும்.....

    விழிப்பு, கனவு, தூக்கம் என்ற மூன்று நிலைகள்,

    மனம், வாக்கு, காயம்(உடல்)என்ற மூன்றினால் செய்யப்படும் சகல புண்ணிய, பாவச்செயல்கள்,

    அறம், பொருள், இன்பம் என்ற மூன்றையும் முறையாகக் கடைபிடித்தல்,

    "இச்சை (நியாயமான ஆசை), கிரியை (அதை செயல் படுத்தும் தன்மை), ஞானம்' (அதனால் ஏற்படும் பலன்) என்று நமக்கு சித்திக்க வேண்டிய மூன்று சக்திகள்,

    ஆசை, காமம், வெகுளி என்று நம்மால் நீக்கப்பட வேண்டிய மும்மலங்கள்

    அடடா! எவ்வளவு அழகாக அதே
    திரிசூலத்தால் லேசாக ஒரு குத்துக் குத்தியது போல எடுத்துச் சொல்லியுள்ளீர்கள். சபாஷ்!

    ReplyDelete
  10. ஆயுரம் கண்ணுடையாளுக்கு
    ஐந்தாயிரம் சாக்லேட்களால்
    புடவையா! ;)))))

    இனிமையோ இனிமை தான்.

    புதுப்புதுத் தகவல்களாக
    சாக்லேட் போல இனிமையாக புதுமையாக அளிப்பதில்
    உங்களை யாரால் வெல்ல முடியும்?

    ReplyDelete
  11. மேலிருந்து கீழே நாலாவது படம் இதுவரை திறக்கப்படவில்லை.

    மற்ற எல்லாப்படங்களும் அழகாகவே உள்ளன.

    கீழிருந்து எட்டாவது வரிசையில் உள்ள தனி அம்மனுக்கு பழங்களாலேயே நெக்லஸ் போல அலங்காரம் செய்துள்ளது எனக்கு மிகவும் பிடித்தமானதாக உள்ளது.

    ReplyDelete
  12. நான்கு புறமும் ரோஜாப்பூக் குவியலுடன் நடுவில் அம்மன் உள்ள படம் மனதுக்கு மகிழ்ச்சியளிக்கிறது.

    //தேவியைப் பார்த்த அளவிலேயே பக்தன் தாயைக் கண்ட மழலைபோல பரவசப் பட்டு மகிழ்ச்சி அடைய வேண்டும் என்று தான் அம்பிகை அபயகரத்துடன் நமக்கு காட்சி தருகிறாள்.//

    அபயகரத்துடன் கூடிய தேவியின் தரிஸனம் கிடைக்கவே எப்போது ஏங்குகிறேன். பிரார்த்திக்கிறேன்.

    ReplyDelete
  13. அம்மன் தரிசனம் அற்புதமா இருக்கு

    ReplyDelete
  14. படங்களைப் பார்த்து ரசிக்க ஆயிரம் கண்கள் போதாது.. நன்றி சகோதரி !

    ReplyDelete
  15. அழகிய படங்கள் மனம் கொள்ளை கொண்டது.

    ReplyDelete
  16. ஆயிரம் கண்ணுடையாளின்
    பதிவை என்னிரு கண்களினால்
    கண்டு களித்தேன் சகோதரி...

    ReplyDelete
  17. படங்களும் பதிவும் அருமை! நன்றி!

    ReplyDelete
  18. ஆயிரம் கண்ணுடையாள் பற்றி அற்புதமான அழகான பகிர்வுக்குப் பாராட்டுக்கள்..

    ReplyDelete
  19. எங்கள் குல தெய்வம். பதிவுக்கு நன்றி

    ReplyDelete