Friday, June 29, 2012

ஆடல் வல்லானுக்கு ஆனித் திருமஞ்சனம்



வானாகி,மண்ணாகி, வளியாகி, ஒளியாகி, ஊனாகி, உயிராகி அனைவரையும் கூத்தாட்டுவானாக விளங்கும் சிவன் ஆலகால விஷத்தை உண்டபோது அதை கண்டத்தில் நிறுத்தியதால் நீலகண்டனாகி அவர் தேகம் உஷ்ணத்தால் பாதிக்கப்பட்டது.  
வெம்மையுள்ள சுடலையின் சூடான சாம்பலைத் திருமேனியில் தரித்து, எப்போதும் திருக்கரத்தில் அக்னியை ஏந்திக் கொண்டிருப்பதால் சிவபெருமான் கடுமையான வெப்பத்தால் பாதிக்கப்படுகிறார். 
இந்த வெப்பத்தைத் தணிக்க வருடத்திற்கு ஆறுமுறை மிகச் சிறப்பாக அபிஷேக ஆராதனைகள் செய்யப்படுகின்றன. 

இதில் ஆனித் திருமஞ்சனம் மாலை வேளையில் தேவர்களால் நடத்தப்படுகிறது. அதனையொட்டி சிவாலயங்களில் நடராஜப் பெருமானுக்கு திருமஞ்சனம் நடைபெறுகிறது. 

கோடை முடிந்து மழைக்காலம் தொடங்கும் காலம் ஆரம்பம். இதையே 
"ஆனி இலை அசங்க' என்பார்கள். கடுமையான வெயிலின் தாக்கம் குறைந்து இதமான நாட்கள் தொடங்கும் மாதம் ஆனி. 

வேனிற் காலம் தொடங்கும் அற்புத மாதம் ஆனி மாதம். நாடெல்லாம் நன்றாக மழை பெய்து விவசாயம் செழிக்க வேண்டியும் பக்தர்கள் ஆனி மாதம் திருமஞ்சன விழா கொண்டாடுவதாக சான்றோர்கள் தெரிவிக்கின்றனர். 

ஆனிமாதம் உத்திர நட்சத்திரத்தன்று நடக்கும் தரிசனமாகையால் இத்தினம் ஆனி உத்திரம் எனவும் ஆனித்திருமஞ்சனம் எனவும் அழைக்கப்படுகிறது

தினமும் நடைபெறும் பூஜைக்கு நித்தியம் என்றும், 
விசேஷ கால பூஜைக்கு நைமித்திகம் என்றும் பெயர். 

நித்திய பூஜையில் உண்டாகும் குறைகள் 
நைமித்திக பூஜையில் நீங்குவதாக ஐதீகம். 
நடராஜப்பெருமானுக்கு ஒரு ஆண்டில் ஆறுமுறை விசேஷ அபிஷேகம் நடக்கும். இதில் இரண்டு அபிஷேகம் திருவிழாவாக நடத்தப்படுகிறது. 

அவை மார்கழி திருவாதிரை, ஆனி உத்திர திருமஞ்சனம். 

இந்த இரு நாட்களிலும் சூரியோதயத்திற்கு முன்பே நடராஜருக்கு அபிஷேகம் செய்து முடிப்பர்இவ்விரு நாட்களில் மட்டுமே அதிகாலையில் அபிஷேகம் நடக்கும்.தேவர்களின் பகல்பொழுதின் கடைசி மாதம் ஆனி. 

ஆனி மாதத்தில் வரும் உத்திர நட்சத்திரத்தன்று தேவர்கள் இறைவனுக்கு மாலை நேர பூஜை செய்வதாக சாத்திரங்கள் கூறுகின்றன. இதனை ஆனித் திருமஞ்சனம் என்று சிறப்பிக்கிறோம். 

திருமஞ்சனம் என்றால் மகாஅபிஷேகம் என்று பொருள்

தேவர்களுக்கு வைகறை மார்கழி மாதம்; 
காலைப்பொழுது மாசி மாதம்; 
உச்சிக் காலம் சித்திரை; 
மாலைப்பொழுது ஆனி; 
இரவு ஆவணி; 
அர்த்த சாமம் புரட்டாசி என்பர் 

ஆனித் திருமஞ்சனத்தையொட்டி ஸ்ரீநடராஜப் பெருமான் எழுந்தருளியுள்ள அனைத்து கோவில்களிலும் ஆனி மாத உத்திர நட்சத்திரத்தன்று சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெறுகின்றன. 

சிவ ஆலயங்களில் ஆனி மாத திருமஞ்சனத்தை விழாவாக கொண்டாடுகிறார்கள்.

 ஆடலரசனான ஸ்ரீநடராஜப் பெருமானுக்குரிய நாளாகப் போற்றப்படுவதால், சிதம்பரம் திருத்தலத்தில் பத்து நாட்கள் விழா கொண்டாடப்படுகிறது. 

 திருவாரூர், உத்தரகோசமங்கை, ஆவுடையார் கோவில் போன்ற திருத்தலங்களிலும் ஆனித் திருமஞ்சனம் வெகுசிறப்பாகக் கொண்டாடப்படுகிறது.

ஆனித் திருமஞ்சன நிகழ்ச்சியில் சுமங்கலிகள் கலந்துகொண்டால், நீடூழி வாழுகின்ற சுமங்கலி பாக்கியத்தைப் பெறுவார்கள். 

கன்னியர்களுக்கு நல்ல இடத்தில் திருமணம் கைகூடும். 
ஆடவர்களுக்கு மனதில் தைரியமும் உடல்பலமும் வளமும் கூடும் என்பது ஐதீகம்.


ஆனித் திருமஞ்சனத்தின்போது நடைபெறும் அபிஷேக ஆராதனைகளில் கலந்து கொண்டால் பேறுகள் பல பெறலாம். 

அபிஷேகத்திற்கு பக்தர்கள் அளிக்கும் பொருட்களால் அவர்கள் 
குடும்பத்திற்கு நல்ல பலன் கிட்டும் என்று சாஸ்திரம் சொல்கிறது.

கங்கை தீர்த்தம் அளித்தால் நம் பாவங்கள் நசியும்; 
எண்ணெய் அளித்தால் சுகம் கிட்டும்; 
மாப்பொடி அளித்தல் கடனைப் போக்கும்; 
நெல்லி முள்ளி பொடி அளித்தால் நோய் நீங்கும்; 
பஞ்சகவ்யம் அளித்தால் மனதில் தூய்மை உண்டாகும்; 
இளநீர் அளித்தால் சுகமான வாழ்வு கிட்டும்; 
தேன் அளித்தால் மகிழ்ச்சி உண்டாகும்; 
பால் அளித்தால் ஆயுள் வளரும்; 
தயிர் அளித்தால் குழந்தைச் செல்வம் கிட்டும்; 
நெய் அளித்தால் மோட்சம் கிடைக்கும்; 
கரும்புச்சாறு அளித்தால் உடல்பிணியைப் போக்கும்; 
சந்தனம் அளித்தால் செல்வச் செழிப்பு ஏற்படும்;
 பன்னீர் அளித்தால் பணத் தட்டுப்பாடு இருக்காது; 
பஞ்சாமிர்தம் தயாரிக்க பழங்கள் அளித்தால் வாழ்வில் வெற்றி பெறலாம் என்று ஞான நூல்கள் சொல்கின்றன.

அமைதியான வாழ்வுக்கும் முன்னேற்றத்துக்கும் சிவதரிசனம் சிறந்ததாகப் போற்றப்படுகிறது. 

அதுவும் ஆனித் திருமஞ்சனம் போன்ற விழா சமயங்களில் கோவிலுக்குச் சென்று அபிஷேக, ஆராதனைகளில் கலந்துகொண்டால் அஷ்ட ஐஸ்வர்யங்கள் நிறைந்து பெருகும் என்று அருளாளர்கள் சொல்வர். 


9ம் நாள் விழாவான தேரோட்டம், 
world cup 2011
சிதம்பரம் நடராஜர் கோயிலில் மகாபிஷேகத்தை முன்னிட்டு
அதிருத்ர மகாயாகம்
General India news in detail




6 comments:

  1. பார்த்தேன்.
    படித்தேன்.
    ரசித்தேன்.
    நல்லா இருக்கு.

    ReplyDelete
  2. படங்களும் பதிவும் ரொம்ப நல்லா இருக்கு நனறி வாழ்த்துகள்.

    ReplyDelete
  3. ஆடல் வல்லானுக்கு ஆனி திரு மஞ்சனம்..ஆஹா !ஆயிரம் கோடி சூரிய பிரகாசம் போல் ஆடல் வல்லான் நடராஜ பெருமானின் தரிசனம்.
    நமசிவாய வாழ்க
    நாதன் தாழ் வாழ்க
    இமை பொழுதும் என் நெஞ்சில்
    நீங்காதான் தாழ் வாழ்க
    ஈசனடி போற்றி
    எந்தையடி போற்றி
    நேசனடி போற்
    சிவன் சேவடி போற்றி போற்றி..

    ReplyDelete
  4. வெகு நாட்களுக்கு பிறகு வருகிறேன். முதல் படமே அசத்தல். மனதை கொள்ளை கொண்டு விட்டது.

    ReplyDelete