Wednesday, January 11, 2012

ஸ்ரீ சக்ர வழிபாடு




Sri Chakra Lotus
வெளி நின்ற நின் திருமேனியைப் பார்த்து, என் விழியும் நெஞ்சும் 
களி நின்ற வெள்ளம் கரை கண்டதில்லை, கருத்தினுள்ளே 
தெளி நின்ற ஞானம் திகழ்கின்றது என்ன திருவுளமோ?
ஒளி நின்ற கோணங்கள் ஒன்பதும் மேவி உறைபவளே.



அபிராமி அந்தாதியில் அபிராமி பட்டர் " ஒளி நின்ற கோணங்கள் ஒன்பதும் மேவி உறைபவளே" என்று அம்மையின் இருப்பிடமாக ஸ்ரீசக்ரம் விளங்குதை கூறுகின்றார்.

சக்ரங்களுக்கெல்லாம் சிரேஷ்டமானது ஸ்ரீசக்ரம்.
அது தேவியின் திருவருட் சக்கரம்.

அரிசி மாவு அல்லது மஞ்சள் பொடி ஆகியவற்றினால் யந்திரம் அமைத்து அந்த யந்திரத்திலே சக்தி வீற்றிருக்கிறாள் என நினைத்து வழிபடல்
 ஸ்ரீ சக்கர பூசை வழிபாடு எனப்படும்.

அம்பாளுடைய சக்ரத்தை ஸ்ரீசக்ரம் என்றும் ஸ்ரீசக்ர ராஜமென்றும் சொல்வதுண்டு.

சரீரமானது ஜீவனுக்கு எப்படி நிலைக்களனாக உள்ளதோ,
அவ்வாறே சிவன் சக்தி இருவருக்கும் இருப்பிடமாக உள்ளது ஸ்ரீசக்ரம்.

ஸ்ரீசக்ரமானது கீழ்நோக்கிய முக்கோணங்கள் ஐந்தும், மேல் நோக்கிய முக்கோணங்கள் நான்கும் சேர்வதால் உண்டாவது. மேல்நோக்கிய நான்கு முக்கோணங்களை ‘சிவாத்மகம்’ என்றும் கீழ்நோக்கிய ஐந்து முக்கோணங்களையும் ‘சக்தியாத்மகம்’ என்றும் கூறுவர்.

ஸ்ரீசக்ரத்தில் அடங்கிய பிந்து, அஷ்டதளம், ஷோடதளம், சதுரச்ரம் என்ற இவை சிவ சக்ரங்கள் (சிவாத்மகம்),

த்ரிகோணம், அஷ்டகோணம்,தாசாத்வயம், மன்வச்ரம் இவை சக்திச் சக்ரங்களாகும் (சக்தியாத்மகம்).

சக்திச் சக்ரங்கள் மேன்மை உடையவையாகும்.

இந்த இரண்டிலும் சக்திச் சக்ரச் சேர்க்கையினால்தான் சிவச்சக்ரத்திற்கு மேன்மை ஏற்படுவதாக ‘சிவசக்த்யா யுக்தோ’ என்று சௌந்தரியலஹரி சுலோகம் கூறுகிறது.

ஸ்ரீசக்ரத்தின் மத்திய பாகத்தை பிந்து என்பர்.

ஸ்ரீசக்ரத்தின் மத்தியிலுள்ள த்ரிகோணத்தின் நடுவில்
பிந்து இருப்பதால் அதற்கு ‘பைந்தவஸ்தானம்’ என்று பெயர்.

.இந்த முக்கோண ஸ்தானங்களில் பிரபஞ்ச தத்துவங்களையும் மனோ நிலைகளையும் குறிக்கும் யோகினிகள் என்று அழைக்கப் பெறும்
சக்திகள் அமர்ந்திருக்கிறார்கள்.

முக்கோண ஸ்தானங்களில் அமர்ந்திருக்கும் யோகினிகள் ஆவரண தேவதைகள் என்று அழைக்கப் பெறுகிறார்கள்.

ஆவரண என்றால் மறைக்கும் என்று பொருள்.

பிந்து மண்டலத்திலுள்ள பிரம்ம ஸ்வரூபத்தை மறைத்து, பஞ்ச பௌதீகப் பிரபஞ்சத்தைத் தோற்றுவிப்பவர்கள் இந்த யோகினிகளே.

சூரியனிடமிருந்து கிரணங்கள் தோன்றுவது போல, 
யோகினிகள் தேவியிடமிருந்து தோன்றுகிறார்கள்.
All Gods In Chakram Picture
ஆவரண தேவதைகள் அம்பாளிடமே ஐக்கியமாகி விடுவதை
ஸ்ரீசக்ரபூஜையில் காணலாம். 

ஒன்றிலிருந்து ஒன்று தோன்றியது. பின்பு அவை இரண்டுமே இரண்டறக் கலந்து ஒன்றுபட்டு விடுவதால் அம்பாளை
பிரகாச-விமர்ச-பரப்ரம்மஸ்வரூபிணி என்று போற்றுகிறோம்.
Mahameru Picture
Maha Meru Sri Chakram

ராகம் எனப்படும் விருப்பைக் குறிப்பது பாசம். குரோதம் என்ற வெறுப்பைக் குறிப்பது அங்குசம். கரும்பு வில் மனத்தையும், ஞானேந்திரிய பஞ்சகம் பஞ்சபுஷ்ப பாணங்களையும் குறிப்பிடுகின்றன. 

ஸ்ரீசக்ர பூஜையைச் செய்பவர்கள் லௌகீக சுகங்களை அடைவதோடு நிவர்த்தி மார்க்கத்தில் வெறுப்பு, விருப்பு, புலன்கள் ஆகியவற்றையும் வென்று, ஜிதேந்திரியனாக, ஜீவன் முக்தியை அடைகிறான்.

அம்பாளாகிய ஸ்ரீசாரதையை வழிபடும் சாஸ்திரத்திற்கு ஸ்ரீவித்யை என்றும் அம்பாளுடைய மந்த்ரத்திற்கும் வித்யை என்றும் சொல்லப்படுகிறது.


 சகலவிதமான மந்த்ரங்களுக்குள்ளும் மிக உயர்ந்த-
உன்னதமான மந்த்ரம் ‘ஸ்ரீ வித்யை’

ஆதிசக்தியாக, சர்வேச்வரியாக, ராஜ்யலக்ஷ்மியாக விளங்கும் ஸ்ரீராஜராஜேஸ்வரி தன்னை ஆச்ரயித்தவர்களுக்கு ராஜபீடங்களைக் கொடுக்கவல்லவள்.

சிருஷ்டி, ஸ்திதி, சம்ஹாரம் என்னும் மூவகை கிருத்யங்களுக்காக மும்மூர்த்திகளைத் தோற்றுவித்த மூல சக்தி-பரதேவதை அவளே!

சந்த்ரமௌலீஸ்வர லிங்கத்தின் சக்தியாக ஸ்ரீ சக்ர ரூபத்தில் பூஜை பண்ணுவது திரிபுரசுந்தரிக்குத்தான்.

 சிவன் மாதிரியே - அவளுக்கும் பூர்ண சந்த்ரசம்பந்தம் நிறைய உண்டு. அவருடைய சிரசில் பூரண சந்த்ரன் இருக்கிதென்றால் - இவள் வாசம் பண்ணுவதே பூர்ண சந்த்ர மத்தியில் தான்.

சந்த்ர மண்டல மத்யகா என்று ஸஹஸ்ரநாமத்தில் போற்றுகிறோம்..
அம்பாளுக்கு விசேசமான திதி பௌர்ணமி..

அவளே நம்முடைய சிரசின் உச்சியில் பூர்ணசந்த்ரனாக
அம்ருதத்தைக் வர்ஷிக்கும் அமிருதவர்ஷிணி

திவ்ய தம்பதிகள் ஜில்ஜிலுவென்று அழகாக அம்ருத கிரணங்களைக் கொட்டிக் கொண்டிருக்கும் சந்த்ர சம்பந்தத்துடன் லோகத்தின் தாபத்தையெல்லாம் போக்கி ஆனந்தம் கொடுப்பதற்காகச் சந்த்ரமௌளியாகவும்; திரிபுரசுந்தரியாகவும் இருக்கிறார்கள்.

அவள் சிரசிலும் சந்தரகலை உண்டு. சாரு சந்த்ர கலாதரா என்று சகஸ்நாமத்தில் வருகிறது. மஹாதிரிபுரசுந்தரி - சந்த்ர மண்டல மத்யகா
சாரு சந்த்ர கலாதரா என்ற நாமாக்கள் ஆனந்தமளிப்பவை..

கற்பக விருஷத்தினடியில் நினைத்ததை, நினைத்த மாத்திரத்திலே பெறுவது போல, சகல நற்காரியங்களும் ஸ்ரீசக்ரத்தின் கீழ் அமர்ந்து வேண்ட கை கூடும்

ஸ்ரீ மஹா மேரு 


File:Srichakra.jpg


ஸ்ரீசக்ரங்களைத் தாடங்கங்களாக அணிந்த அன்னை அகிலாண்டேஸ்வரி







40 comments:

  1. //அபிராமி அந்தாதியில் அபிராமி பட்டர் " ஒளி நின்ற கோணங்கள் ஒன்பதும் மேவி உறைபவளே" என்று அம்மையின் இருப்பிடமாக ஸ்ரீசக்ரம் விளங்குதை கூறுகின்றார்.

    //சக்ரங்களுக்கெல்லாம் சிரேஷ்டமானது ஸ்ரீசக்ரம்.
    அது தேவியின் திருவருட் சக்கரம்.

    அரிசி மாவு அல்லது மஞ்சள் பொடி ஆகியவற்றினால் யந்திரம் அமைத்து அந்த யந்திரத்திலே சக்தி வீற்றிருக்கிறாள் என நினைத்து வழிபடல் ஸ்ரீ சக்கர பூசை வழிபாடு எனப்படும்.//

    மிகவும் அருமையான தகவல்கள். முழுவதும் படித்து விட்டு வருகிறேன்.

    ReplyDelete
  2. முக்தி அடைந்தோம் நாங்கள் !
    அருமை !

    ReplyDelete
  3. முதல் படத்தில் விரிந்த செந்தாமரை மேல் அழகாக ஒயிலாக நின்றிருக்கும் ஸ்ரீ லக்ஷ்மி அம்மன் கைகளிலிருந்து கொட்டிடும் ஐஸ்வர்யம், கரங்களில் வைத்திருக்கும் தாமரை, பூர்ணகும்பம், மாலையுடன் யானையார், அந்த அன்னபக்ஷி, அழகிய நீர் நிலை முதலியவற்றுடன் மிகச்சிறப்பாக உள்ளது.

    ReplyDelete
  4. அடுத்த படம் படு அமர்க்களமாக கண்ணைப்பறிப்பதாக உள்ளது.

    அழகிய விரிந்த செந்தாமரை மேல் ஒளிவீசிடும் வண்ணம் நீலநிறத்தில் காட்டப்பட்டுள்ள அந்த ஸ்ரீசக்ரம் நல்ல அழகோ அழகு!;))

    ReplyDelete
  5. மூன்றாவது படமும் ஐந்தாவது படமும் காட்சியளிக்காமல் உள்ளனவே! முடிந்தால் காட்சியளிக்கச்செய்யவும்.

    கடைசிக்கு முந்திய படத்தில் சிம்ஹ வாகனத்தில் அமர்ந்திருக்கும் உற்சவ அம்மன் A1. நல்ல பிரைட்டோ பிரைட், அம்பாளின் அரக்குப்புடவை, கரும் பச்சை பார்டருடன், மலர் மாலைகள், திருவாசி சஹிதம் ரொம்பப்பிரமாதம்.
    சிங்கத்தின் பற்களும், விழியும் பார்க்கவே பயங்கரம், வெள்ளியில் செய்த சிம்ஹ வாகனம் போலத்தெரிகிறது.

    ReplyDelete
  6. ஸ்ரீசக்ரம்,ஸ்ரீசக்ர வழிபாடு ,அதன் பலன்கள் எல்லாம் பற்றி விளக்கமாகச் சொல்லியிருக்கிறீர்கள்.அழகிய படங்கள்.நன்றி.

    ReplyDelete
  7. //ஒன்றிலிருந்து ஒன்று தோன்றியது. பின்பு அவை இரண்டுமே இரண்டறக் கலந்து ஒன்றுபட்டு விடுவதால் அம்பாளை பிரகாச-விமர்ச-பரப்ரம்மஸ்வரூபிணி என்று போற்றுகிறோம்.//

    //அம்பாளாகிய ஸ்ரீசாரதையை வழிபடும் சாஸ்திரத்திற்கு ஸ்ரீவித்யை என்றும் அம்பாளுடைய மந்த்ரத்திற்கும் வித்யை என்றும் சொல்லப்படுகிறது.

    சகலவிதமான மந்த்ரங்களுக்குள்ளும் மிக உயர்ந்த-உன்னதமான மந்த்ரம்
    ‘ஸ்ரீ வித்யை’

    ஆதிசக்தியாக, சர்வேச்வரியாக, ராஜ்யலக்ஷ்மியாக விளங்கும் ஸ்ரீராஜராஜேஸ்வரி தன்னை ஆச்ரயித்தவர்களுக்கு ராஜபீடங்களைக் கொடுக்கவல்லவள்.

    சிருஷ்டி, ஸ்திதி, சம்ஹாரம் என்னும் மூவகை கிருத்யங்களுக்காக மும்மூர்த்திகளைத் தோற்றுவித்த மூல சக்தி-பரதேவதை அவளே!

    சந்த்ரமௌலீஸ்வர லிங்கத்தின் சக்தியாக ஸ்ரீ சக்ர ரூபத்தில் பூஜை பண்ணுவது திரிபுரசுந்தரிக்குத்தான்.//

    மிகவும் அழகிய விளக்கங்கள் இவை.

    ஸ்ரீசக்ர ராக சிம்ஹாசனோபரி ஸ்ரீ லலிதாம்பிகையே ..... என்ற பாட்டில் இந்தப்பதிவரின் பெயர் தனியாக ஓரிடட்தில் வரும். அப்போதெல்லாம் நான் நினைத்து மிகவும் மகிழ்வதுண்டு.

    ReplyDelete
  8. //சிவன் மாதிரியே - அவளுக்கும் பூர்ண சந்த்ரசம்பந்தம் நிறைய உண்டு. அவருடைய சிரசில் பூரண சந்த்ரன் இருக்கிதென்றால் - இவள் வாசம் பண்ணுவதே பூர்ண சந்த்ர மத்தியில் தான்.

    சந்த்ர மண்டல மத்யகா என்று ஸஹஸ்ரநாமத்தில் போற்றுகிறோம்..
    அம்பாளுக்கு விசேசமான திதி பௌர்ணமி..

    அவளே நம்முடைய சிரசின் உச்சியில் பூர்ணசந்த்ரனாக அம்ருதத்தைக் வர்ஷிக்கும் அமிருதவர்ஷிணி//

    ஸ்ரீசக்ரத்தின் நடுவே சிரசில் பிறைச்சந்திரனோடும், கையில் கரும்புடனும் காட்டியிருக்கும் காஞ்சி காமாக்ஷி அம்மன் எப்போதுமே என்னை பிரமிக்க வைக்கும். அந்த அம்பாள் முகத்தில் தான் எத்தனை தேஜஸ் கொட்டிக்கிடக்கிறது! ;)))))

    ReplyDelete
  9. //கற்பக விருஷத்தினடியில் நினைத்ததை, நினைத்த மாத்திரத்திலே பெறுவது போல, சகல நற்காரியங்களும் ஸ்ரீசக்ரத்தின் கீழ் அமர்ந்து வேண்ட கை கூடும்//

    மிகவும் அற்புதமாக அழகாகச் சொல்லியுள்ளீர்கள். இந்த வரிகளுக்கு மேல் காட்டப்பட்டுள்ள அம்பாளின் நகைகள் யாவும் ஜொலிக்கின்றன.

    பச்சை நீலம் முத்து பவழம் போன்ற நவரத்தினக்கற்கள் பதித்த ஆபரணங்களும், தலையில் கொண்டையும், கையில் கிளியும், வெண்பட்டு வஸ்திரமும், முரட்டு புஷ்ப மாலைகளும் எல்லாமே ஜோர் ஜோர்!;)))

    ReplyDelete
  10. //திவ்ய தம்பதிகள் ஜில்ஜிலுவென்று அழகாக அம்ருத கிரணங்களைக் கொட்டிக் கொண்டிருக்கும் சந்த்ர சம்பந்தத்துடன் லோகத்தின் தாபத்தையெல்லாம் போக்கி ஆனந்தம் கொடுப்பதற்காகச் சந்த்ரமௌளியாகவும்; திரிபுரசுந்தரியாகவும் இருக்கிறார்கள்.//

    அது போன்ற திவ்ய தம்பதியினர் மிகவும் கொடுத்து வைத்தவர்களே

    ReplyDelete
  11. //ஸ்ரீசக்ரங்களைத் தாடங்கங்களாக அணிந்த அன்னை அகிலாண்டேஸ்வரி//

    ஆஹா, எங்கள் ஊர் திருச்சி திருவானைக்கா அகிலாண்ட கோடி பிரும்மாண்ட நாயகி அல்லவோ!
    அந்த அம்மனே அழகு அதிலும் காதுகளில் ஸ்ரீசக்ரங்களையே தாடகங்களாக அணிந்திருப்பது அந்த அழகுக்கு மேலும் அழகு சேர்ப்பதல்லவோ! ;))))

    ReplyDelete
  12. இன்றைய தங்களின் பதிவினில் ஸ்ரீசக்ர வழிபாடு பற்றிய பல்வேறு தகவல்கள் அறிய முடிந்தது.

    வழக்கம் போல பல அழகழகான் படங்களும் இணைக்கப்பட்டுள்ளன.

    கடைசி படத்தில் ஓம் என்ற பிரணவ மந்திரத்தைக் கையில் ஏந்தியுள்ள சிவனும், அவர் கழுத்தில் பாம்பும், சூலாயுதமும், உடுக்கையும், புலித்தோலும், அவர் சிரசில் கங்கையும், இன்னொரு பாம்பும், பிறைச்சந்திரனும், காதில் குண்டலங்களுடன் கருணை பொழியும் பார்வையும், கழுத்தில் ருத்ராக்ஷ மாலைகளும்; தம் இரு குழந்தைகளான பிள்ளையார் + முருகனை மடியில் அமர்த்திக்கொண்டுள்ள அன்னை பராசக்தி பார்வதி தேவியும், இருபுறமும் இரு சிவலிங்கங்களும், அருகே சமத்தாக அமர்ந்திருக்கும் காளையார், எலியார் + மயிலாரும், சிவ குடும்பத்தி க்ரூப் போட்டோ போல அழகாகக் காட்டப்பட்டுள்ளது, அருமை.

    ReplyDelete
  13. மூன்றாவது படமும் (ஸ்ரீசக்ர கோலம்) ஐந்தாவது படமும் (அம்பாள்+ஸ்ரீசக்ரம் பதித்த அழகிய வட்டத்தட்டுக்களும்) இப்போது தெரிகின்றன. தரிஸனம் செய்விக்க ஏற்பாடு செய்ததற்கு ஸ்பெஷல் நன்றிகள்.

    350 அடி உயர ஸ்ரீசக்ர கோபுரமும், இன்னும் மற்ற எல்லாப்படங்களுமே பார்க்கப்பரவஸம் அளிக்கினறன.

    கடுமையான தங்களின் உழைப்புக்கும், அருமையான படங்கள்,விளக்கங்கள் மற்றும் பதிவு+பகிர்வுகளுக்கு என் மனமார்ந்த நன்றிகள். பாராட்டுக்கள்.

    ReplyDelete
  14. "அடியார்கள் வாழ,இப்புவி மாந்தர்கள் வாழ,தண்தமிழ் நூல் வாழ,கடல் சூழ்ந்த மண்ணுலகம் வாழ,
    மணிராஜின் ராஜராஜேஸ்வரியே! இன்னுமொரு நூற்றாண்டிரும்!"

    ReplyDelete
  15. எல்லையற்ற சக்தி,ஞானம், கல்வி, ஆரோக்யம்,முக்தி என அனைத்தையும் நல்கும் ஸ்ரீஸக்கரம்.நமது திரு நாட்டில் 180-க்கும் மேல் உள்ள ஸ்தலங்களில் ஸ்ரீசக்கரம் உள்ளது.

    ReplyDelete
  16. தங்கள் தளத்தில் "comment"-ல் படத்தினை இணைக்க வசதியாக "N.C. Code"-நை நிறுவினால் ஸ்ரீஸ்க்ரம் குறித்த படம் இணைக்க ஏதுவாக இருக்கும்.

    ReplyDelete
  17. ஸ்ரீ சக்ரம் உள்ள சில ஸ்தலங்கள்:- திருஆனைக்கா [அம்பாளின் உக்கிரத்தினை தணிக்க,ஆதி சங்கரர் ஸ்ரீ சக்ர தாடங்கத்தினை அம்பாளின் காதுகளில் சாற்றினார்},திருவிடை மருதூர், வேளச்சேரி, மாங்காடு, திருஒற்றியூர், குற்றாலம், --இன்னும் பல.

    ReplyDelete
  18. நல்ல பதிவு. ரசித்தேன்.

    ReplyDelete
  19. Aha Aha Ahaha
    Arpudam rajeswari.
    Ambalin karunai vadiva srichakranayaki Kamakshi
    Ullam urgivalikirathu dear.
    Thanks thanks a lot for this post.
    viji

    ReplyDelete
  20. காஞ்சிபுரம் நகரமே ஸ்ரீ சக்ரவடிவமானது.இங்கு பரமேஸ்வரனால் பிரதிஷ்டை செய்யப்பட்ட 'காமகோடி' என்னும் ஸ்ரீ சக்ரத்தில் அம்பாள் காமாஷி நித்ய சா ந்னித்தியமாக விளங்குகிறாள்.

    ReplyDelete
  21. வை.கோபாலகிருஷ்ணன் said...
    //அபிராமி அந்தாதியில் அபிராமி பட்டர் " ஒளி நின்ற கோணங்கள் ஒன்பதும் மேவி உறைபவளே" என்று அம்மையின் இருப்பிடமாக ஸ்ரீசக்ரம் விளங்குதை கூறுகின்றார்.

    //சக்ரங்களுக்கெல்லாம் சிரேஷ்டமானது ஸ்ரீசக்ரம்.
    அது தேவியின் திருவருட் சக்கரம்.

    அரிசி மாவு அல்லது மஞ்சள் பொடி ஆகியவற்றினால் யந்திரம் அமைத்து அந்த யந்திரத்திலே சக்தி வீற்றிருக்கிறாள் என நினைத்து வழிபடல் ஸ்ரீ சக்கர பூசை வழிபாடு எனப்படும்.//

    மிகவும் அருமையான தகவல்கள். முழுவதும் படித்து விட்டு வருகிறேன்./

    மிக அருமையான கருத்துரைக்கு இனிய நன்றிகள் ஐயா..

    ReplyDelete
  22. எங்கள் முன்னோர்களால் பூஜிக்கப்பட்ட ஸ்ரீ ஸ்க்ரம் எங்கள் குடும்பத்தில் உள்ளது. எனது அம்மாவிற்கு பல ஆண்டுகளுக்கு முன் ஸ்ரீ ஸ்ருங்கேரி ஸ்வாமிகள் மதுரையில் மீனாஷி கோவிலில் வைத்து மந்திர உபதேசம் செய்து அருளினார். அருமையான பதிவு. வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  23. ஸ்ரவாணி said...
    முக்தி அடைந்தோம் நாங்கள் !
    அருமை !/

    அருமையான கருத்துரைக்கு இனிய நன்றிகள் தோழி..

    ReplyDelete
  24. சந்திர வம்சம் said...
    "அடியார்கள் வாழ,இப்புவி மாந்தர்கள் வாழ,தண்தமிழ் நூல் வாழ,கடல் சூழ்ந்த மண்ணுலகம் வாழ,
    மணிராஜின் ராஜராஜேஸ்வரியே! இன்னுமொரு நூற்றாண்டிரும்!"/

    இனிய வாழ்த்துகளுக்கு நன்றி தோழி..

    ReplyDelete
  25. வை.கோபாலகிருஷ்ணன் said...
    முதல் படத்தில் விரிந்த செந்தாமரை மேல் அழகாக ஒயிலாக நின்றிருக்கும் ஸ்ரீ லக்ஷ்மி அம்மன் கைகளிலிருந்து கொட்டிடும் ஐஸ்வர்யம், கரங்களில் வைத்திருக்கும் தாமரை, பூர்ணகும்பம், மாலையுடன் யானையார், அந்த அன்னபக்ஷி, அழகிய நீர் நிலை முதலியவற்றுடன் மிகச்சிறப்பாக உள்ளது.//

    அழகான கருத்துரைகளால் பதிவினைப்பெருமைப்படுத்தியமைக்கு நன்றி ஐயா..

    ReplyDelete
  26. பழனி.கந்தசாமி said...
    நல்ல பதிவு. ரசித்தேன்./

    நன்றி ஐயா..

    ReplyDelete
  27. viji said...
    Aha Aha Ahaha
    Arpudam rajeswari.
    Ambalin karunai vadiva srichakranayaki Kamakshi
    Ullam urgivalikirathu dear.
    Thanks thanks a lot for this post.
    viji/

    அற்புதமான கருத்துரைகளால் மனம் நிறைவடைந்தது.. நன்றி தோழி..

    ReplyDelete
  28. ஸ்ரீ சக்ரம் மகிமை, படங்களுடன் அருமை.

    ReplyDelete
  29. சென்னை பித்தன் said...
    ஸ்ரீசக்ரம்,ஸ்ரீசக்ர வழிபாடு ,அதன் பலன்கள் எல்லாம் பற்றி விளக்கமாகச் சொல்லியிருக்கிறீர்கள்.அழகிய படங்கள்.நன்றி./

    அழகிய கருத்துரைக்கு இனிய நன்றிகள் ஐயா..

    ReplyDelete
  30. வை.கோபாலகிருஷ்ணன் said...
    இன்றைய தங்களின் பதிவினில் ஸ்ரீசக்ர வழிபாடு பற்றிய பல்வேறு தகவல்கள் அறிய முடிந்தது.

    வழக்கம் போல பல அழகழகான் படங்களும் இணைக்கப்பட்டுள்ளன.

    கடைசி படத்தில் ஓம் என்ற பிரணவ மந்திரத்தைக் கையில் ஏந்தியுள்ள சிவனும், அவர் கழுத்தில் பாம்பும், சூலாயுதமும், உடுக்கையும், புலித்தோலும், அவர் சிரசில் கங்கையும், இன்னொரு பாம்பும், பிறைச்சந்திரனும், காதில் குண்டலங்களுடன் கருணை பொழியும் பார்வையும், கழுத்தில் ருத்ராக்ஷ மாலைகளும்; தம் இரு குழந்தைகளான பிள்ளையார் + முருகனை மடியில் அமர்த்திக்கொண்டுள்ள அன்னை பராசக்தி பார்வதி தேவியும், இருபுறமும் இரு சிவலிங்கங்களும், அருகே சமத்தாக அமர்ந்திருக்கும் காளையார், எலியார் + மயிலாரும், சிவ குடும்பத்தி க்ரூப் போட்டோ போல அழகாகக் காட்டப்பட்டுள்ளது, அருமை.

    அருமையுடன் அற்புதமாக அளித்த அத்தனை கருத்துரைகளுக்கும் மனம் நிறைந்த இனிய நன்றிகள் ஐயா..

    ReplyDelete
  31. சந்திர வம்சம் said...
    எங்கள் முன்னோர்களால் பூஜிக்கப்பட்ட ஸ்ரீ ஸ்க்ரம் எங்கள் குடும்பத்தில் உள்ளது. எனது அம்மாவிற்கு பல ஆண்டுகளுக்கு முன் ஸ்ரீ ஸ்ருங்கேரி ஸ்வாமிகள் மதுரையில் மீனாஷி கோவிலில் வைத்து மந்திர உபதேசம் செய்து அருளினார். அருமையான பதிவு. வாழ்த்துக்கள்./

    நெகிழவைக்கும் பகிர்வு.. உபதேசம் பெற்ற வமசம்.. வாழ்த்துகள்..

    ReplyDelete
  32. FOOD NELLAI said...
    ஸ்ரீ சக்ரம் மகிமை, படங்களுடன் அருமை./

    அருமையான கருத்துரைக்கு நன்றி..

    ReplyDelete
  33. ஸ்ரீ சக்கர மகிமை வழிபாடு பற்றிய விளக்கம் படங்கள் என்று எல்லாமே நல்லா இருக்கு நன்றி

    ReplyDelete
  34. ஸ்ரீசக்கரத்தினைப் பற்றி அழகிய படங்களுடன்,சிறப்பான பதிவு. பகிர்வுக்கு நன்றி.

    ReplyDelete
  35. காணாதனக் கண்டோம் என்பதுபோல
    அறியாதன எல்லாம் தங்களால் அறிந்தோம்
    அருமையான பதிவுக்கு மனமார்ந்த நன்றி
    தொடர வாழ்த்துக்கள்

    ReplyDelete
  36. கருணை ததும்பும் முகத்துடனும், வீரம் செறிந்த பாவனையோடு வெண்பட்டுடுத்தி அம்பாள் சேவை சாதிக்கும் விதமும் காணக் கண்ணிரண்டு போதவில்லை தோழி.
    வெண்மையான மனத்துடன் நீ பிறருக்கு உதவினால் என் கருணை மிகுந்த கடைக்கண் பார்வை உன்மேல் விழும் என்று சொல்வது போலல்லவா இருக்கிறது அம்மையின் தோரணை...

    கடைசியாக இருக்கிற படத்தில் சிவ பெருமானின் பார்வை, வசியப்படுத்துகிறது தோழி. மிகவும் ரசித்தேன்.

    முதலில் இருந்து பத்தாவது படத்தில் அருள் பாலிக்கும் அம்பிகை ஸ்ரீ சக்கரத்தில் தோன்றுவது கூடுதல் சிறப்பு.

    தெய்வதரிசனத்தை கணினி மூலமாகவே எம் கைகளில் தவழச் செய்தது இந்தப் பதிவு.

    பகிர்வுக்கு நன்றிகள் பல தோழி.

    ReplyDelete
  37. மிகவும் அழகான படங்களுடன் அற்புதமான தகவல்களுடன் சிறப்பான பதிவு

    ReplyDelete
  38. 1985+12+1=1998 ;)))))

    முத்தான மூன்று பதில்களுக்கு நன்றிகள்.

    ReplyDelete