Monday, October 17, 2011

சிந்தை மகிழும் சிவத்ரிசனம்


Free Lord Shiva Glitter Graphics Myspace Orkut Friendster Multiply Hi5 Websites Blogs


கொட்ட மேகமழுங் கொள்ளம் பூதூர்
நட்டம் ஆடிய நம்பனை யுள்கச்
செல்ல வுந்துக சிந்தை யார்தொழ
நல்கு மாறருள் நம்பனே.

திருஞான சம்பந்தர்  வரும் போது வழியில் உள்ள வெட்டாறில் வெள்ளம் ஏற்பட்டது.  சிவனை தரிசிக்காமல் செல்ல கூடாது என்பதில் தீவிரமாக இருந்தார் சம்பந்தர்.  ஆற்றின் கரையில் இருந்த ஓடம் ஒன்றை அவிழ்க்க செய்து அதன் மீது தன் அடியவர்களுடன் ஏறினார்.


சோழ நட்டில் பஞ்சத்தலங்கள் உள்ளன. திருக்கருகாவூர் எனப்படும் பாதிரி வனம், அவளி நல்லூர் என்ற முல்லை வனம், அரித்து வாரமங்கலம் என்னும் வன்னி வனம், ஆலங்குடி என்னும் புன்னை வனம், திருக்கொள்ளம்புதூர் என்னும் வில்வவனம் ஆகிய.. ஐந்து கோவில்களையும் இணைக்கும் ஒரு சம்பிரதாயம், அதிகாலை ஆரம்பித்து நடு இரவு வரையிலான ஐந்து வரிசையான அடுத்தடுத்த கால பூஜையில் கலந்து கொள்வதாகும்.
தல விருட்சம் வில்வம்
[Gal1]
 திருக்கருகாவூரில் உஷத்கால பூஜை,
அவளி நல்லூரில் கால சந்தி,
அரித்துவார மங்கலத்தில் உச்சிகாலம்,
ஆலங்குடியில் சாயரட்சை என்று பூஜைகளில் கலந்து கொண்டுவிட்டு, திருக்கொள்ளம்புதூர் போய் அர்த்த சாம பூஜையில் கலந்துகொள்ள வேண்டும் அவர்.

தீபாவளி தின அமாவாசை இருள் சூழ்ந்த  பொழுதில்  அடியார்களுடன் புறப்பட்டு முள்ளி ஆற்றைக் கடப்பதற்காக வந்தார். கட்டுக்கடங்காத வேகத்துடனும் பெருத்த ஓசையுடனும் ஓடும் அந்த வெள்ளத்தைக் கண்டு , சம்பந்தர் கட்டப்பட்டிருந்த படகை அவிழ்த்து தாம் ஏறி உட்கார்ந்து சீடர்களையும் அழைத்தார்.

 வெள்ளத்தையும், திசையையும் அறிய முடியாத அமாவாசைக் கருமையையும் கண்டு பயந்து தடுமாற்றம் கொள்ள சம்பந்தர் தேவாரத் திருப்பதிகம் பாட ஈசனே படகுக்கு முன்னால் போய் வெள்ளத்தினூடே வழியமைத்துக் கொடுக்கவே  பாதுகாப்பாக அக்கரை போய்ச் சேர்ந்தனர்.

தமது நாவையே ஓடக்கோலாக கொண்டு, 
"கொட்டமே கமழும் கொள்ளம்பூதூர் 
நட்டமாடிய நம்பனை யுள்கச் செல்வுந்துக 
சிந்தை யார்தொழ நல்கு மாறரு ணம்பனே' எனும் திருப்பதிகம் பாடினார்.


இந்த ஓடத்திருவிழா ஆண்டு தோறும் ஐப்பசி அமாவாசைக்கு மறுநாள் சிறப்பாக நடக்கிறது.
சம்பந்தரின் உற்சவ சிலையை படகில் வைத்து ஓதுவார்கள். தேவாரம் ஓத முள்ளி ஆற்றின் இக்கரையிலிருநது அக்கரைக்குப் படகு போகும். அதிகாலை சூரியோதயத்துக்கு முன்னால் ஓடம் கரை சேரும்.
ஓடத்தில் வரும் சம்பந்தர்

 ரிஷபவாகனத்தில் வில்வனநாதர், சம்பந்தரை எதிர்கொண்டழைக்கும் வகையில் காத்திருப்பார்.
இந்த ஓடத் திருவிழாவுக்காகவே உண்டானதுபோல ஒவ்வொரு வருடமும் ஆற்றில் நீர் கரைபுரண்டோடும் காட்சியும் கண்கொள்ளாதது ஆகும்.
சம்பந்தரின் சிவ தரிசனம்
[Gal1]
கும்ப கோணத்திலிருந்து 28 கி. மீ. தொலைவில் உள்ளது. இங்குதான் முந்தின நடு இரவில் நடக்க வேண்டிய அர்த்தசாம பூஜை, தீபாவளிக்கு மறுநாள் அதிகாலையில் மேற்கொள்ளப்படும் இந்த புதுமையான வழக்கம் 

அர்த்தசாம பூஜை அந்த அதிகாலை நேரத்தில் மேற்கொள்ளப்படும். தீபாவளிக்கு அடுத்த நாள் மட்டுமே இவ்வாறு காலம் தவறிய பூஜை நடைபெறுகிறது

கோயில் 5 நிலை ராஜகோபுரத்துடன் கிழக்கு நோக்கி 75 அடி உயரத்தில் 2 பிரகாரங்களுடன் அமைந்துள்ளது.
[Image1]

இறைவன் சுயம்பு லிங்கமாக அருள்பாலிக்கிறார் மூலவர் வில்வனநாதர்,
சிவன் சன்னதி

அம்பாள் செளந்தரநாயகி என்ற அழகு நாச்சியாருடன் பக்தர்கள் அனைவரையுமே திருஞானசம்பந்தராக பாவித்து அருள் பாலிக்கிறார்.
அம்மன் சவுந்தரநாயகி

[Gal1]
உள்பிரகாரங்களில் பொய்யாத விநாயகர், வலம்புரிவிநாயகர், முருகன், ஆதிவில்வநாதர், கஜமுக்தீஸ்வரர், பஞ்சலிங்கம், கஜலட்சுமி ஆகிய சன்னதிகள் உள்ளன. பிரம்மா, அகத்தியர், அர்ச்சுனன் ஆகியோர் வழிபாடு செய்துள்ளனர்.
[Gal1]
கோயில் மூன்றாம் குலோத்துங்க சோழன், மூன்றாம் ராஜராஜசோழன் இவர்கள் காலத்தில் கட்டியிருக்க வேண்டும் என கல்வெட்டுகள் கூறுகிறன.

பிரம்மா தனக்கு ஏற்பட்ட பிரம்மஹத்தி தோஷம் நீங்க வழிபாடு செய்த தலங்களில் இதுவும் ஒன்று.
[Gal1]
தலவிருட்சம் வில்வம். கூவிளம் என்பதற்கு வில்வம் என்பது பெயர். கூவிளம்புதூர் என்ற பெயர் மருவி காலப்போக்கில் கொள்ளம்புதூர் ஆனது.






[god-shiva-dance-with-god-ganesha-snap.jpg]

21 comments:

  1. இன்றும் படங்களுடன் அருமை

    ReplyDelete
  2. அருமையான பகிர்வுக்குப் பாராட்டுக்கள்.

    ReplyDelete
  3. முதலில் கொடுத்துள்ள அனிமேஷன் படம் மிக அற்புதம்.சம்பந்தர் பற்றிய வரலாற்று தகவல் அருமை.

    ReplyDelete
  4. தகவல் படங்கள் பகிர்வுக்குப் பாராட்டுக்கள். thanks

    ReplyDelete
  5. படங்கள் அருமை.

    கூவிளம் புதூர் இறைவனை நான் முன்பே பார்த்து இருக்கிறேன்.

    இப்போது உங்கள் பதிவில் மீண்டும் தரிசிக்கும் பாக்கியம் கிடைத்தது.

    ReplyDelete
  6. இறுதிப் படம் அற்புதக்காட்சி. நல்ல இடுகை வாழ்த்துகள்.
    வேதா. இலங்காதிலகம்.
    http://www.kovaikkavi.wordpress.com

    ReplyDelete
  7. அனைத்து படங்களும் அருமை......

    நன்றி,
    கண்ணன்
    http://www.tamilcomedyworld.com

    ReplyDelete
  8. நமஸ்தே அஸ்து பகவன் விச்வேச்வராய, மஹாதேவாய த்ர்யம்பகாய த்ரிபுராந்தகாய
    த்ரிகாக்னி காலாய காலாக்னி ருத்ராய நீலகண்டாய ம்ருத்யுஞ்சயாய ஸர்வேச்வராய ஸதாசிவாய ஸ்ரீமன் மஹாதேவாய நம:

    ReplyDelete
  9. வழக்கம்போல் எல்லாப் படங்களும் விளக்கங்களும் அருமை.

    1) முழு கோபுர தரிஸனமும்,

    2) அந்த செளந்தரநாயகி அம்மனும்,

    3) கீழிருந்து நாலாவது படத்தில் உள்ள
    ரிஷப வாகனத்தில் பார்வதி ஸமேதராய் பரமேஸ்வரனும்,
    நம் இடது புறம் முரட்டு மூஷிக வாகனத்தில் நம் தொந்திப்பிள்ளையாரும்,
    நம் வலது புறத்தில் வல்லீ தேவஸேனா ஸமேத ஸ்ரீ சுப்ரமண்ய ஸ்வாமியும் உள்ள
    அந்த கோயில் நுழைவாயிலும்

    எனக்கு மிகவும் பிடித்துள்ளது. vgk

    ReplyDelete
  10. அருமையான பதிவு.
    அருமையான படங்கள்
    வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  11. படங்களும் பதிவும் அருமை
    குறிப்பாக சிவனின் நடனம் மிக மிக அருமை
    அருமையான பதிவுகளைத் தொடர்ந்து தருவதற்கு
    மனமார்ந்த நன்றி தொடர வாழ்த்துக்கள்

    ReplyDelete
  12. ஐந்து கால பூஜையில் ஐந்து ஸ்தலங்கள்,புதிய தகவல் ஆகும். நன்றி [P.S.]

    ReplyDelete
  13. முதல் சிவன் உக்கிர சிவனாக தகிக்கிறார்! வித்தியாசமான படம். நர்த்தன சிவனும் நன்றாக இருக்கிறார்.

    ReplyDelete
  14. என்னாருடைய ஈசனின்
    இன்னருள் பெற்றோம் சகோதரி.

    ReplyDelete
  15. படங்களும் பதிவும் அருமை...வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  16. நல்ல படங்களுடன் அருமையான விளக்கங்கள்..எப்படி இவ்வளவு தகவல்கள் உங்களுக்கு கிடைக்கின்றன!!!

    ReplyDelete
  17. ஜடாமுடியிலிருந்து பாய்ந்து வரும் கங்காதேவி அருமை.

    ReplyDelete
  18. JAI HANUMAN ;)

    VGK

    ReplyDelete
  19. அருமையான பதிவு . நன்றி

    ReplyDelete