Monday, October 31, 2011

பச்சை மயில் வாகனன்







குமரக் கடவுளைத் தமிழ்க் கடவுள் என்று சொந்தமும், பந்தமும் கொண்டாடுவோர்க்குக் குறைச்சலில்லை.
கந்தன் திருறணிந்தால் கண்டபிணி ஓடிவிடும்
குந்தகங்கள் மாறி இன்பம் குடும்பத்தை நாடி வரும்
வேலை வணங்குவதே வேலை.
சுக்குக்கு மிஞ்சிய வைத்தியமில்லை; சுப்பிரமணியருக்கு மிஞ்சிய தெய்வமில்லை.
வயலூர் இருக்க அயலூர் தேவையா?
காசுக்குக் கம்பன் கருணைக்கு அருணகிரி.
அப்பனைப் பாடிய வாயால் - ஆண்டிச் சுப்பனைப் பாடுவேனா?
முருகனுக்கு மிஞ்சிய தெவமில்லை;மிளகுக்கு மிஞ்சிய மருத்துவம் இல்லை.
சட்டியில் இருந்தால் அகப்பையில் வரும் (சஷ்டியில் இருந்தால் அகப்பையில் வரும்)
கந்தபுராணத்தில் இல்லாதது எந்த புராணத்திலும் இல்லை.
கந்தன் களவுக்குக் கணபதி சாட்சியாம்
பழநி பழநின்னா பஞ்சாமிர்தம் வந்திடுமா?
சென்னிமலை சிவன்மலை சேர்ந்ததோர் பழனிமலை.
செந்தில் நமக்கிருக்கச் சொந்தம் நமக்கெதற்கு?
திருத்தணி முருகன் வழித்துணை வருவான்
வேலனுக்கு ஆனை சாட்சி.
வேலிருக்க வினையுமில்லை; மயிலிருக்கப் பயமுமில்லை.
செட்டிக் கப்பலுக்குச் செந்தூரான் துணை.--
என்பவை தமிழ்க்கடவுளைப் பற்றி பாமரர் வாயிலும் பயின்று வரும் அழகிய  இனிய பழமொழிகள்

பச்சை மயில் வாகனனே 
பழனி மலை பாலகனே 
கச்சை யிலே உன் பெயரை 
கச்சி தமாய் கட்டிக் கொண்டோம் 

பச்சைமயில் மீதேறி இக்கணமே வந்திடுவாய

திருச்செந்தூர் வடிவேலும் திருத்தணிகை மாமயிலும்
பழமுதிர்சோலைப் பன்னீரும், சுவாமிமலை திருநீறும்
பழனிமலைப் பஞ்சாம்ருதமும், பரங்குன்றச் சந்தனமும்
உள்ளம் தன்னில் இன்பம் தந்து, குமரன் அருளைப் பாடி வரும்!
பிள்ளைத் தமிழை அள்ளித் தந்து, பேரும் புகழும் சேர்த்து விடும்!

மரகத மாமயிலேறும் ஆறுமுக வடிவேலா
இளம்பச்சைக்கும் இச்சைக்கும் நடுப்பொருளே
உன் ஏறுமயில் நடனம் கண்டலாச்சே
புனிதமான அறுபடை வீடுடையாய் 
புகுமதக் களிறு நடையுடையாய்
அன்னயினும் சிறந்ததான அருளோடு 
நிறைந்ததான அறுமுகவடிவே ...வருவாய்..
அருள்வாய்.. குரு குஹ பரம்பொருளே!
.
முத்துக் குமரன், பக்திச் சரவணன், வைத்திய நாதனை மறவேன்! 
முடியுடை மன்னன், திருமுடி அருகே, கொடியுடைச் சேவலைக் கண்டேன்! 
கொத்தும் நாகம் பொல்லாதாக கத்தும் தோகையைக் கண்டேன்! 
கோலம் மாறிட, ஞானக் கண்களும், ஊனக் கண்களும் கொண்டேன்
!
 


 மனைவி மக்கள் சுற்றமுடன் கந்தா மலையேறித் தொண்டனிட்டேன்
வினைகள் தமைப் போக்கிக் கந்தா வேண்டும் வரம் தாருமையா

 அன்பன் படும் துயரை கந்தா அலட்சியமாய் நீ நினைத்தால்
முன்னே யுனைப் புகழ்ந்த கந்தா முதுமொழியும் செய்யாமே

வண்ண மயிலேறி கந்தா வாடுமெங்கள் துன்பமற
கண்ணன் மருகோனே கந்தா கடுகிவந்து காருமையா


திருச்செந்தூரில் கோவில் கொண்டு அருள்பாலித்து வரும் முருகப் பெருமானின் திருக்கோவிலில் பன்னீர் இலையில் விபூதிப் பிரசாதம் வழங்கப்படுகிறது.
 இது வேறெங்கும் காண முடியாத சிறப்பாகும். இத்தலத்தில் நான்கு வேதங்களும் பன்னீர் மரங்களாக மாறிச் செந்தில் முருகனை வழிபடுவதாக ஓர் ஐதீகம் நிலவுகிறது. அதற்கேற்றாற் போலப் பன்னீர் மரங்கள் மிகுந்த அளவில் இங்குண்டு.
 விஸ்வாமித்திரரைப் பிடித்திருந்த குன்ம நோய் இந்த பன்னீர் இலை விபூதியால் குணமானதாக நம்பப்படுகிறது.
பன்னீர் இலை பிரசாதம்
"முத்தமிழால் வைதாரையும், வாழ வைப்பான் முருகன்'' என்று அருட்கவி அருணகிரி பாடியுள்ளார்.
முருகனின் கோழிக் கொடிக்கும் குக்குடம் என்றோர் பெயருண்டு. இந்தக் கோழியே வைகறைப் பொழுதில் ஒங்கார மந்திரத்தை ஒளி வடிவில் உணர்த்துவது ஆகும்.
 
எத்தனை துன்பம் எதிர் கொண்டு வந்தாலும் சரவணப் பொய்கையில் நீராடிய நொடிப் பொழுதிலேயே துன்பங்கள் எல்லாம் தொலைந்து போகும் என்று முருகன் கோயிலின் திருக்குளம் குறித்துத் தணிகையாற்றுப் படை கூறுகின்றது.
வட அமெரிக்கா, கனடா, இங்கிலாந்து, ஜெர்மன், இலங்கை, பாரிஸ், ஆஸ்திரேலியா, ஆப்பிரிக்கா, மலேசியா, சிங்கப்பூர் முதலிய நாடுகளில் முருகன் கோவில்கள் உள்ளன.
ஓம் றீம் ஐயும் கிலியும் ஒளவும் சௌவும் சரவண பவ!

மயில் வாகனத்தில் கல்யாணக் கோலத்தில் சிவ சுப்பிரமணீய சுவாமி
சரவணப் பொய்கையில் குழந்தையானதால் சரவண பவன்.
கங்கை ஏந்தியதால் காங்கேயன்.
கார்த்திகைப் பெண்களால் பாலூட்டப்பட்டதால் கார்த்திகேயன்.
விசாக நட்சத்திரத்தில் தோன்றியதால் விசாகன்.
அக்னி ஏந்தியதால் அக்னி பூ.
ஆறுமுகம் கொண்டதால் ஆறுமுகன், ஷண்முகன்.
ஆறு குழந்தைகள் ஒன்றியதால் ஸ்கந்தன், கந்தன்.
தமிழில் முருகு என்றால் அழகு; அழகானவன்-அதனால் முருகன்
பச்சைக் கடைசல் சப்பரத்தில், உற்சவர் சண்முகரை அமர்த்திப் பச்சைப்பட்டாடை அணிவித்து, பச்சை நிற மரிக்கொழுந்து பூ மற்றும் இலைகளால் கட்டப்பட்ட மாலைகள் சூட்டி பச்சை சாத்தி வரும் போது சுவாமிக்கு பக்தர்களால் செய்யப்படும் பன்னீர் அபிஷேகத்தால், தேரோடும் வீதிகள் சேறாகின்றன. பச்சை செழுமையைக் குறிக்கும். தன்னைத் தரிசித்தவர்கள்  வீட்டிலும், தரிசிக்க வராவிட்டாலும் வீட்டில் இருந்தே நினைத்தவர்கள் வீட்டிலும் செல்வச்செழிப்பு ஏற்படுவதற்காக இந்த நிகழ்ச்சியை நடத்துகின்றனர். விவசாயம் செழிக்கும் என்பதும் நம்பிக்கை. 







murugan_jd1pu7kq.jpgMurugan 03.jpg

Saturday, October 29, 2011

பீமனின் பராகரமம் (சவால் சிறுகதைப்போட்டி -2011)



ஆதௌ கீர்த்தனாரம்பத்திலே மகாபாரதத்திலே

பாதி மனுஷராகவும், பாதி மிருகமாகவும் காட்சி அளிக்கும் சிறந்த சிவபக்தரான புருஷமிருகத்தின் உதவி யுதிஷ்டிரருக்கு ஒரு முக்கியமான யாகத்தை முடிக்க தேவைப்பட்டதாம்..

 மாயக் கண்ணனின் அறிவுரையின் பெயரில் யுதிஷ்டிரர் பீமனை இந்த வேலையை செய்ய நியமனம் செய்தாராம்..
வனமாலி கதீ சார்ங்கீ சங்கீ சக்ரீ ச நந்தகி
ஸ்ரீமான் நாராயணோ விஷ்ணுர்வாசுதேவோபிரக்ஷது
ஸ்ரீ வாசுதேவோபிரக்ஷது ஓம் நம இதி

விஷ்ணுசகஸ்ரநாமத்தின் சாரமான முக்கிய ஸ்லோகத்தினால் சாரங்கபாணியைத் தொழுத பீமனிடத்தில் 12 ருத்ராக்ஷங்கள் அத்துடன் சில குறியீடுகள் கொடுத்து காட்டில் தன்னுடைய உதவி கிடைக்காது. இவற்றின் உதவியோடு பீமனின் வேலையை முடித்துக் கொண்டு வரவேண்டும். எப்போது உதவி தேவைப் படுகின்றதோ அப்போது ஒரு ருத்ராக்ஷமும் ஒரு குறியீடு பேப்பர்துண்டும் சேர்த்து கீழே போடு என அருளினாராம் ...ஸ்ரீமான் நாராயணன் ஆன மஹாவிஷ்ணு...

குறியீடு என்று இருந்த அதன் பொருள் என்ன என்று பீமன் பணிவுடன் கேட்க, அதன் பொருள் சொல்லிவிட்டால் மந்திரம் பலிக்காது. எனவே கேட்காதே என்று மந்திரப் புன்னகையுட்ன் மாயவன் கூறிவிட்டாராம்..

   பூவுலகில் அதர்மம் தலைதூக்கும் போதெல்லாம் அவதாரம் எடுக்கும் கடமை தனக்கிருப்பதால் மஹாவிஷ்ணுவின் அவதாரமாக சாரங்கபாணி எஸ். பி. கோகுலாக பூவுலகம் வந்தாராம்.....
Sir,
எஸ்.பி கோகுலிடம் நான் தவறான குறியீட்டைத்தான் கொடுத்திருக்கிறேன்..
கவலை வேண்டாம்... விஷ்ணு...
என்கிற குறிப்பு அவரது மேஜையில் வரவேற்றதாம்...

அதே நேரத்தில் விஷ்ணுவிடமிருந்து அழைப்பும்..
நாரதர் இந்த இக்கடான நேரத்தில் வழக்கம் போலத்தோன்றி
நாராயண !நாராயண!! என்ன சாரங்கபாணியாக கோகுலத்தில் லீலைகள் புரிந்த தங்களுக்கு விஷ்ணு இன்பார்மர் என செய்தி வருகிறதே என கேட்டாராம்.

பரவாசுதேவராகிய மஹாவிஷ்ணு எப்போது என்ன அவதாரம எடுக்கவேண்டும் என இன்பார்ம் பண்ணுவார்.. -மந்தாரமலையைத் தாங்க கூர்ம அவதாரமா, வேதங்களைக்காக்க ஹயக்கிரீவ அவதாரமா, இராவணனை வதைக்க இராம அவதாரமா, நரகாசுரனை அழிக்க கிருஷ்ண அவதாரமா, ஹிரண்யனைக் கொல்ல நரசிம்ம அவதாரமா என்பதை இன்பார்ம் செய்வதால் விஷ்ணு இன்பார்மர் -- என விளக்கினாராம்.. எஸ். பி. கோகுல்!

புருஷாமிருகத்தின் சிவபக்தியின் பெருமையை உலகோர் அறிந்துகொள்ளவும், பீமனின் கர்வம் அடங்கவும், தர்மரின் நீதிநெறிதவறாத தீர்ப்பை வெளிகொணரவும் தான் மஹாவிஷ்ணுவான தான் இந்த
அவதாரத்தில் தவறான மந்திரப்பிரயோகம் கொடுக்கச் செய்தேன். கவலை வேண்டாம். சரியான குறியீடு பேப்பரில் தோன்றும்... என்று கூறினாராம் செல்போனில் விஷ்ணு இன்பார்மர்..

பீமனும் காட்டிற்கு உள்ளே புருஷாமிருகம் இருக்கும் இடத்திற்கு சென்று ஒரு போட்டி அறிவித்தானாம்...
 தன் எல்லையான காட்டின் எல்லையை விட்டு பீமன் வெளி வந்தால் அவனுக்கு வெற்றி, நடுவில் பிடிபட்டால் அவன் புருஷாமிருகத்துக்கு இரையாவதாக ஒப்பந்தமாம்..

பீமன் முழு பலத்தை கொண்டு ஓடியும் அதற்குள் மிருகம் அருகில் வந்துவிட்டதாம்...
 உடனே கோகுல் கொடுத்த ஒரு ருத்ராக்ஷமும் மந்திரக்குறியீடு எழுதிய பேப்பரையும் கீழே போட சிவன் கோயிலாக மாறியதாம்....
lord shiva
சிவபக்தி மிக்க புருஷாமிருகமும் ஆச்சரியம் அடைந்து அந்தக் கோயிலில் ஈசனை வழிபடச் சென்றுவிட பீமன் விடாமல் ஓடுகிறானாம் ..- 
பூஜையை முடித்துவிட்டு புருஷாமிருகம் பீமனைத் துரத்துகிறதாம்...
Gopher makes a joint

இப்படியே 12 குறியீடுகளும் ருத்ராஷங்களும் பீமன் போட்டுவிட்டுக் காட்டை விட்டு வெளியே வந்து விடும் வேளையில், ஒரு கால் நாட்டிலும் ஒரு கால் கட்டிலும் இருக்கும் போது - புருஷாமிருகம் வந்து பிடித்துக் கொள்ள, பீமன் தான் புருஷாமிருகத்தின் ஆட்சிப் பகுதியில் இல்லை தன்னை விட்டுவிட வேண்டும் என்றும் .வாதாடுகின்றானாம்... 
Lion hunters

எஸ்.பி கோகுலின் அலுவலகத்தில்

Sir,
எஸ்.பி கோகுலிடம் நான் தவறான குறியீட்டைத்தான் கொடுத்திருக்கிறேன்..
கவலை வேண்டாம்... விஷ்ணு... என்று பார்த்து பதறிய அதே வேளையில் மஹாவிஷ்ணுவிடமிருந்து செல்போனில் அழைப்பு..

மந்திரக்குறியீடு வேண்டுமென்றே சிறிது தவறாக அளித்ததால் பீமன் புருஷாமிருகத்திடம் முழுதாகப்பிடிபடாமல் பாதி பிடிப்பட்டு வாதாடிக்கொண்டிருக்கிறானாம்....

Mr. கோகுல் S W  H2  6F  இதுதான் குறியீடு

இதனை தர்மரிடம் கூறி மனதில் உச்சரித்து சரியான தர்ம்மான தீர்ப்பு கூறினால் தப்பிக்கவழி உண்டு.. என்று மேஜையில் தோன்றிய மந்திரக்குறியீட்டை டெலிபதியில் யுதிஷ்டிரரிடம் கூற அவரும் மந்திரத்தை பயபக்தியுடன் உச்சரித்து தீர்ப்பாக பீமனின் உடலின் ஒரு பாதி புருஷாமிருகத்துக்குச் சொந்தம், மற்றொரு பாதி தான் இந்தப் பகுதிக்குச் சொந்தம் எனத் தீர்ப்புக் கொடுக்க, தம்பி என்றும் பார்க்காமல் இவ்வாறு நியாயமான தீர்ப்புக் கொடுத்த தருமரின் நீதியில் மெய்ம்மறந்து போன புருஷாமிருகம் பீமனை விட்டு விட்டதாம்...




இந்த கதை யுடான்ஸ் தமிழ் வலைப்பூக்கள் திரட்டி நடத்தும் சவால் சிறுகதை-2011 போட்டிக்காக எழுதப்பட்டது.படித்துவிட்டு பின்னூட்டமிடுங்கள்..நன்றி..


                   [vanakkam.jpg]                                                           


ஞானப் பேரொளி.


[m1.jpg]

வீர வேல், தாரை வேல், விண்ணோர் சிறை மீட்ட
தீர வேல், செவ்வேள் திருக் கை வேல், – வாரி
குளித்த வேல், கொற்ற வேல், சூர் மார்பும் 
குன்றும் துளைத்த வேல் உண்டே துணை. – 
காலத்தால் முந்திய முந்து தமிழ் மாலை திருமுருகாற்றுப்படை. சொன்னால் முருகன் அருள் கிடைக்கும் என்பது நம்பிக்கை
அருவமும் உருவுமாகி அநாதியாய்ப்பலவாய் ஒன்றாய்
பிரமமாய் நின்ற ஜோதிப் பிழம்பதோர் மேனியாக
கருணைகூர் முகங்களாறும் கொண்டேஒரு 
திருமுருகன் வந்தாங்கு உதித்தனன்உலகம் உய்ய.
- கந்தபுராணம் -

வந்த வினையும் வருகின்ற வினையும் கந்தா என்றிடக் கரைந்திடும்' என்பர். அத்தகைய கந்தப் பெருமான் நிகழ்த்திய அருளாடல்களில் முக்கிய மான ஒன்று செந்தூரில் நிகழ்ந்த சூர சம்ஹார நிகழ்ச்சி.
[skottam2.JPG]
சூர சம்ஹாரம்... அசுரரை வென்று தேவரைக் காத்த நன்னாள். 
எம்பெருமான் வேலவனின் அவதார நோக்கம் நிறைவேறிய திருநாள்.  
முருகன் சூரபதுமனை வென்ற பொன்னாள். 
அள்ள அள்ளக் குறையாத கந்தனருள் கொண்டு இன்பம் கண்ட நாள்..

ஓவற இமைக்கும் சேண் விளங்கு அவிர் ஒளி “என்கிறார் நக்கீரனார். 
எல்லை என்று ஏதுமற்று நீக்கமற எங்கும் நிறைந்து ஒளிர்கின்ற கதிரவனை விஞ்சிய ஒளி. காலத்தின் ஓட்டமோ ஞாலத்தின் தூரமோ கட்டுப்படுத்த இயலாத நெடுந்தொலைவுக்கு வீசிவரும் ஞானப் பேரொளி. அத்தகு பெருமை கொண்ட முருகனின் திருக்கைவேல் கடுந்துன்பங்களை எல்லாம் எளிதில் தீர்க்கும்.

மூட இருளை முற்றிலும் அழித்து அறிவுச்சுடர் பிரகாசிக்க வழிசெய்த ஞானத்திருவொளியின் அருந் தகமையைக் கொண்டாடுவது சூர சம்ஹார விழா

எங்கும் "வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா! வீரவேல் முருகனுக்கு அரோகரா! செந்திலாண்டவனுக்கு அரோகரா!' என்னும் கோஷம் விண்ணை முட்டுகிறது.
"காக்க காக்க கனகவேல் காக்க
நோக்க நோக்க நொடியில் நோக்க
தாக்க தாக்க தடையறத் தாக்க
பார்க்க பார்க்க பாவம் பொடிபட'
என்று கந்தசஷ்டி கவசத்தைப் பாராயணம் செய்து, கந்தப் பெருமானை மனதில் இருத்தி ஆறு நாட்கள் விரதம் இருந்த லட்சக்கணக் கான பக்தர்கள், சூர வதத்திற்குப்பின் கடலில் மூழ்கி தங்கள் விரதத்தை முடிக்கின்றனர்.

இறையனாரின் அம்சமாய்ப் போற்றப்படும் ஆதிசங்கர பகவத் பாதர் ஷண்மதங்களை நிறுவிச் சநாதன தர்மம் ஓங்கச்செய்த சங்கரர் துன்புற்றிருக்கையில்..சீரலைவாய் சென்று சிவக்குமரனை வழிபட்டால் சீக்கிரம் தீரும் சீக்கு” என்று அசரீரி ஒலித்தது

சங்கரர் சுப்பிரமணிய புஜங்கம் என்னும் பாமாலையை இயற்றிக் கந்தனை வேண்டினார். ஆதிமதம் தழைக்க அயராது உழைக்கும் தமக்கு வந்த அல்லல்களை நீக்கி அருள்புரியப் பிரார்த்தித்தார். 33 சுலோகங்கள் கொண்ட சுப்பிரமணிய புஜங்கத்தைப் பாடிவர 25ஆவது சுலோகத்தினைப் பாடியதும் பிடித்த பிணிகளும் பீடித்த பிசாசப் பீடைகளும் நீங்கி நலம் பெற்றார்.

அபஸ்மார குஷ்ட க்ஷயார்ச ப்ரமேஹ
ஜ்வரோன்மாத குல்மாதிரோஹான் மஹாந்த
பிசாசாஸ்ச ஸர்வே பவத் பத்ர பூதிம்
விலோக்ய க்ஷணாத் தார காரே த்ரவந்தே

இந்தச் சுலோகத்தைப்ப் படிக்கும் யாருக்கும் இது போன்ற பிணிகளோ பீடைளோ அண்டாது என்பது பகவத் பாதர் வாக்கு.

அறியாமை மிகுந்த மனத்தின் தீச்செயல்களால் விளையும்
அல்லல்களை அகற்றுவான் கந்தன் ...
சக்தி வடிவேலுடன் தத்தும் மயிலேறிடும் சரவணபவன்..
[ks19.jpg]
சூரனைக்கடிந்த கதிர்வேலன்..வெற்றிக்களிப்பில் ஜெயந்திநாதர்
[ks20.jpg]
பேசாத குருபரரைப் பேச வைத்துப் பைந்தமிழ்ப் புலவராக்கிப், பின் அவரைப் பன்மொழி வித்தகராக்கி அழகு பார்த்தவன் சீரலைவாய்க் கந்தபிரான். 

அறியாமையின் ஒரு பிரிவாம் கோபம் கொண்டு அவர் தந்தை ஒரு சான்றோரை அவமதிக்க, அதுவொற்றி மகர்க்கு வந்த பேசாப்பிணியை நீக்கியதோடு நில்லாமல் காசி நகர்ப்புலவரால் இயலாத பெருஞ்செயல்கள் புரிய வைத்தான். 

குருவுக்கெல்லாம் குருவான சிவனுக்கே உரைத்த 
நல்லாசான் உயர்வன்றி வேறென்ன தருவான்?

உள்ளம் ஒன்றிக் கந்தனை வேண்டி பிரார்த்திப்போம்.
அறியாமை நீங்கி அகம் தெளிந்தோர் ஆவோம்.
திருக்கல்யாண கோலத்தில் எழில் குமரன் தேவியருடன்
[ks23.jpg]

Friday, October 28, 2011

அருளும் அழகாபுத்தூர் அழகன்.




அழகென்ற சொல்லுக்கு முருகா 
உந்தன் அருளன்றி உலகிலே பொருளேது முருகா 
சுடராக வந்த வேல் முருகா 
கொடும் சூரரை போரிலே வென்ற வேல் முருகா
குன்றாறும் குடிகொண்ட முருகா 
பக்தர் குறை நீக்கும் வள்ளல் நீ அல்லவோ முருகா 
ப்ரணவப்பொருள் கண்ட திரு முருகா  
பரம்பொருளுக்கு குருவான தேசிகா முருகா 
அன்பிற்கு எல்லையோ முருகா 
உந்தன் அருளுக்கு எல்லைதான் இல்லையே முருகா!!முருகா!!!
தவறை யார் வேண்டுமானாலும்சுட்டிக்காட்டலாம், ஆனால், தண்டிக்கும் அதிகாரத்தைஎடுத்துக்கொள்ளக் கூடாது, என்று அறிவுறுத்திய விசேஷமான தலம் கும்பகோணத்திலிருந்து சுமார் 7 கி.மீ. தொலைவில் நச்சியார்கோவில் செல்லும் வழித்தடத்தில் உள்ளது அரிசில் கரைப்புத்தூர் என்ற அழகாபுத்தூர் திருக்கோயில்.இறைவன் சொர்ணபுரீஸ்வரர். 
படிக்காசுநாதர் என்றும் அழைக்கப்படுகின்றார். இறைவி சௌந்தரநாயகி. அழகாம்பிகை என்ற பெயரும் உண்டு. 
சமயக்குரவர் நால்வரில் மூவராலும் பாடப்பெற்ற திருத்தலம்  கோச்செங்கட் சோழன் திருப்பணி செய்த தலம்.
[Gal1]
மூலவர் படிக்காசுநாதர்

கைலாயம் சென்ற பிரம்மாவிடம்,பிரணவ மந்திரத்தின் பொருளைக் கேட்டார் முருகன். அது தெரியாததால்,அவரைச் சிறையில் அடைத்தார்.
பின்னர் படைப்புத்தொழில் கருதி .அவரை விடுவித்தார்
[BRAHMASASTA_cute-pictures.blogspot.com.JPG]
வயதில் பெரியவரான பிரம்மாவை தண்டித்ததற்குரிய சாபத்தை அவர் பெற வேண்டி வந்தது. 

அதற்காக சிவனை வேண்டி தவமிருந்தார்.

சிவன் அவருக்கு காட்சி தந்து, தவறை அறிவுறுத்தினார்.

அவர் எந்த இடத்தில் முருகனுக்கு காட்சி தந்தாரோ அந்த இடத்திலேயே லிங்கமாக எழுந்தருளினார். அவரை படிக்காசுநாதர் எனஅழைத்தனர்.
அம்பாள் இங்கே அழகம்மை என்ற பெயரில் அருள் செய்கிறாள்.
அம்மன் அழகம்மை
[Gal1]
ஒருசமயம் அசுரர்களின் தொல்லை அதிகரிக்கவே, தேவர்கள் தங்களைகாக்கும்படி சிவனிடம் வேண்டினர்.சிவன், அசுரர்களை அழிக்கமுருகனை அனுப்பினார்.

Photobucket
அப்போது திருமால் முருகனுக்கு தனது சங்கு,சக்கரத்தை கொடுத்தார். ஆயுதங்களுடன் சென்ற முருகன், அசுரர்களைசம்ஹாரம் செய்தார்.
சங்கு சக்கரத்துடன் முருகன்

சங்கு, சக்ரதாரியாய் வைணவ திருக்கோலத்தில் முருகன்
மேற்கு நோக்கி அருளும் மூலவர்.
உண்மையானந்த முனிவரால் பூஜிக்கப்பட்ட திருக்கோயில்.
உலகில் வேறெங்கும் இல்லாதவாறு, சங்கு, சக்ரதரியாய் முருகப் பெருமான் வீற்றிருக்கும் தலம். 
தனது பன்னிரு கரங்களில் தனக்கே உரிய படைக்கலன்களை பத்து கைகளில் கொண்டு, இடப் பக்கம் முதலாவது திருக்கரத்தில் சங்கையும், வலப் பக்கம் முதலாவது திருக்கரத்தில் சக்கரத்தினையும் ஏந்திய வண்னம் காட்சியளிக்கின்றான் ஆறுமுகன். 
இவரிடம் பிரார்த்தனை செய்து கொண்டால் விஷ ஜந்துக்களின் கடிகளில் இருந்து நிவாரணம் பெறலாம். 
 இந்த நிகழ்வின் அடிப்படையில் இங்குள்ள முருகன் கேடயம், வில், அம்பு, சாட்டை, கத்தி, சூலாயுதம், வஜ்ரம் மற்றும் சங்கு, சக்கரத்துடன் காட்சி தருகிறார். இந்திர மயில்மீது அமர்ந்த கோலத்தில் இருக்கும் இவரை, கல்யாணசுந்தர சண்முக சுப்பிரமணியர் என்று அழைக்கிறார்கள். இவரது திருவாசி ஓம் வடிவில் அமைக்கப்பட்டுள்ளது.
வள்ளி, தெய்வானை உடனிருக்கின்றனர்.
மகாலட்சுமிக்கும் சன்னதி இருக்கிறது
அவதாரதலம்: புகழ்த்துணை நாயனார் இத்தலத்தில் அவதரித்தவர்.[Gal1]
சிவபக்தரான இவர் வறுமையில் வாடினாலும், சிவபூஜையை தொடர்ந்துசெய்தார். ஒருசமயம் பசியால் உடல் தளர்ந்தபோது, கை தவறி தீர்த்தகுடத்தை லிங்கத்தின் மீது போட்டு மயக்கமுற்றார். அப்போது சிவன்அவரது கனவில் தோன்றினார். சிவபூஜை தடையின்றி நடக்க அருளும்படி வேண்டினார் புகழ்த்துணையார்.
சிவன் அவருக்கு தினமும் ஒருபடிக்காசு தருவதாகவும், அதை வைத்து பூஜை செய்யும்படியும் கூறினார். 

அதன்பின் புகழ்த் துணையார் பூஜையை தொடர்ந்தார்.

பலகாலம் இத்தலத்தில் சிவனுக்கு சேவை செய்த புகழ்த்துணையார், இங்கேயே முக்தியடைந்தார். 
நாயன்மார்களில் ஒருவராகவும் இடம் பிடித்தார்.
சிறப்பம்சம்: சுந்தரர் தன் மனைவி பரவை நாச்சியாருடன் இருக்கிறார்.
நவக்கிரக மண்டபத்தில் சூரியனும்,சந்திரனும் கிழக்கு திசை நோக்கி இருப்பர். இங்கு இருவரும் எதிரெதிரே பார்த்தபடி இருக்கின்றனர். எனவே இது அமாவாசை திதி கொடுக்க உகந்த தலமாக இருக்கிறது.
இங்குள்ள விநாயகர் செல்வவரம் அருளும், சொர்ணவிநாயகர் என்ற பெயரில் உள்ளார்.
சொர்ண விநாயகர்
[Gal1]
படிக்காசுநாதர் சன்னதியில் இரண்டு காசுகளை வைத்து வேண்டி, ஒன்றைமட்டும் வீட்டிற்கு எடுத்துச் சென்று பூஜிக்கின்றனர். இதனால், குடும்பத்தில் ஐஸ்வர்யம் பெருகும் என்பது நம்பிக்கை.
பிரகாரத்தில் இரண்டு பைரவர்கள் இருக்கின்றனர்.
இரட்டை பைரவர்  
[Gal1]
தட்சிணாமூர்த்தி

முருகன்,சிவனுக்கு குருவாக இருந்து பிரணவ உபதேசம் செய்த சுவாமிமலை தலம், இங்கிருந்து 10 கி.மீ., தூரத்தில் இருக்கிறது.
திருவிழா: மாசிமகம், சிவராத்திரி, கந்தசஷ்டி, ஆவணி ஆயில்யம் நட்சத்திரத்தில் புகழ்த்துணை நாயனார் குருபூஜை.
இருப்பிடம்: கும்பகோணத்தில்
இருந்து திருவாரூர் செல்லும் வழியில் 6 கி.மீ., தூரத்தில்
இத்தலம் இருக்கிறது. பஸ் வசதி உண்டு.
நடை திறப்பு: காலை 7- 12.30 மணி, மாலை 4- 8மணி.
[Image1]
Goddess Lakshmi Ganesha Diwali Backgrounds