Tuesday, May 31, 2011

ஆஸ்திரேலியா - பெர்த் ஸ்ரீ பால முருகன் கோவில்























பெர்த் ஸ்ரீ பால முருகன் கோவில்

வரலாறு : மேற்கு ஆஸ்திரேலியாவில் பல சமூகத்தைச் சார்ந்த பலமொழிகளைப் பேசும் இந்துக்கள் அனைவரும் கூட்டாக வழிபடும் ஓர் இந்து ஆலயத்தைத் தவிர தமிழகத்திலிருந்தும் தாயகத்திலிருந்தும் வருகைதந்து இங்கு வாழ்ந்துவரும் சைவத்தமிழ் மக்கள் தமது பண்டைய தமிழ் கலாச்சாரத்தையும் சைவசமயக் கலாச்சாரத்தையும் பேணிப் பாதுகாப்பதற்கெனத் தனியாக ஆலயம் எதுவும் இல்லாதது பலரின் மனதில் நீண்டகாலமாக பெங்குறையாக இருந்துவந்தது.
இவர்களின் மனக்குறையை நீக்க தமிழ் கடவுளாகிய முருகன் திருவுளங்கொண்டான். இதனால் பெர்த் வாழ் சைவத்தமிழ் மக்களில் பலர் ஒன்றுசேர்ந்து மேற்கு ஆஸ்திரேலிய சைவமஹாசபை என்னும் பெயரால் முற்று முழுதாக சைவத்தையும் தமிழையும் கலையையும் கலாச்சாரங்களையும் வளர்க்கும் நோக்குடன் ஒரு ஸ்தாபனம் நிறுவப்பட்டது. இதன் முதல் முயற்சியாக கலியுகத்தும் கருணைவரங்களை அருளும் கலியுகவரதனாகிய ஸ்ரீ பாலமுருகனைப் பிரதானமாகக் கொண்டு சிவன் முதலான அனைத்து தெய்வங்களையும் பரிவாரங்களாகக் கொண்ட முழுமையான தேவஸ்தானமாக ஒரு கோவில் அமைக்கக் தீர்மானிக்கப் பட்டது. இதற்குப் பூர்வாங்கமாக மண்டோகளப் சமூக மண்டபத்தில் பிரதி ஞாயிறு தோறும் பெர்த் வாழ் சைவத்தமிழ் மக்களின் ஒன்றுகூடலும் முருகவழிபாடும் சிலகாலம் நடைபெற்று வந்தது.

சமூக மண்டபத்தில் முதலாவது ஸ்கந்தசஷ்டி

சில மாதங்களில் அனைவருக்கும் ஏற்பட்ட ஆர்வத்தினாலும் பெர்த்திற்கு அவ்வப்போது வருகைபுரிந்த அருளாளர்களின் ஆசியினாலும் இந்தியாவிலிருந்து விநாயகர், வள்ளிநாயகி தெய்வநாயகியுடன் செல்வ முத்துக்குமரசுவாமி ஆகிய உற்சவ மூர்த்திகள் வெகு விரைவில் தருவிக்கப் பட்டு அவற்றுக்கு முறைப்படி பிராணப்பிரதிஷ்டையும் நடைபெற்று ஆறு தினங்களுக்கு ஸ்கந்தசஷ்டிப் பெருவிழா, சூரசம்ஹார விழா திருக்கல்யாண விழா ஆகியன வெகு விமரிசையாக சமூக மண்டப வளாகத்திலேயே நடைபெற்றது.



மயில் வந்த அதிசயம்

அப்பகுதியில் தமிழர் சமுதாயத்தினர் கோவில் அமைப்பதற்கும் குடியமர்வதற்கும் அப்பகுதி பாராளுமன்றப் பிரதிநிதிகளும் பெரிதும் ஒத்துழைப்பு நல்கினார்.
அந்த விழா நாட்களில் மண்டக்களப் சமூக மண்டபத்தின் அருகாமையில் வசிக்கும் ஒரு ஆஸ்திரேலிய அன்பரும் தவறாது வந்து கலந்து கொள்வார். அவர் பலவருடங்களுக்கு முன்பதாகவே மயிலோடு காட்சிதரும் ஸ்ரீ பாலமுருகனின் உருவப்படத்தை தமிழ் நாட்காட்டியாகிய காலண்டரில் பார்த்து இந்தக் கடவுளைப் பற்றி ஆங்கிலத்தில் வாசித்துத் தெரிந்து கொண்டு தமிழர்களின் பக்தி, கலாச்சாரம் இவைபற்றி மனதில் உயர்ந்த அபிப்பிராயம் கொண்டாவராக விளங்கினார். அவர் பலவருடகாலமாக தாவர உணவு உட்கொண்டு வருபவர் எனவும் அப்பகுதியில் பல ஏக்கர் காணிநிலத்திற்கு உரிமையாளர் என்பதுவும் பின்னர் தெரியவந்தது. அவ்வேளையில் சைவமஹாசபையினர் அவரிடமிருந்து கோவிலமைப்பதற்கு நிலத்தை விலைக்குத் தருமாறு கேட்டபோது முதலில் மறுத்துவிட்டார்.

 ஆயினும் அன்றிரவு அவரது கனவில் முருகன் வேலுடனும் மயிலுடனும் காட்சியளித்ததுடன் மறுநாள் மத்தியான வேளையில் அவரது காணியில் எங்கிருந்தோ ஒரு மயில் பறந்துவந்து தோகையை விரித்து வெகுநேரமாக ஆடிக்கொண்டு நின்றதை அவரும் அவருடன் வேலை பார்த்துக் கொண்டிருந்த ஆஸ்திரேலியர் பலரும் வியப்போடு பார்த்து அதிசயித்தனர். இதே போன்று மறுநாளும் குறிப்பிட்ட அதே இடத்திற்கு குறிப்பிட்ட நேரத்திற்கு வந்த மயில் ஆனந்தமாக ஆடிக்கொண்டு நின்ற காட்சியை பலரும் கண்டனர். இதனால் இச்செய்தி எங்கும் பரவியது.

இந்த அதிசய நிகழ்வு அந்த நிலத்தின் உரிமையாளரின் மனதில் மாற்றத்தை ஏற்படுத்தியது திருவருளேயாகும். அடுத்த வார ஒன்றுகூடல் வழிபாடுகளின் போது அவர் தனது காணியை சைவமஹாசபைக்கு தருவதாகவும் இயன்றளவு மலிவாகத் தருவதாகவும் தெரிவித்தார். அதுமட்டுமல்லாமல் தனது பெற்றோருடன் தனது சிறுவயது முதலாக வாழ்ந்த காலத்தில் அந்தக் காணியில் பலதடவை பல அற்புத நிகழ்ச்சிகள் இடம் பெற்றதெனவும் அவர் குறிப்பிட்டார்.
 ஒருசமயம் தனது பெற்றோர்கள் வளர்த்துவந்த பசுமாடுகளில் ஒன்று நோய்கண்டு வைத்தியம் பலனளிக்காமல் இறந்துவிட்டதாகவும் உடனே அந்தப் பசுவை துணியால் மூடிவிட்டு காலையில் புதைக்கும் நோக்கத்துடன் படுக்கைக்கு சென்றதாகவும் மறுநாள்ள காலை அனைவரும் மண்வெட்டிகளுடன் வந்து பார்க்கையில் இறந்துவிட்டதாக வைத்தியர் கூறிச்சென்ற அதே பசு உயிருடன் எழுந்துநின்ற அற்புதத்தையும் தான் கண்ணாரக்கண்ட நிகழ்ச்சியை உணர்ச்சிபூர்வமாக எடுத்துக் கூறினார்.

 அதிலிருந்து தமது பெற்றோர்கள் அந்த இடத்தில் நின்ற பெரிய விருட்சத்தில் சிவப்புத்துணி சுற்றி பூங்கொத்துவைத்து தினமும் வழிபட்டு வந்ததாகவும் சொன்னபோது இயற்கையாகவே தெய்வசக்தி நிறைந்த பொருத்தமான இடத்தை முருகனே தோந்தெடுத்து இப்போது மயிலை அனுப்பி ஆடவைத்து தான் கோவில் கொண்டு வீற்றிருக்கும் கருவறை ஸ்தானத்தையும் முருகனே அடையாளம் காண்பித்திருப்பதை உணர்ந்து அங்கிருந்த அனைவரும் பக்திப் பரவசம் அடைந்தனர். அடுத்த வாரத்திலேயே கோவிலுக்குரிய நிலத்தைப் பதிவு செய்ய ஏற்பாடுகள் நிகழ்ந்தது.

அவ்வேளையில் மீண்டும் ஒரு அதிசயம். அந்த நில உரிமையாளர் தான் குடியிருந்த வீட்டையும் அதனுடன் சேர்ந்த காணியையும் சேர்த்து வாங்குவது எமது சமுதாயத்திற்கு நல்லதெனவும் தனது தொழிற்கூடத்தைத் தற்காலிக ஆலயமாகப் பயன்படுத்தலாம் எனவும் ஆலோசனை கூறியதுடன் யாரும் எதிர்பாராத அளவு சகாயவிலைக்கும் தருவதற்கு முன்வந்தார். அவ்வேளை நிதிப் பற்றாக்குறையைச் சமாளிப்பதற்காக பல அன்பர்கள் தாம் அந்தச் சூழலில் பிற்காலத்தில் வந்து குடியிருப்பதற்கும் முதியோர் இல்லம் போன்றவை அமைப்பதற்கும் உகந்த இடம் என அபிப்பிராயம் கூறி அந்தக் காணியைப் பங்குபோட்டு ஒவ்வொருவரும் வாங்க முன்வந்தனர். (ஆனால் பின்னர் இதனை ஆலயத்திற்கே உரிமையாக்கினர்). இவை அனைத்துமே ஒவ்வொருவர் மனத்திலும் அவ்வப்போது முருகன் புகுந்து நின்று தோற்றுவித்த எண்ணங்கள் என்பதை நினைக்கும் போது கண்ணீர் பெருகி வருவதை உணரமுடிகிறது..

 உடனடியாக தற்காலிகமான பாலாலயம் கிடைத்ததினால் உற்சவ மூர்த்திகளை வைத்து தினசரி பூஜை ஆரம்பித்தது. கோவில் ஆரம்பிக்கும் முன்னரே குருக்கள் அவசியம் என உணர்ந்து பெர்த் இந்து ஆலயத்திலிருந்து ஊருக்குச் செல்லவிருந்த குருக்களைத் தடுத்து நிறுத்துவதற்கு சட்டப்படி ஆவன செய்தும், ஆலயப்பணி இல்லாமலேயே சிலநாட்கள் வசதியுடன் வாழ நிதி ஒழுங்குகளையும் செய்து உதவினார்கள் அன்பர்கள் பலர் .

அன்று முதல் இன்று வரையில் சைவமகாசபையுடன் இணைந்து ஆலயத்தின் வளர்ச்சியில் பங்காற்றி வரும் ஞானானந்த சேவா சமாஜத்தினர் நிதி திரட்டும் பணியிலும் சுக்கிரவார விழா மற்றும் பௌர்ணமி தின பஜனைகள் ராதா கல்யாணம் ஆகியவற்றையும் ஆலயத்தில் நிகழ்த்தி வருவது மறக்கமுடியாததாகும்.

 முருகன் அருளால் அவனுக்கு ஒரு பாலாலயம் மட்டுமின்றி குருக்களுக்கும் குடியிருப்பதற்கு வீடும் அமைந்ததை பெரிய அதிசயமாகவே எண்ணினர். ஆலயதோற்றத்திற்கும் வளர்ச்சிக்கும் மூலகாரணமாக விளங்கிய பலர் தமது பெயர் வெளிவர விரும்பாதகாரணத்தினால் இதல் யாரையும் குறிப்பிட வாய்பில்லை. ஆயினும் அனைவரின் நினைப்பும் செயலும் முருகனின சக்திகளாகிய இச்சையும் கிரியையும் என்பதில் ஐயமில்லை. முருகனுக்கு பசுமாடு குஞ்சுமயில்கள் சேவல்கள் என படை பரிவாரங்கள் யாவும் வந்து குவிந்தன. மயில்கள் வளர்ந்து பல்கிப் பெருகியதனால் அவற்றிற்கு வசதியான பெரிய இல்லம் அமைக்கப் பட்டுள்ளது.

சிரமதான முயற்சிகள்

காணிவாங்கியவுடன் அங்கிருந்த பழைய இரும்புகள், வாகன உதிரிப்பாகங்கள் பெரிய மரத்துண்டுகள் வேண்டாத குப்பை கூளங்கள் ஆகிய அனைத்தையும் ஒவ்வொரு குடும்பத்தவரும் ஆண்களும் பெண்களுமாக பிரதிஞாயிறுதோறும் வந்து பல மணி நேரம் அயராது பாடுபட்டுத் துப்புரவு செய்து பரிசுத்தமடையச் செய்தனர்.

 பழைய கொட்டகை ஒன்று சீர்திருத்தம் செய்யப்பெற்று கந்தாசிரமம் எனப்பெயரிடப்பெற்று சாப்பாட்டு இடமாகவும் அனைவரும் ஒன்றுகூடி அமர்ந்து பேசும் இடமாக ஆக்கப் பெற்றதுவும் சிரமதான முயற்சியே ஆகும். பெண்கள் பலர் குருக்களுக்கான வீட்டிற்கு பெயின்டிங் வேலைகளையும் ஜன்னல் துணிகள் தைக்கும் பணியையும் செய்து வேண்டிய தளவாடங்களையும் தந்து வசதி செய்தனர்.


பாலாலயத்தில் கும்பாபிஷேகம்

முறையான கோவில் அமைத்தவுடன் பிரதிஷ்டை செய்வதற்குரிய மூர்த்திகளை உடனடியாகத் தருவித்து பாலாலயத்தில் ஸ்தாபனம் செய்வதற்காக தீர்மானம் செய்தபோது அன்பர்கள் பலரும் தாமாகவே முன்வந்து நிதி உதவினார்கள். வெகுவிரைவில் திருவுருவங்கள் அழகிய தோற்றங்களுடன் வந்திறங்கின.

 ஸ்ரீ பாலமுருகனின் அங்கலட்சணங்கள் கொள்ளையழகு .. பாலாலயக் கும்பாபிஷேகம் மிகவும் சிறப்பாக நிகழ்தேறியது. கதிர்காமத்து மாணிக்க கங்கையிலிருந்தும் காசியிலுள்ள கங்காநதியிலிருந்தும் தருவிக்கப் பட்ட புண்ணிய நீரால் பூஜித்து முருகனின் காணியின் வடக்குக் கரையோரமாக ஓடிச்செல்லும் நீரோடையில் கலந்து வழிபட்டு புனித மாணிக்க கங்கையென அதற்குப் பெயரிட்டு புனிதமடையச் செய்ததுடன் அந்த நீர் வாய்க்கால் வழியோடிச் சென்று பல மைல்களுக்கு அப்பால் இந்து மஹாசமுத்திரத்தைச் சென்று சேருவதையும் தெய்வீகமாகவே எண்ணி மகிழுகின்றனர்.

முருகனின் பதிக்கு கந்ததோட்டம் எனப்பெயரிடப்பட்டு அப்பெயராலேயே அழைக்கப் பட்டும் வருகிறது. அன்றைய சுப முகூர்த்தத்திலேயே சிற்பசாஸ்திரமுறைப்படி அமைக்கப் படவுள்ள ஆலயத்திற்கும் அடிக்கல் நாட்டுவைபவமும் கோலாகலமாக நிறைவேறியது. முருகன் மயிலை அனுப்பி அடையாளம் காண்பித்த இடத்திலேயே ஸ்ரீ பால முருகனின் கருவறை அமைப்பதென உறுதியாகியது.

ஸ்ரீ பாலமுருகன் கனவிலம் நனவிலும் பலரிடம் திருவிளையாடல் புரிந்தவண்ணம் திருவருள்பாலிக்கிறான். யாரைப் பயன்படுத்தி எந்தக் காரியத்தை நிறைவேற்ற வேண்டுமோ அதனை அவரைப் பயன்படுத்தி நிறைவாகச் செயவிப்பதில் ஸ்ரீ பாலமுருகனுக்கு நிகர் எவருமேயில்லை எனலாம்.

முருகனின் ஆலய வளாகத்தில் வாழைமரங்களும் பூமரங்களும் பக்தர்களின் சிரமதான முயற்சியினால் செழிப்பாக வளர்ந்தன. ஒவ்வொரு குடும்பத்தினரும் மறைந்த தமது பெற்றோரின் ஞாபகார்த்தமாக ஒவ்வொரு மாமரங்களை விலைகொடுத்து வாங்கி நட்டுவைத்தனர். அவை இப்போது வளர்ந்து பெரு மரங்களாகக் காட்சியளிக்கின்றன. கந்தகோட்டம் ஸ்ரீ பாலமுருகன் கோவில் சுற்றுப்புறச் சூழலில் மரங்களும் சோலைகளும் பசுமாட்டு மந்தைகளும் மயில்களும் அருகே நீரோடையும் அமைந்து இயற்கைவளம் மலிந்த திருக்கோவிலாக விளங்குகிறது.

அன்பர் ஒருவர் பக்தர்களின் வசதிக்காக ஆலயவளாகத்திலுள் கந்தர் ஸ்டோர் என்னும் கடையை அமைந்து பலவிதமான மளிகைச் சாமான்களையும், அவ்வப்போது முருங்கைக் காய் போன்ற உணவுப் பொருட்களையும் அபிசேக பூஜைப் பொருட்களையும் சுவாமிப்பட்டுக்கள், சுவாமி அலங்காரத்திற்குரிய பட்டு வேஷ்டி புடவைகள் ஆகியவற்றையும் மலேசியா சிங்கப்பூர் போன்ற நாடுகளிலிருந்து தருவித்து மலிவு விலைக்கு வழங்குவது பக்தர்களுக்கு பெரிதும் உதவியாக இருக்கின்றது.

வெள்ளிதோறும் விழா

முருகன் கோவில் ஆரம்பித்த காலத்தில் மிகவும் சிறிதான முருகன் விக்கிரகம் வெள்ளிதோறும் வீதியுலா வர ஆரம்பித்து பின்னர் வள்ளி தெய்வானையுடனாக ஸ்ரீ செல்வமுத்துக் குமரன் வீதிவலம் வந்து அடியார்களுக்குக் காட்சிகொடுத்து அருள்வது வழக்கத்தில் உள்ளது. மற்றும் கார்த்திகை உற்சவத்தின்போதும் முருகன் பவனி வருவார்.


தைப்பொங்கல் விழா

தமிழர் திருநாளாம் தைப்பொங்கல் தினத்தில் தாயகத்துக் கோவில்களில் ஆங்காங்கே கிராமத்துக் கோவில்களில் வைகாசி விசாகப் பொங்கல், பங்குனித் திங்கள் பொங்கல், தைப்பொங்கல் பட்டிப் பொங்கல் என்று அவ்வப்போது மக்கள் ஒன்றிணைந்து அடுப்பில் பொங்கல்பானை ஏற்றிவைத்து சிறு விறகு ,பாளை, ஓரல் இவற்றினால் தீமூட்டி பானையிலுள்ள பால் பொங்கி வரும்போது தமது உள்ளங்களிலும் இல்லங்களிலும் ஆனந்தம், அன்பு, செல்வம், அறிவு, வீரம் ஆகியன பொங்கியெழவேண்டுமென குதூகலமாக பொங்கலோ பொங்கல் என வாயாரக்கூறி அரிசியை இட்டு பருப்பு சர்க்கரை சேர்த்து பொங்கல் செய்து இறைவனுக்குப் படைத்து அனைவரும் உண்டு மகிழ்வர்.

ஆனால் புலம்பெயர்ந்து வெளி நாடுகளில் வாழும் நமது குழந்தைகளுக்கு நமது மண்ணின் கலாச்சாரமும் விரும்தோம்பலும் தெரியாமலே போய்விடும் என்பதனால் சைவ மஹாசபையினர் தைப்பெங்கல்பானை, கரண்டி, அரிசி, பருப்பு , சர்க்கரை, பால் முந்தியவற்றல் ஏலம் முதலானவற்றை வழங்கி ஒவ்வொரு குடும்பத்தினரையும் பொங்கல் பொங்கிப் படையலிட்டு வழிபாடு செய்ய ஊக்குவித்தனர்.

 இதற்காக மக்கள் வழங்கும் நன்கொடைகளை ஆலயத்திற்கு முதிய தலைமுறையினருக்கு பழைமையை நினைவு கொள்ளும் இன்ப அனுபவமாகவும் இருந்தது. பசுமாட்டை வரவழைத்து அலங்கரித்து கோமாதா பூஜை செய்ததையும் மயில், சேவல் ஆகியவற்றை பெரியோர்களும் குழந்தைகளும் வலம் வந்து வழிபட்டதையும் கண்ட ஆஸ்திரேலியர்கள் நமது பண்டிகைகளின் உட்பொருளான ஜீவகாருண்யத்தைப் பெரிதும் பாராட்டிப் பேசினர். மனிதனுக்குள் மிருகம் இருப்பது போல் மிருகத்துள் தெய்வம் இருக்கும் என்னும் தத்துவம் வெளிப்படலாயிற்று. இதனைப் பார்த்த வேற்று மதக் கலாசாரமுள்ள ஆஸ்திரேலியர்களுக்கு நமது தமிழர் கலாசாரப் பண்பாட்டின் ஒரு விழுமியமாகவும் காணப்பட்டு வருகிறது.

குழந்தைகளுக்கும் கொண்டாட்டம்

அவ்வேளையில் சிறுவர்கள் ஆனந்தமாக விளையாடி மகிழுவதற்காக வெண்மணலைக் கொண்டு வந்து ஒரு மணற்கேணியில் நிரப்பியும், துள்ளிக் குதித்து விளையாடும் சாதனங்களையும், ஊஞ்சல் முதலானவற்றையும் வாடகைக்கு ஒழுங்குசெய்தும், முதியோர்களுக்காக பழைய திரைப்படங்களை திரையிட்டும், பலவகை சிற்றுண்டிகளைத் தயாரித்து நிலாமுற்றத்தில் அமர்ந்து சாப்பிடுவதற்காகப் பரிமாறியும் அனைவரையும் கோலாகலமாக பொங்கல் தினத்தைக் கொண்டாடி மகிழ வைத்ததை யாராலும் மறக்க முடியாது.


தைப்பூசப் பெருவிழா
தைப்பூசப் தினத்தன்று முருகனுக்குப் பெருவிழா நடைபெறுவது வழக்கம். நமது தாயகத்திலும் தமிழகத்திலும் மாத்திரமின்றி சிங்கப்பூர் மலேசியநாடுகளிலும் மிகவும் விமரிசையாக நடைபெற்று வருகிறது. தமிழர்கள் மட்டுமின்றிப் பெருந்திரளான சிங்களவர்களும் மலேசிய சிங்கப்பூர் வாழ் சீனர்களும் பக்தியுடன் காவடிகளை எடுத்து ஆடிப்பாடி ஆலயத்திற்கு வீதிவலமாக மேளவாத்தியங்களுடன் வந்து தமது வேண்டுதலை நிறைவேற்றுவதையும் அனைவரும் அறிவர்.

தற்போது தமிழர்கள் புலம்பெயர்ந்து வாழும் அனைத்து நாடுகளிலும் கோவிலும் வழிபாடுகளும் குறைவின்றி விமரிசையாக நிகழுகின்றன. பெர்த்தில் பலவருடங்களாக மலேசிய, சிங்கப்பூர் மக்கள் மேளிட்றைவில் உள்ள தனியார் வழிபாட்டுத் திருத்தலத்தில் தமது காவடி வழிபாட்டை நிகழ்த்தி வந்தது பெருமைக்குரியதொன்றாகும். தற்போது கந்தகோட்டம் ஸ்ரீ பாலமுருகன் ஆலயத்தில் தைப்பூசநாளில் சிறியவர்களும் பெரியவர்களுமாகப் பலர் விரத நியமங்களுடன் மஞ்சள் நிறமுள்ள புனித ஆடைதரித்து மாணிக்க கங்கைக் கரையிலிருந்து பால்காவடி, பன்னீர்காவடி, சந்தனக் காவடி, புஷ்பகாவடி எனப்பலவகையான அபிஷேகப் பொருள்களடங்கிய காவடிகளை மயிலிறகுகளாலும் மலர்களாலும் அலங்கரித்து தோளில் சுமந்து கோவிலுக்கு எடுத்து வந்து அழகிய முருகன் அலங்காரத் தேரில் பவனிவரும்போது காவடிகளும் கூடிவர பெண்கள் தமது கைகளில் கற்பூரச்சட்டிகளைத் தாங்கிவர மேளம் மத்தளம் உடுக்கை தாளம் கஞ்சிரா போன்ற வாத்தியங்களுடன் டாக்டர்கள், எஞ்ஜினியர்கள், அக்கவுண்டன், லாயர், லெக்சரர் போன்ற பல உயர்பதவிகளிலுள்ள முருக பக்தர்கள் பக்திப் பரவசத்துடன் ஆடிப்பாடி வருவதைக் காணலாம்











வரவேற்புப் பந்தல்கள்

தேர் உலாவரும்போது நான்கு வீதிகளிலும் எட்டுத் திசைகளிலும் தனித்தனியாக எல்லைமானப்பந்தலிட்டு மாவிலை தோரணங்களினால் அலங்கரித்து பூரண கும்பம் குத்துவிளக்கு மண்டபப்படி முதலானவற்றுடன் சைவமஹாசபையினர் பந்தல், சரவணமலை முருகன் ஆலய அடியார் பந்தல், ஆலயக் குருக்கள் வீட்டுப் பந்தல், ஸ்ரீ ஞானானந்தசேவா சமாஜத்தினர் பந்தல், ஸ்ரீ சாயிபாபா சமித்தியினர் பந்தல், ஸ்ரீ அமிர்தானந்தமயி குழுவினர் பந்தல் மற்றும் தனிப்பட்ட கந்தன் ஸ்டோர் பந்தல், முருகன் பஜனைக் குழுவினர் பந்தல், இப்படியாக ஒவ்வொருவரும் முருகனை வரவேற்று பட்டு மாலை அணிவித்து ஆரத்தி எடுத்து உபசரிப்பது கண்கொள்ளாக் காட்சியாகும்.

 ஒவ்வொரு பந்தலிலும் சுண்டல், அவல், குளிர்பானம் முதலியன பக்தர்களுக்கு வழங்கப் படுவது தாயக நினைவுகளை மனக்கண்முன் கொண்டு வருவதற்கேயாகும். முருகன் ரதம் இருப்பிடம் சேர்ந்ததும் காவடிகள், வாத்தியங்கள் பக்தர்கள் அனைவரும் ரதத்தை வலம் வந்து வணங்குவர். முருகன் ஆலயத்திற்குள் வந்தது அமர்ந்ததும் சிறந்த பஜனைகளுடன் பக்தர்கள் சமர்ப்பிக்கும் பாலபிஷேகம் பஞ்சாமிர்த அபிஷேகம் விபூதி அபிஷேகம் ஆகியன அனைவரையும் பக்திப் பரவசத்தில் ஆழ்த்தும்.

நவராத்திரி விழா

செவ்வாய்கிழமை தோறும் நடைபெற்று வரும் அம்பிகை வழிபாட்டின் சிகரமாக நவராத்திரி காலத்தில் அம்பிகை வழிபாடு மிகவும் சிறப்பான முறையில் நடைபெற்று வருகிறது. தினமும் சிறுமிகளின் வாத்திய அஞ்சலிகளும் பரதநாட்டிய நிகழ்ச்சிகளும் பாட்டு பேச்சு ஆகிய முத்தமிழ் நிகழ்ச்சிகளையும் துர்கை, லட்சுமி, சரஸ்வதி ஆகிய முப்பெருந் தேவியரின் அலங்காரக் கொலுமண்டபத்தில் நடத்தி மகிழ்வர்.




ஸ்கந்தசஷ்டி விழா

முருகனுக்கு உகந்த விரத தினங்களாகி ஸ்கந்த சஷ்டித் தினங்களில் விமரிசையான அபிஷேக ஆராதனைகளும் சண்முக அர்ச்சனைகளும், ஆறாம் நாள் சூரசம்ஹாரத் திருவிழாவும் மறுநாள் திருக்கல்யாணத் திருவிழாவும் நடைபெறுவது மிகவும் பிரசித்தமானது. பெர்த் வாழ் அந்தணப் பெருமக்கள் தமது கைங்கர்யமாக சண்முகார்சனை பூஜைகளில் வந்து பங்காற்றி வருவது மறக்கொணாத பேருதவியாகும். இவ்வாறு மாதந்தோறும் வருகிற ஏனைய விசேஷ தினங்களிலும் பல விழாக்கள் பக்தர்களினால் நடத்தப் பெற்று வருவது குறிப்பிடத்தக்கது. இங்கு முருகனுக்கு மாம்பழங்களினால் நடைபெறும் அர்ச்சனை பலரின் மனவிருப்பங்களை நிறைவேற வைத்திருப்பது உலகப் பிரசித்தமானதாகும்.

நிதி சேகரிப்பு

ஆலயத்திற்கு சிறிது சிறதாக பல வழிகளில் நிதி திரட்டும் முயற்சியில் சைவமஹா சபையினர் அயராது பாடுபட்டு உழைத்தனர். மாதம் ஒருமுறை ஞாயிற்றுக் கிழமையன்று சமூக மண்டபம் ஒன்றில் தோசைக்கடை வியாபாரம் ஆரம்பித்தனர். சிரமதானம் மூலம் தோசையையும் ஏனைய பலகாரவகை உணவுகளையும் ருசியாவும் சுகாதாரமாகவும் இவர்கள் தயாரித்து வழங்குவதால் குறிப்பிட்ட தினங்களில் வாடிக்கையாக வெள்ளைக்காரர் கூட்டம் நிரம்பி வழியும்.

இதனால் சேரும் பணத்துடன் அவ்வப்போது புதிய திரைப்படங்களை வரவழைத்து திரையிட்டும் நிதி திரட்டினர். அவ்வப்போது சிறந்த கலை நிகழ்ச்சிகள் படைத்தும் பணம் சேர்த்து உதவினர். அண்மையில்
ஸ்ரீ ஞானானந்த சேவா சமாஜ ஆதரவுடன் சிறப்பான ஒரு நடன நாட்டிய நாடக நிகழ்ச்சி மூலம் முருகன் ஆலயத்திற்கு மக்களிடமிருந்து நிதி குவிந்தது. முருக பக்தர்கள் ஒவ்வொருவரும் கந்தக் கடவுளை தமது சொந்தக் கடவுளாகவும், கந்தன் கோவிலைத் தமது சொந்த கோவிலாகவும் எண்ணி அன்புடனும் அக்கறையுடனும் முன்னெடுக்கும் காரியங்களை சைவமஹாசபையினர் பின்னணியிலிருந்து ஊக்குவிப்பதுவே பெர்த் முருகன் ஆலயத்தின் தனிச் சிறப்பு எனலாம். மகா கும்பாபிஷேகத்தையொட்டி சிறந்த கட்டுரைகளைத் தாங்கிய சிறப்பு மலர்வெளியீடும் இடம்பெறவுள்ளது. ஆணவத்தை அடக்குபவனும் அருளைத் தந்து வாழவைப்பவனும் முருகன் என்பதைத் தான் சூரசம்ஹாரம் நமக்கு புலப்படுத்துகின்றது.

புதிய ஆலயமும் சிற்பியின் கைவண்ணமும்

புதிய ஆலயத்தைச் செவ்வனே கட்டிஎழுப்புவதற்கு உதவியாக சேவை மனப்பான்மை கொண்ட பலர் முக்கிய காரணமாக விளங்கினர். நில அளவை, மண்பரிசோதனை முதலான ஆரம்பவேலைகள் முதல் மற்றும் பொருத்தமான திறமையான கட்டிட அமைப்பபாளரை நியமித்தல் போன்றவற்றுடன் கோவில் வழிபாட்டுடன் கலை கலாச்சாரம் சமூக நிகழ்வுகள் அனைத்தையும் நடாத்துவதற்கு ஏற்ற ஒரு சமூக மண்டபம் போலவும் அமையுமாறு திட்டமிட்டு வரைபடம் மூலம் வடிவமைத்து நாட்டின் சட்ட திட்ட ஒழுங்குகளை மீறாமல் கட்டிட வேலைகளை திறம்பட முடித்துவிட்டனர்.

 இதன்பின்னர் கருவறைச் சுவர்களில் வரிவர்க்க சிற்பவேலைகளையும் சித்திரத் தூண்கள் விமான அமைப்புக்கள் தெய்வச்சிலைகள் ஆகியவற்றையும் செய்வதற்காக இந்தியாவிலிருந்து தலைசிறந்த சிற்பியாகிய தசரதன் என்பவரை அவரது உதவியாளர்களுடன் வரவழைத்து வசதிகளைச் செய்துகொடுத்து இரவுபகலாக அவர்களின் கைவண்ணத்தினால் அழகான சுந்தரவிமானங்களுடனம் சிற்ப ஓவிய வேலைப்பாடுகளுடனும் வர்ணவேலைகளுடனும் கோவில் வேலைகள பூர்த்தியாகி இன்றைய நமது பண்பாடுகளையும் சமயகலாச்சாரங்களையும் காலங்காலமாக நமது வருங்கால சந்ததியினர் எண்ணிப் பெருமைப்பட தக்க வகையில் பெர்த் ஸ்ரீ பாலமுருகன் கோவில் கமபீரமாகக் காட்சியளித்துக் கொண்டிருக்கின்றது.

ஆலய இணையதளம்: www.perthmurugan.org.au/


           





33 comments:

  1. இருந்த இடத்தில இருந்து கொண்டே நாங்கள் பல தளங்களையும் தரிசிக்க முடிகிறது. உங்களுக்கு அந்த ஆண்டவனின் அருள் நிச்சயம் உண்டு

    ReplyDelete
  2. @எல் கே said...
    இருந்த இடத்தில இருந்து கொண்டே நாங்கள் பல தளங்களையும் தரிசிக்க முடிகிறது. உங்களுக்கு அந்த ஆண்டவனின் அருள் நிச்சயம் உண்டு//
    Thank you sir.

    ReplyDelete
  3. வழக்கம்போல் படங்களும் பதிவும் அருமை
    ஈ மெயிலுடன் கூடிய காலை வாழ்த்துக்களுடன்
    உங்கள் ஆன்மீகம் சொட்டும் பதிவுடனும்
    இன்றைய நாளைத் துவங்குவது
    மகிழ்வூட்டுவதாக உள்ளது
    தாங்களும் தங்கள் குடும்பத்தாரும்
    எல்லா நலமும் வளமும் பெற்று
    நீடூழி வாழ
    எல்லாம் வல்ல ஆண்டவனைப் பிரார்த்திகிறேன்

    ReplyDelete
  4. ஆன்மீக அறிமுகம் அக்கரையிலும்!

    ReplyDelete
  5. @Ramani said...
    இன்றைய நாளைத் துவங்குவது
    மகிழ்வூட்டுவதாக உள்ளது
    தாங்களும் தங்கள் குடும்பத்தாரும்
    எல்லா நலமும் வளமும் பெற்று
    நீடூழி வாழ
    எல்லாம் வல்ல ஆண்டவனைப் பிரார்த்திகிறேன்/
    மகிழ்வூட்டும் வாழ்த்துக்களுக்கு நன்றி ஐயா.

    ReplyDelete
  6. @FOOD said...
    ஆன்மீக அறிமுகம் அக்கரையிலும்//

    அக்கறையான கருத்துக்கு நன்றி ஐயா.

    ReplyDelete
  7. உள்நாடு மட்டுமல்லாமல் வெளிநாட்டில் இருக்கும் ஆலயங்களையும் குறிப்பிட்டு அதன் வரலாறுகள் சொல்லி ஆச்சரியம் பட வைக்கிறிர்கள்...

    உங்களுடைய தயவால் பல்வேறு ஆலயங்களைப்பற்றி தெரிந்துக் கொண்டு வருகிறேன்...

    நான் அங்கு செல்ல முடியாது ஆனையால் ஆஸ்திரேலியா - பெர்த் ஸ்ரீ பால முருகன் கோவிலை இங்கிருந்தே தரிசிக்கிறேன்...

    நன்றி

    ReplyDelete
  8. //ஸ்ரீ பாலமுருகன் கனவிலம் நனவிலும் பலரிடம் திருவிளையாடல் புரிந்தவண்ணம் திருவருள்பாலிக்கிறான். யாரைப் பயன்படுத்தி எந்தக் காரியத்தை நிறைவேற்ற வேண்டுமோ அதனை அவரைப் பயன்படுத்தி நிறைவாகச் செயவிப்பதில் ஸ்ரீ பாலமுருகனுக்கு நிகர் எவருமேயில்லை எனலாம்.//


    //எங்கிருந்தோ ஒரு மயில் பறந்துவந்து தோகையை விரித்து வெகுநேரமாக ஆடிக்கொண்டு நின்றதை//


    //இறந்துவிட்டதாக வைத்தியர் கூறிச்சென்ற அதே பசு உயிருடன் எழுந்துநின்ற அற்புதத்தையும் தான் கண்ணாரக்கண்ட நிகழ்ச்சியை உணர்ச்சிபூர்வமாக எடுத்துக் கூறினார்.//

    ஆஹா, படிக்கும்போதே பரவசம் ஏற்படுகிறது.

    பதிவு அருமை. பாராட்டுக்கள்.

    பிரியமுடன் vgk

    ReplyDelete
  9. Dr.P.Kandaswamy, Ph.D. Palaniappan to me
    show details 11:45 AM (8 minutes ago)
    Thank You, Mrs Rajeswari for all your mails. I am enjoyinf all the posts and wonder how you get so much details.
    Thank you,
    Yours sincerely,
    P.Kandaswamy//
    நன்றி ஐயா.

    ReplyDelete
  10. மூன்று நான்கு முறை Refresh செய்தும் எனக்கு முதல் படம் தவிர வேறு எதுவும் திறக்கவில்லை. மற்றபடி கார்த்திக் சொல்வதை நானும் ஆமோதிக்கிறேன்.

    ReplyDelete
  11. அருமையான பதிவு.

    ReplyDelete
  12. இருந்த இடத்தில இருந்து கொண்டே நாங்கள் பல தளங்களையும் தரிசிக்க முடிகிறது. வழக்கம்போல் படங்களும் பதிவும் அருமை

    ReplyDelete
  13. "பெர்த் ஸ்ரீ பாலமுருகன்" பல விபரங்களையும் அடக்கியுள்ள பதிவு.

    ReplyDelete
  14. @ ஸ்ரீராம். said...
    மூன்று நான்கு முறை Refresh செய்தும் எனக்கு முதல் படம் தவிர வேறு எதுவும் திறக்கவில்லை. //
    வருத்தமாகத்தான் இருக்கிறது.

    ஆலய இணையதளம்: www.perthmurugan.org.au/

    இந்த தளத்தில் படங்கள் இருக்கின்றன. பாருங்கள். சிரமத்திற்கு மன்னிக்கவும்.

    ReplyDelete
  15. @ Rathnavel said...
    அருமையான பதிவு.//
    நன்றி ஐயா.

    ReplyDelete
  16. @போளூர் தயாநிதி said...//
    நன்றி ஐயா.

    ReplyDelete
  17. @மாதேவி said...
    "பெர்த் ஸ்ரீ பாலமுருகன்" பல விபரங்களையும் அடக்கியுள்ள பதிவு.//
    வருகைக்கும் கருத்துக்கும் நன்றிங்க.

    ReplyDelete
  18. அவ்வேளையில் மீண்டும் ஒரு அதிசயம். அந்த நில உரிமையாளர் தான் குடியிருந்த வீட்டையும் அதனுடன் சேர்ந்த காணியையும் சேர்த்து வாங்குவது எமது சமுதாயத்திற்கு நல்லதெனவும் தனது தொழிற்கூடத்தைத் தற்காலிக ஆலயமாகப் பயன்படுத்தலாம் எனவும் ஆலோசனை கூறியதுடன் யாரும் எதிர்பாராத அளவு சகாயவிலைக்கும் தருவதற்கு முன்வந்தார். அவ்வேளை நிதிப் பற்றாக்குறையைச் சமாளிப்பதற்காக பல அன்பர்கள் தாம் அந்தச் சூழலில் பிற்காலத்தில் வந்து குடியிருப்பதற்கும் முதியோர் இல்லம் போன்றவை அமைப்பதற்கும் உகந்த இடம் என அபிப்பிராயம் கூறி அந்தக் காணியைப் பங்குபோட்டு ஒவ்வொருவரும் வாங்க முன்வந்தனர். (ஆனால் பின்னர் இதனை ஆலயத்திற்கே உரிமையாக்கினர்). இவை அனைத்துமே ஒவ்வொருவர் மனத்திலும் அவ்வப்போது முருகன் புகுந்து நின்று தோற்றுவித்த எண்ணங்கள் என்பதை நினைக்கும் போது கண்ணீர் பெருகி வருவதை உணரமுடிகிறது..


    ஆன்மீகத்தின் உச்சம் கண்ணீர்தான் என்பதை அழகாய் சொல்லியிருக்கிறிர்கள், உங்களின் அத்தனை பதிவும் அற்புதம்
    உங்களின் எழுத்தும் அர்ப்பணிப்பும் ஆண்டவனை மிக அருகில் அழைத்துவருகிறது
    மனம் நிறைந்த மகிழ்ந்த நன்றி

    ReplyDelete
  19. @A.R.ராஜகோபாலன் said...//

    உங்களின் எழுத்தும் அர்ப்பணிப்பும் ஆண்டவனை மிக அருகில் அழைத்துவருகிறது
    மனம் நிறைந்த மகிழ்ந்த நன்றி//

    மனம் நிறைந்த கருத்துக்கு நன்றி ஐயா.

    ReplyDelete
  20. I never, never can go these places. But by way of your writing and pictures, i felt as if I went there personnally.
    Thanks Rajeswari. Today morning i Got Muruga Darshan because of you.
    viji

    ReplyDelete
  21. @ viji said...//
    வாங்க விஜி. வாங்க!. ஆத்மார்த்தமான கருத்துரைக்கு மிக்க நன்றிங்க.

    ReplyDelete
  22. முருகப் பெருமானது அருளால் பல அதிசயங்களை கண்டு வியக்கிறோம்..

    ஆஸ்திரேலியாவில் இவ்வளவு சிறப்போடு ஒரு தலம் என்பது மகிழ்ச்சியாக இருக்கிறது...

    தங்களது அருமையான ஆக்கத்தோடு இதை பக்தியோடு படித்தோம்..

    மிக்க நன்றி..

    முருகனருள் உங்களுக்கு பரிபூரணமாக கிடைக்கட்டும்..

    சிவயசிவ

    ReplyDelete
  23. சுட்டிக்கு நன்றி....ஆனால் இன்று வந்து பார்க்கும்போது எல்லாப் படங்களும் முருகன் அருளால் காண முடிந்து விட்டது!

    ReplyDelete
  24. @ சிவ.சி.மா. ஜானகிராமன் said.//
    Thank you for admire and comments.

    ReplyDelete
  25. @ ஸ்ரீராம். said...
    சுட்டிக்கு நன்றி....ஆனால் இன்று வந்து பார்க்கும்போது எல்லாப் படங்களும் முருகன் அருளால் காண முடிந்து விட்டது!//
    Thank you sir.

    ReplyDelete
  26. உங்கள் ஆன்மீகப் பதிவுகளுக்கு ஈடில்லையம்மா.. உங்கள் பதிவுக்கும் படங்களுக்கும் ஒரு நமஸ்காரம்

    ReplyDelete
  27. @Geetha6 said...
    அருமை!!//

    நன்றி.

    ReplyDelete
  28. @ மோகன்ஜி said...
    உங்கள் ஆன்மீகப் பதிவுகளுக்கு ஈடில்லையம்மா.. உங்கள் பதிவுக்கும் படங்களுக்கும் ஒரு நமஸ்காரம்//

    நன்றி ஐயா.

    ReplyDelete
  29. இருந்த இடத்தில இருந்து கொண்டே நாங்கள் பல தளங்களையும் உங்களின் வுதவியால் தரிசிக்க முடிகிறது. உங்களுக்கு என் நெஞ்சார்ந்த நன்றிகள்..

    ReplyDelete
  30. ;)

    அச்யுதா!
    அனந்தா!!
    கோவிந்தா!!

    ReplyDelete
  31. 534+2+1=537

    [தங்களின் பதில் கிடைத்தவர்கள் பாக்யசாலிகள்; என்னைத்தவிர. ;( ]

    ReplyDelete