Monday, February 28, 2011

வைகாசிக்குன்று தேர்த் திருவிழா

ஆஸ்திரேலியாவில் சிட்னியில் வைகாசிக்குன்றும் அற்புதமான முருகன் தரிசனமும் அமைநதது.
image004.jpg (400×533)
சேவல் கொடிகோனுக்கு விழாக் கொடியேற்றம்..
image003.jpg (400×300)
கொடியேற்றத்துடன் இனிதே விழா ஆரம்பிக்கிறது

image001.jpg (400×300)
கோபுர தரிசனம்... கோடி பாப நிவர்த்தி....
கோடி புண்ணியம்...
image005.jpg (400×300)
தலை அலைகளில் உற்சாகத் தேரேட்டம்..

image006.jpg (400×533)
மக்கள் வெள்ளத்தில் மகோற்சவம்...
image007.jpg (400×300)
அழகன் முருகன் அன்பு மலர் அலங்காரத்தில்..

image012.jpg (400×533)

image013.jpg (400×533)
பன்னிருகரங்களாலும்,பதினெட்டு விழியாலும்
பக்தரைக் காக்கும் பரமானந்த முருகன்
துவார பாலர்களுடன்...
image014.jpg (400×300)
வீடியோ காணொளித்தொகுப்பு கண்டு களிக்க..
சுட்டி இதோ...
http://www.youtube.com/watch?v=kxbilDHwsJY&feature=player_embedded

சிட்னி முருகனின் ரத உற்சவக் கொண்டாட்டங்கள்,,

அழகு முருகனுக்கு
ஆனந்த உற்சவம்.....
இலங்கைக் குருக்கள் தலைமையில்..
ஈழத்துக் கலைஞர்கள் இசையில்..
உற்சாகக் கொண்டாட்டம்
எழுச்சி என்றென்றும் எக்காளமிட
ஏற்றம் பெற்ற திருவிழா
ஐயம் தீர்க்கும் பெருவிழா
ஒற்றுமை கொள்ள ஒரு விழா
ஓதும் வேதம் தமிழாம்
ஔவியம் இன்றி உய்வோம்
அதுவே முருகன் அழைக்கிறான்
வருடாந்திர ரதஉற்சவக் கொண்டாட்டங்கள்
சென்ற ஆண்டு படங்கள்
க்ண்டு முருகன் அருள் பெறுங்கள்..

image002.jpg (400×300)


image001.jpg (400×300)
இலங்கை சர்வெஸ்வரக் குருக்கள் பிரதமக்
குருவாக சிறப்புற நட்த்துதல்...


image015.jpg (400×300)


image006.jpg (400×300)


image016.jpg (400×300)












image017.jpg (400×300)image017.jpg (400×300)











image013.jpg (400×300)image013.jpg (400×300)

image012.jpg (400×300)

 image011.jpg (400×300)


image010.jpg (400×300)
தேவாரத்திருமுறை இசைப்பு..

image009.jpg (400×300)

image008.jpg (400×300)

image007.jpg (400×533)

image005.jpg (400×300)


இலங்கைக் கலைஞ்ர்களின் நாதஸ்வர தெய்வீக இசை
image004.jpg (400×300)


image003.jpg (400×300)



ஆஸ்திரேலிய ஒலிபரப்புக் கூட்டுஸ்தாபனத்தின்
நேரடிக் காட்சிகள்..
image020.jpg (400×300)

image019.jpg (400×300)

பச்சை சார்த்தப்படுகிறது பச்சைமாலின் மருகனுக்கு..
image023.jpg (400×300)


image022.jpg (400×300)
அன்னதான வரிசை....

image021.jpg (400×300)

தாகம் தீர்க்க நீரும், மோரும், பழச்சாறும்....
image018.jpg (400×300)

ரத உற்சவக் கொண்டாட்டப் படங்கள்..

Sunday, February 27, 2011

அமர்க்களம்



நியூசவுத்வேல்ஸ் மாநில அரசாங்கமும், பரமற்றா நகர சபையும்
ஆறு நாட்களாக நடத்திய பரா மசாலா ஒரு முடிவுக்கு வந்திருக்கு. இந்தியாவில் இருந்து பல்துறைக் கலைஞர்களைக் கொண்டுவந்து தினமும் ஒரு கச்சேரி வைத்திருந்தாலும் வருண பகவானுக்குப் பொறுக்கவில்ல்லை போலும்.அழுது தீர்த்து விட்டார் மனுஷன். அதனால் இலவசமாகக் கொடுத்த களியாட்டங்களையே காணமுடியாமல் நொந்து நூடுல்ஸ் ஆகிவிட்டது சிட்னிச் சனம். என்னதான் இருந்தாலும் போன முறை இசைப்புயல் வந்து
 கலக்கிய அளவுக்கு இனியும் ஒரு நிகழ்ச்சி இருக்குமா என்று நினைத்துப்
 பார்க்க முடியவில்லை.

கட்அவுட் காணா ஆஸ்திரேலியர்களுக்கு இந்தியப் பாரம்பரியப் பிரகாரம் கட் அவுட் எல்லாம் வைத்து அமர்க்களப்படுத்தி விட்டார்கள் வீதிகளை.




i

காக்க வைத்துக் கொடுத்த நூலகப்புத்தகம்


காக்க வைத்துக் கொடுத்த நூலகப் புத்தகம்




















நியூசவுத்வேல்ஸ் மாநிலத்தில  நியூகாஸ்ட்ல் நகர நூலகத்தில் ஐம்பத்து மூன்று வருஷங் களுக்கு முன்னர் வாடகைக்கு எடுத்த புத்தகத்தை வெறித்தனமாக வைத்திருந்து திருப்பிக் கொடுத்திருக்கிறார் ..

. Knots, Splices and Fancy Work என்ற  நூலை McLaren என்பவர் நூலகத்தில் இருந்து வாடகைக்கு எடுத்திருக்கிறார். புத்தகத்தைத் திருப்பிக் கொடுக்கவேண்டும் என்ற எண்ணம்  இப்பவாவது வந்துச்சே என்று சந்தோஷப்படுங்க.

புத்தகத்தைக் கொடுத்த கையோடு 5 ஆயிரம் டாலருக்குத் தண்டப்பணத்தையும் கொடுத்திருக்கிறார்

ஆனால் தண்டப்பணம் கிட்டத்தட்ட 27 ஆயிரம் டாலர் வரை போகும் என்று இவரைப் பேட்டி எடுத்த உள்ளூர்த்தொலைக்காட்சி நிருபர் ஆப்பு வைத்தது இன்னொரு சுவாரஸ்யம்.

எது எப்படியோ ஆஸ்திரேலிய வரலாற்றில் இதுவரை நடக்காத சாதனையை இவர் செய்தது பெருமை.....

பிரிஸ்பேனில் இன்னிசை சொற்பொழிவு



பிரிஸ்பேனில் இன்னிசை சொற்பொழிவு


பிரிஸ்பேனில் 'கவியரசர் ஒரு புவியரசர்' என்ற தலைப்பில் இன்னிசை சொற்பொழிவு நடந்தது. தமிழகத்திலிருந்து வருகை தந்திருந்த திரு. அரங்க நெடுமாறன் இச்சொற்பொழிவை நடத்தினார்.

பிரிஸ்பேன், கார்டன் சிட்டி வணிக வளாகத்திலுள்ள நூலக அரங்கத்தில் நடந்த இந்நிகழ்ச்சிக்கு சுமார் 30 பேர் வந்திருந்தனர். பிரிஸ்பேனுக்கு இது பெரிய கூட்டம்தான்.

தமிழகத்திலுள்ள மேடைப் பேச்சுக்களை நினைவு படுத்தும்படி இருந்தது. பட்டிமன்ற பானி நகைச்சுவைகளுடன் இந்துமதம் சோதிடம் என்று தலைப்பில் பலதகவல்களை தந்தார்.

கவிஞர் கண்ணதாசனின் பாடல்களை அவ்வப்போது பாடி மேற்கோள்கள் காட்டியது சிறப்பாக இருந்தது. சொற்பொழிவை குறித்த நேரத்துக்குள் முடித்தது பாராட்டவேண்டிய ஒன்று.

கடைசியில் கேள்வி பதில் பகுதியில் சுமார் 12 வயதுடைய சிறுமி - முருகன் 2 மனைவிகள் வைத்திருப்பதால் அவர் நல்லவரா கெட்டவரா என்று பொருள்படும்படி ஒரு கேள்வி கேட்டு, சொற்பொழிவாற்றியவரை திணரடித்தது!
(பிரிஸ்பேன் நகருக்கு அடுத்துவர இருக்கும் தமிழ் அறிஞர்களே, இளைய தலைமுறையிடமிருந்து இது போன்ற கேள்விகளை எதிர்கொள்ள தயாராக வாருங்கள்

நாகலிங்கப்பூ




நாகலிங்கப்பூ எடுத்து
நாலுபக்கம் கோட்டை கட்டி....

கோவையில் ராஜஸ்தானி சங்கத்தில் அழகிய நாகலிங்க மரம் உள்ளது.
மரத்தைப் பார்த்தாலே ஆயிரம் சிவலிங்கங்களைப் பார்த்த உணர்வு ஏற்படும்.
கோனியம்மன் கோவில் ,பழனி திருவாவினன் குடி ஆகிய தலங்களிலும்
பல சிவாலயங்களிலும் நாகலிங்கமரங்களைப் பார்த்து வியந்திருக்கிறேன்.
இந்த மரத்தின் காய்கள் பீரங்கிக் குண்டு வடிவத்திலும், கீழே விழும் போது குண்டு வெடிக்கும் சத்தமும் ஏற்படுவதால் கோவில்களில் ஸ்தல மரமாக  அக் காலங்களில் வளர்த்திருக்கிறார்கள்.
தாவரவியல் விற்பனை நிலையங்களில் நாற்றுகள் கிடைக்கின்றன.வாங்கி கோவில்களிலும், விரும்பிய இடங்களிலும் நட்டுப் பராமரிக்கலாம்.
பூவின் தோற்றம் பார்க்கும் போதே ஒரு சிவாலயத்தை நினைவூட்டும்.நடுவில் அழகிய சிவலிங்கம்.சுற்றி நிற்கும் அரும்புகள் புனிதமான முனிவர்கள் அனைத்தையும் தன் நாகாபரணக் குடையில் பாதுகாக்கும் நாகவடிவில் மணம் பரப்பி நிறைக்கும்,பதஞ்சலியின் யோக முத்திரையின் குறியீட்டைப் போல.
நஞ்சுண்ட கண்டனுக்கு விருப்பமான விஷேசமான பூவாகும்.
இதன் ஒரு இதழை சுவைத்த என் தோழி வெகு நேரம் நீலநிறத்தில் எச்சில் சுரந்து அவதிப் பட்டாள்.

வைரத்தை வைரத்தால் அறுப்பது போல் விஷ சுரத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இதன் பட்டையும், காயும் மருந்தாகப் பயன்படுகிறது.
இலைகள் தோல் நோய்களுக்கு மேற்பூச்சாகி நிவாரணமளிக்கிறது.

Saturday, February 26, 2011

மரக்கன்று

கொட்டிலுக்கு பெண்ணும்,
தொட்டிலுக்கு ஆணும்
வேணும் என்று சொல்வார்கள்.

அக்காலத்தில் மாட்டுக் கொட்டிலில் பசு மாடு கன்று போட்டால் அது பெண்ணாக இருந்தால் அது பால் கொடுத்து, மீண்டும் மீண்டும் கன்று போட்டு கொட்டில் பெருகும் என்று கொட்டிலில் பெண் பிறப்பதையே விரும்புவர்.
அதுவே வீட்டுத் தொட்டிலாக இருந்தால் ஆண்குழந்தை பிறந்தால் அந்த குலம், கோத்திரத்தின் பெயரை ஏற்று, வீட்டிற்கு குலமகளைத் திருமணம் செய்து குலம் வளர்த்து பெயரெடுப்பான்.
பெண்ணானால், திருமணம் முடிந்த பின் புகுந்தவீட்டின் குலம், கோத்திரத்தையே ஏற்பாள் என்பது மரபு.
 தென்னை, வாழை மரங்களை வீட்டின் குழந்தைகளைப் போன்றே பேணுவர்.
அவற்றைத் தென்னங்கன்று, வாழைக்கன்று என்றே அழைப்போம்.
பரிகாரப் பூஜைகளுக்கு வாழையின் இடப்பாகக்கன்றை பெண்ணாகப் பாவித்து திருமாங்கல்யம் அணிவிப்பர்.
திருப்பைஞ்சீலி தலத்தில் ஏழு சப்த கன்னிகளும் வாழை வடிவாகி, வாழைவன நாதராம் சிவனுக்கு நிழல் தருகின்றனர்.
கோவையில் எட்டு மரங்களை வெட்டி வீழ்த்தி அமிலமும் வேர்ப்பகுதியில் ஊற்றியவருக்கு பத்து நாளில் நாற்பது மரக்கன்றுகளை நடுமாறு தீர்ப்பு வழங்கப் பட்டிருக்கிறது.
அக்காலத்தில் மன்னராட்சியில் இந்த மாதிரி தண்டனைகள் வழங்கப்பட்டதாலேயே இந்தியா முழுக்க சாலை ஓரங்களில் மரம் நடுவது சாத்தியமாகியிருக்கிறது.
தவறு செய்தவர்களை சிறையில் அரசாங்கச் செலவில் ,பொதுமக்களின் வரிப்பணத்தை விரயப்படுத்தி உணவு, காவல் என்று செலவினங்கள் தவிர்க்கப் பட்டதற்கு நன்றி கூறியே ஆகவேண்டும்.
சில வருடங்களுக்கு வேலியிட்டு, தண்ணீர் ஊற்றி பராமரிக்கும் பணியையும் அவருக்கு வழங்கவேண்டும்.
சிறைக் கைதிகளை சீனஅரசு சிறந்த முறையில் தொழிலுக்குப் பயன் படுத்துவதாலேயே உலகெங்கும் குறைந்த விலையில் பொருள்களை வழங்க் முடிகிறது.

Wednesday, February 23, 2011

நெடுங்களநாதர் திருக்கோயில்


அருள்மிகு திருநெடுங்களநாதர், நித்திய சுந்தரேஸ்வரர் திருக்கோயில், இரண்டு பிரகாரங்களுடன் கிழக்கு நோக்கி அமைந்துள்ளது.


கோயிலின் முன்னால் திருக்குளம் உள்ளது.

கோயில் முதல் வாயிலில் கோபுரம் கிடையாது.

இரண்டாவது நுழைவு வாயிலில் அழகிய சிற்பங்கள் கொண்ட சிறப்பான கோபுரம் உள்ளது. உள்பிரகாரத்தில் தென்கிழக்கில் சோமாஸ்கந்தர், சந்திரசேகர் சன்னதிகள் உள்ளது.

தென்பிரகாரத்தில் சப்தகன்னியர்களும், தட்சிணாமூர்த்தியும், ஐயனாரும் அருள்பாலிக்கிறார்கள். கன்னி மூலையில் வலம்புரி விநாயகருக்கு தனி சன்னதி உள்ளது.

மேற்கு பிரகாரத்தில் தெய்வானையுடன் முருகன் தனி சன்னதி உள்ளது. தெற்கு பக்கத்தில் உபய நாச்சியார்களுடன் வரதராஜப்பெருமாள் சன்னதியும், வடக்கில் அகஸ்தியர் சன்னதியும் உள்ளது.

இதன் எதிரே அகஸ்தியர் தீர்த்தம் உள்ளது. இதில் எக்காலத்திலும் தீர்த்தம் வற்றவே வற்றாது.

வெளி பிரகாரத்தில் வடகிழக்கு மூலையில் திருக்கல்யாண மண்டபமும், அம்பாள் சன்னதியும் உள்ளது.

கோயில் மூலஸ்தானத்தில் பார்வதி அரூபமாக உள்ளார். இதனால் மூலஸ்தானத்தின் மேல் இரண்டு கோபுரங்கள் உள்ளது.



காசிக்கு அடுத்தபடியாக இங்கு மட்டும் தான் இப்படி உள்ளது. உற்சவர் சோமாஸ்கந்தரின் வலதுகை கட்டை விரல் இல்லை.

காரணம் ஒரு அடியவருக்காக மாறு வேடம் கொண்டு வழக்கில் சாட்சி கூறி காப்பாற்றினார்.

இதையறிந்த அரசன் பெருமானது விரலை துண்டித்து விட்டான் என்கிறது புராணம். ஆயிரத்து ஐநூறு ஆண்டுகள் பழமையான இத்தலத்தில் சம்பந்தர், அருணகிரிநாதர் ஆகியோர் பாடியுள்ளனர். அகஸ்தியர் இங்கு வந்து பூஜைசெய்துள்ளார்.

ஆடி மாதம் 7 முதல் 12ம் தேதி வரை காலை 6.05 முதல் 6.15 வரை சூரிய ஒளி பூஜை சிறப்பாக நடக்கும்.

சிவன் தனக்கு இடப்பாகத்தினை சக்திக்கு ஒதுக்கி கொடுத்தவர். இவருக்கு அர்த்தநாரீஸ்வரர் என்று பெயர். மற்ற கோயில்களில் மூலஸ்தானத்தில் நடுநாயகமாக விளங்கும் ஈசன், திருச்சி அருகே திருநெடுங்குளத்தில் மூலஸ்தானத்தில் சக்திக்காக தன் இடப்பாகத்தை ஒதுக்கி கொடுத்து விட்டு சற்று தள்ளி வீற்றிருந்து அருள்பாலிக்கிறார். இங்கு சிவலிங்கம் மட்டுமே இருந்தாலும் இருவருமே இருப்பதாக ஐதீகம்.

திருநெடுங்களம் என்றால் “சமவெளியில் அமைந்த பெரிய ஊர்” என்று பெயர். அன்னை பார்வதி சிவனை நோக்கி இத்தலத்தில் தவம் இருந்தாள். பார்வதியின் தவத்தை மெச்சிய இறைவன் அவள் அறியாது வேறு வடிவில் வந்து தேவியை கைப்பிடிக்கிறார்.

“தேவாரப்பதிகம் மறையுடையாய் தோலுடையாய் வார்சடைமேல் வளரும் பிறையுடையாய் பிஞ்ஞகனே என்றுனைப்பே சினல்லால் குறையுடையார் குற்றம்ஓராய் கொள்கையினால் உயர்ந்த நிறையுடையார் இடர்களையாய் நெடுங்களம் மேயவனே.”
-திருஞானசம்பந்தர் தேவாரப்பாடல் பெற்ற காவிரி தென் கரைத்தலங்களில் இது 8வது தலம்.

திருவைராணிக்குளம்


ஆண்டுக்கு 11 நாள் மட்டுமே திறக்கப்படும் அம்மன் சன்னிதி, திருவாதிரை நாளில் திறக்கப்பட்டு பக்தர்கள் தரிசித்து வருகின்றனர்.

கேரள மாநிலம், எர்ணாகுளம் மாவட்டம் காலடி அருகே, திருவைராணிக்குளத்தில் மகாதேவர் கோவில் உள்ளது.

இக்கோவிலில் பார்வதி தேவி சன்னிதி, ஆண்டுக்கு 11 நாள் மட்டுமே பக்தர்கள் தரிசனத்திற்காகவும், பிற பூஜைகளுக்காகவும் திறந்திருக்கும்

மாலை 4 மணிக்கு, பார்வதி தேவிக்கு அணிவிக்க வேண்டிய ஆபரணங்கள் அடங்கிய திருவாபரண ஊர்வலம் புறப்பட்டது.

ராமமூர்த்தி கோவிலில் சிறப்பு பூஜைகள் நடைபெற்ற பின், அணையாத விளக்கில் இருந்து தீபமேற்றி ஊர்வலம் புறப்பட்டது.

அம்மனை பெரியவர் நாராயணன் நம்பூதிரிப்பாடு தலைமையில், இரவு 7.30 மணியளவில் ஊர்வலம், கோவிலை சென்றடைந்தது. அதன் பிறகு சன்னிதி திறப்பதற்கான வைபவங்கள் துவங்கின. மார்கழி மாதம் திருவாதிரை நட்சத்திர நாளில், சில சடங்குகள் செய்து திறக்கப்படும் சன்னிதி, காலை 4.30 முதல் பிற்பகல் 1.30 மணி வரையிலும், மாலை 4 முதல் இரவு 8.30 மணி வரையிலும் திறந்திருக்கும்.


கோவில் வட்டவடிவில் கற்றளியாக அற்புத அமைப்பில் ஒரே கருவறையில் முன்பக்கம் சிவனும் பின்பக்கம் அம்பாளும் அமைந்துள்ளது வேறு எங்குமே கண்டிராத அமைப்பு.


சிவ பூஜை முடித்து, சக்தி பூஜை செய்கிறார்கள்; அம்பாளை சாளரத்தின் வழி மட்டுமே தரிசிக்க முடியும்.

சுயம்வர புஷ்பாஞ்சலி அர்ச்சனை செய்தவர்களுக்கு பழக்கலவை பிரசாதம் தருகிறார்கள்.

கோவிலை முழுச்சுற்று வரமுடியாது. சிவனின் சடை பின் பகுதியில் விரிந்திருப்பதாக ஐதீகம்.அடையாளமாகக் குறிப்பிட்ட பகுதியை கடக்காமல் திரும்பி வர வேண்டும். பிரகாரத்தில் பெரிய நெல்லிக்காய் மரமும் ,மிகப்பெரிய அரசமரமும் மேடை கட்டப்பட்டு பழமையைப் பறை சாற்றுகின்றன. மிகப்பெரிய தெப்பக்குளமும் படித்துறையும் சுற்றிலும் பச்சையில் இத்தனை பச்சைகளா என்று வியக்க வைக்கும் விதவிதப் பச்சை இலைகளுடன் மரங்களும் செடிகளும் கொடிகளுமாக கண்ணையும் கருத்தையும் கவருகின்றன.





Tuesday, February 22, 2011

ஞீலிவனேஸ்வரர்...


மண்ணச்ச நல்லூரில் அருளும் ஞீலிவனேஸ்வரர் கோவிலுக்குச் சென்றிருந்தோம்.


இங்கு மூலவர் சன்னதியின் மேல் உள்ள விமானம் பத்ர விமானம் எனப்படும். இத்தல விநாயகர் வசந்த விநாயகர் என்ற பெயரில் அருள்பாலிக்கிறார். ஐந்து பிரகாரங்களுடன் உள்ள இக்கோயிலில்
    (1)  விசாலாட்சி
    (2) எமன்
    (3) கல்யாண
    (4) அக்னி
    (5) தேவ
    (6)   அப்பர்
    (7) மணியங் கருணை
என மொத்தம் ஏழு தீர்த்தங்கள் இருக்கிறது.


பிரகாரத்தில் உள்ள விநாயகர் சிவன் மற்றும் செந்தாமரைக் கண்ணன் எனும் பெருமாளுடன் சேர்ந்தபடி இருப்பதும், தெட்சிணாமூர்த்தியின் கீழ் நந்தி இருப்பதும் வித்தியாசமானதாகும். கொடிமரத்திற்கு அருகில் சுயம்பு நந்தி இருக்கிறது திருக்கடையூரில் எமனை காலால் உதைத்து சம்ஹாரம் செய்தார் சிவன். இதனால், உலகில் இறப்பு என்பதே இல்லாமல் உயிர்கள் அனைத்தும் நீண்ட ஆயுளுடன் இருந்தது. பாரம் தாங்காத பூமாதேவி சிவனிடம் முறையிட்டாள்.



ஒரு தைப்பூச தினத்தன்று சிவன், இத்தலத்தில் எமனை தன் பாதத்தின் அடியில் குழந்தையாக எழும்படி செய்தார். தர்மம் தவறாமல் நடக்கும்படி அறிவுறுத்தி அவருக்கு மீண்டும் பணி கொடுத்தார்.

இதன் அடிப்படையில் இங்கு பிரகாரத்தில் எமனுக்கு தனிச்சன்னதி இருக்கிறது. இச்சன்னதியில் சிவன் அம்பாள் மற்றும் முருகனுடன் சோமாஸ்கந்தராக இருக்க, சுவாமியின் பாதத்தின் கீழ் குழந்தை வடிவில் எமன் இருக்கிறார்.

இச்சன்னதி குடவறையாக அமைந்திருப்பது சிறப்பு. இங்கு அறுபதாம் கல்யாணமும், ஆயுள் விருத்தி ஹோமமும் அதிகளவில் நடத்துகின்றனர்.

மதிலின் மேற்றளம் புலிவரிக் கற்களால் ஆனவை. (இவ்வகைக் கற்கல் இங்கு மட்டுமே கிடைக்கின்றன. இதன் காரணமாகவே இத்தலம் வியாக்ரபுரி என்னும் பெயரைப் பெற்றதுபோலும்.)


குடைவரைக் கோவிலில் சில படிகள் இறங்கி உள்ளே செல்லவேண்டும்.யாகம் செய்வத்ற்கான இடப்பரப்புடன் கூடிய அற்புத அமைப்புடன் குகையைச் சுற்றி மரங்களுட்ன் சோலைவனமாக பராமரிக்கிறார்கள். எலுமிச்சை மரங்கள் நிறைய இருந்தன.

சனி பரிகாரத்தலமாக இருப்பதால்,  காகங்கள் மிகுதி. எமன் சனிக்கு அதிபதி என்பதால் இங்கு நவக்கிரகங்கள் இல்லை. நந்திக்கு முன்புறம் உள்ள தீபங்களையே கிரகங்களாக எண்ணி வணங்குகின்றனர்.


கோயில் ராஜகோபுரத்தை "ராவணன் வாயில்' என்கின்றனர். இக்கோபுரத்திற்கு கீழே சுவாமி சன்னதிக்கு செல்ல ஒன்பது படிக்கட்டுகள் இருக்கிறது. இந்த படிகள் ராவணனிடம் அடிமையாக இருந்த நவக்கிரகங்களை குறிப்பதாக சொல்கிறார்கள். இந்த நவக்கிரகப் ப்டிகளில் இற்ங்க இற்ங்க நம் நவக்கிரக தோஷங்களும் அகன்று விடுமாம்.

இறைவனின் திருவிளையாடல்: திருத்தலயாத்திரை சென்ற திருநாவுக்கரசர் ஞீலிவனநாதரை தரிசிக்க வந்து கொண்டிருந்தார். வழியில் அவர் பசியால் களைப்படைந்து ஓரிடத்தில் நின்றார். அப்போது, அர்ச்சகர் ஒருவர் அவர் முன் சென்று, சோறு (அன்னம்) கொடுத்து அவரது பசியை போக்கினார். பின் நாவுக்கரசர் அவரிடம் திருப்பைஞ்ஞீலி தலம் எங்கிருக்கிறது? எனக் கேட்டார்.


தான் வழிகாட்டுவதாகச் கூறிய அர்ச்சகர் அவரை இங்கு அழைத்து வந்தார். வழியில் அவர் திடீரென மறைந்துவிடவே கலங்கிய நாவுக்கரசர் சிவனை வேண்டினார். சிவன் அவருக்கு காட்சி தந்து தானே அர்ச்சகராக வந்ததை உணர்த்தினார். அவரது வேண்டுதலுக்காக லிங்கமாக எழுந்தருளினார்.

இவர் “சோற்றுடைய ஈஸ்வரர்” என்ற பெயரில் கோயிலின் முன்புறத்தில் தனிச்சன்னதியில் இருக்கிறார். சித்திரை மாதம், அவிட்டம் நட்சத்திரத்தில் இச்சன்னதியில் சோறு படைத்த விழா நடக்கிறது.


ஓவிய நடராஜர்: வசிஷ்ட முனிவர் சிதம்பரம் நடராஜரை தினமும் அர்த்தஜாம நேரத்தில் தரிசனம் செய்யும் வழக்கம் உடையவர். ஒருசமயம் அவர் இத்தலத்திற்கு வந்தபோது இரவில் இங்கேயே தங்கிவிட்டார். அவர் நடராஜரிடம் தனக்கு நடனக்காட்சி தரும்படி வேண்ட சுவாமி இங்கே நடனக்காட்சி தந்தருளினார்.


இதனை உணர்த்தும் விதமாக சுவாமி சன்னதிக்கு முன்புறம் நடராஜர் சித்திர வடிவில் வரையப்பட்டு இருக்கிறார். எதிரே வசிஷ்டர் ஓவியமும் இருக்கிறது. இத்தலத்திற்கு மேலச்சிதம்பரம் என்ற பெயரும் உள்ளது.


பிராம்மி, மாகேஸ்வரி, கவுமாரி, வைஷ்ணவி, வாராகி, இந்திராணி, சாமுண்டி ஆகிய சப்த கன்னிகளும் தங்களது திருமணத்திற்கு முன்பு இத்தலம் வந்து அம்பாளின் தரிசனம் வேண்டி தவம் செய்தனர்.

இக்கோவிலில் இரண்டு அம்மன் சந்நிதிகள் இருக்கின்றன. இரண்டு அம்மன்கள் பெயரும் விசாலாட்சி தான். பார்வதி தேவி ஒருமுறை சிவயோகத்திலிருக்க விரும்பி இத்தலத்திற்கு வந்து தவம் மேற்கொண்டாள். நிழல் தரும் மரங்கள் இல்லாததைக் கண்டு தனக்கு பணிவிடை செய்ய வந்த சப்த கன்னிகளை வாழை மரங்களாக அருகில் இருக்கக் கூறி அருள் செய்தாள். அத்தகைய பெருமை பெற்ற வாழைக்கு பரிகாரம் செய்ய விரைவில் திருமணம் கைகூடும். வெள்ளி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் வாழைக்குப் பரிகாரம் செய்வது மிகவும் சிறப்பாகும். வாழைப் பரிகார பூஜை நேரம் காலை 8-30 மணி முதல் பகல் 12-30 மணி வரையிலும், மாலையில் 4-30 மணிமுதல் 5-30 மணி வரையிலும் நடத்தப்படும்.
இரு அம்மன் சந்நிதிக்கு இடையில் புனிதக் கிணற்றில் இருக்கும் மீன்களுக்கு பழத்தைக் கிள்ளிப் போட்டால் ஆவலுடன் விழுங்கும் அழகே தனி.
ஞீலி என்பது
 ஒருவகை வாழை; தனி இனம். வேறிடத்தில் பயிராவதில்லை. இதன் இலை, காய், கனி அனைத்தும் இறைவனுக்கே பயன்படுத்தப்படுகிறது. இவற்றை மனிதர்கள் உண்டால் பிணி வருதல் இன்றும் கண்கூடு. இக்கனியைச் சுவாமிக்கு நிவேதித்து தண்ணீரில் விட்டுவிடுவார்கள்.
மரத்திலேயே பழுக்கும் பழங்களை கிளி, அணில் போன்ற உயிரினங்கள் ஆனந்தமாய் சாப்பிடுகின்றன.பூக்களில் இருக்கும் தேனை பூஞ்சிட்டுக்களும்,தேனிக்களும் மொய்க்கின்றன.


பெண்ணிற்கும் வாழை மரத்திற்கும் பொருத்தமாக சிலெடை வெண்பா புலவர்கள் மத்தியில் வெகு பிரசித்தம்
       தலைவிரிக்கும் பூச்சூடும் தண்டை அணியும்
      இலைவிரித்து நல்லுணவை ஈயும் -விலைமதிக்க
      ஒண்ணாப் பரம்பரையை உற்பத்தி செய்திடு நற்
      பெண்ணாகும் வாழை மரம்.

வாழை மரம் தலையை விரித்தது பொல் தன் இலைகளை விரித்த படி வளரும்.
பெண்கள் குளித்து முடித்ததும் தலையை விரித்து உலர்த்துவார்கள்.
வாழைமரம் பூச்சூடுவது போல் பூப்பூக்கும்.
பெண்கள் தலையில் பூச்சூடுவார்கள்.
வாழைமரம் வாழைத்தண்டை காலில் அணிந்திருக்கும்
பெண்கள் காலில் தண்டை என்னும் கொலுசு அணிவார்கள்.
வாழைமரம் தன் இலை, தண்டு, காய்,கனி, பூ,சாறு என அத்தனை உறுப்புகளையும் உணவாக வழங்கும்.
பெண்கள் வாழை இலையை விரித்து வகை வகையாய் நமக்கு உணவு பரிமாறுவார்கள்.
வாழைமரம் தன் இனம் வளரும் வண்ணம் கன்றுகளை ஈனும்.
பெண்கள் மனித இனம் வளரும் வண்ணம் மக்கட் செல்வத்தைப் பெறுவார்கள்.

இவ்வாறு பெண்ணாகும் வாழை மரமாகி நின்ற சப்தகன்னியரை வலம் வந்து வணங்கினோம்.
முன் வாசலில் மாடுகளுக்காக தொட்டி கட்டி வைத்திருக்கிறார்கள். நைவேத்திய பழங்களை வைத்தால் அங்கு மாடுகள் வந்து சாப்பிடுகின்றன.
திறந்த வெளியில் காகங்கள் அதிகமாக இருக்கின்றன. உணவு அளித்தால் தோஷப் பரிகாரமாகும்.
முற்றுப் பெறாத முதல் கோபுர வாசலின் முன் இருக்கும் மண்டபத்தில் குரங்குச் சிற்பம் பாயும் தோற்றத்தில் அற்பதமாக சிற்பியின் கைவண்ணத்தில்
உயிர்த்துடிப்புடன் விளங்குகிறது.

Monday, February 21, 2011

தைப் பூசம் திருநாள்






இந்த படங்கள் தைப் பூசத்திருநாளன்று (என் இளய மகனின் பிறந்த நாள் )   ஆஸ்திரேலிய செல்வ விநாயகர் கோவிலில் எடுக்கப்பட்டவை.

அதே நாளில் என் மூத்த மகன் கோவை நேரு மகாவித்யாலயா ஜெய் அனுமன் கோவில் கும்பாபிஷேகத்தில் பங்கு பெற்றார்.
தைப்பூச நாளில் காலை ஆறு மணி அளவில் கிழக்கு வானில் தன் பொற்கிரணங்களப் பரப்பி தத்தகாயமாய் உதிகவும், அதே நேரம்... மேற்கு வானில் கதிரவனுக்கு நேர்க்கோட்டில் தண் கிரணங்களைப் அளித்தபடி சந்திரனும் காட்சிப்படும் வானியல் அற்புதம் நிகழும் பொன்னாள்.

கும்பாபிஷேக நேரத்தில் கருடன் வட்டமிட்டது.

வேணுகோபாலசுவாமி கோவிலுக்குப் பக்கத்தில் இருக்கும் ராகவேந்திரர் பிருந்தாவனத்தில் கும்பாபிஷேகம் சில ஆண்டுகளுக்கு முன் ந்டைபெற்றது அப்போது ஏராள்மான கருடப் பறவைகள் வட்டமிட்ட காட்சி எப்போதும் மறக்கமுடியாது.

கும்பாபிஷேகம் முடிந்த நிலையில் யாகசாலையில் ""ரைட் ..லெப்ட்... " என்று குரல் கேட்க அருகில் சென்று பார்த்தேன்.   சங்கு,சக்கர முத்திரைகளை நெருப்பில் காட்டி கை நீட்டியவர்களுக்கு எல்லாம்  முத்திரை வைத்துக் கொண்டிருந்தார் ம்ந்திராலயத்தில் இருந்து வ்ந்திருந்த தலைமை சுவாமிகள்.

வேணுகோபால சுவாமி கோவிலின் தெப்பக்குளம் அற்புதமாக இருக்கும். கோவிலைச் சுற்றி சோலையும், பிரகாரத்தில் தனி சன்னதியில் சக்கரத்தாழ்வாருமாக நாமிருப்பது கோவையிலா அல்லது திருவரங்க சுற்று பிரகாரமா என்று கேட்கத்தோன்றும்.

முன்புறத்தூண்களில் கிருஷ்ணலீலைக் காட்சிகள் எழிலுற அமைக்கப்பட்டு கருத்தைக் கவரும்.                                               தைப்பூச வானியல் அற்புதத்தில் திளைத்திருந்த என்னை கருடப் பட்சிகள் கண்ணன் ச்ன்னதியில் கொண்டு சேர்த்துவிட்டன.


மீண்டும் தைப்பூசத்திற்கே வருவோம்! வள்ளலார் ஜோதித்ரிசனம் பெற்ற நாள். தைப்பூசத்திருநாள் காணாமல் போவாயோ பூம்பாவாய் என்று பதிகம் பாடிய நாள். 

எப்படி இருந்த ஊரு இப்படி ஆகிப்போச்சி........


http://www.abc.net.au/news/infographics/qld-floods/beforeafter.htm






இந்த லிங்கைக் கிளிக்கிப் பாருங்கள்.வெட்டி, ஒட்டி, கிளிக்கி, நடுவில் இருக்கும் கருப்பக் கோட்டை இடதும் வலதும் இழுத்து வெள்ளத்துக்கு முன் எப்படி இருந்த இடம், வெள்ளத்திற்குப் பின் இபபடி இருக்கிறது என்பதைக் காணுங்கள்.


ஆஸ்திரேலிய பிரிஸ்பேன் நதியின் மேல் மென்மையாக் அசைந்து கருத்தைக் கவர்ந்த மிதவைப் பாலம் ச்மீபத்திய வெள்ளத்தில் சிதறுண்டு போயிற்றாம்.
அதைக் கட்டுவதற்கு அனுமதி கிடைக்கவில்லையாம்.
எத்தனை அருமையான பால்ம்!!இழப்பு இழப்பு தான்!!

Sunday, February 20, 2011

தலை எழுத்தை மாற்றும் பிரம்மா

திருப்பட்டூர்


திருச்சிக்கு அருகிலுள்ள பிரம்மபுரீஸ்வரர் திருத்தலத்திற்குச் சென்றிருந்தோம். சிறுகனூர் என்று வழி கேட்க வேண்டுமாம்.

ராஜ கோபுரத்திலிருந்து முன்னூறு அடி தூரத்தில் ஏழு நிலைகளைக் கடந்து சூரிய வெளிச்சம் கிடைக்கும் அதிசய அமைப்பில், தஞ்சைக் கோவிலுக்கு முற்பட்ட காலத்தில் கட்டப்பட்டது.


ஏழு வண்ணங்களாலான, ஏழுகுதிரைகளை ஒற்றைச் சக்கரத் தேரில் பூட்டி, மேரு மலையை வலமாய் வந்து தன் அமிர்த கிரணங்களால் பிரம்மன் வழிபட்ட பிரம்மபுரீஸ்வரரைத் தரிசிப்பதாக ஐதீகம்.

பங்குனி மாதம் மூன்று நாட்கள் ஏழு நிமிடங்கள் சிவலிங்கத்தின் மீது சூரிய ஒளி படரும் அற்புதம் நிகழும்.


ஏழாம் எண் ஆதிக்கத்தில் பிறந்தவர்களுக்கும், ஏழாம் இடமான களஸ்திர ஸ்தானம் பாதிக்கப் பட்டவர்களுக்கும் பரிகாரத்தலமாகும்.

ஐந்து தலைகளைப் பெற்றிருந்த படைப்புக் கடவுளான பிரம்மா தன் ஆணவத்தால் சிவனால் ஒருதலை கிள்ளப்பட்டு, படைக்கும் சக்தியை இழந்தார்.

நான்முகனான பிரம்மா சிவனிடம் சாப விமோசனம் கேட்டார். துவாதசலிங்க வடிவில் பன்னிரண்டு பட்டைகளுடன் திருப்பட்டூரில் தன்னை வழிபட்டு படைப்புத் தொழிலைத் திரும்ப அடைய அருளினார் ஈசன்.

தன் தீய தலை எழுத்தை மாற்றிக் கொள்ளும் விதி உடையவர்கள் மட்டுமே பிரம்மனின் பார்வையில் படமுடியுமாம்.

“குருர் பிரஹ்மா; குருர் விஷ்ணு;
குருர் தேவோ மகேச்வர;
குரு சாக்ஷ?த் பர ப்ரஹ்மை
தஸ்மை ஸ்ரீ குரவே நமஹ”

இந்த குரு மந்திரப்படி பிரம்ம புரீஸ்வரர் கோஷ்டத்தில் உள்ள தட்சினாமூர்த்தி, அருகில் தனிசன்னதியில் பிரம்மாண்டமான பிரம்மா, அடுத்து சிவன் சன்னதி கோஷ்டத்திலுள்ள விஷ்ணு, அதன் பின் மூலவர் பிரம்மபுரீஸ்வரர் வரிசையில் தரிசிக்கும் அமைப்பு மிகவும் விஷேமானது. 

குரு மந்திரப்படி பிரம்மாவே முதல் குரு.
குரு பகவானுக்கு அதிதேவதையும் பிரம்மா என்பதால் குரு தோஷ நிவர்த்தி தலமாக விளங்குகிறது.


ஸ்தலத்திற்கான பிரம்ம காயத்திரி :-

“வேதாத்மனாய வித்மஹே
ஹிரண்ய கர்பாய தீமஹி
தன்நோ பிரம்மப் பிரசோதயாத்”

குருவாரமான வியாழக் கிழமை விஷேச பூஜைகள் உண்டு. அனைத்து தெய்வங்களுக்கும் மஞ்சள் வஸ்திரம் மட்டுமே சார்த்தப் படுகிறது. திங்கள் கிழமை, திருவாதிரை, புனர்பூசம், சதயம் மற்றும் ஜென்மநட்சத்திர நாட்களில் பக்தர்கள் இவரை வணங்குவது விசேஷ பலன் தரும். குரு பெயர்ச்சியன்று பிரம்மாவிற்கு பரிகார யாகபூஜை நடக்கும். திருமணத்தடை, பிரிந்த தம்பதிகள் சேருதல், தொழில், வியாபார, பணி விருத்திக்காக பிரம்மனிடம் வேண்டலாம்.

மிக முக்கியமான பிரார்த்தனை புத்திரப்பேறு வேண்டுதல் தான். ஏனெனில், பிரம்மன் தானே படைத்தாக வேண்டும். அவ்வகையில் இது மிகச்சிறந்த புத்திரப்பேறுக்கான பிரார்த்தனை ஸ்தலம்.

முருகப்பெருமான், அசுரர்களை அழிக்கச் செல்லும் முன் இத்தலத்தில் லிங்க பிரதிஷ்டை செய்து வணங்கி, அதன்பின் படை திரட்டிச் சென்றாராம். இதனால் "திருப்படையூர்" எனப்பட்ட தலம் "திருப்பட்டூர்" என மருவியதாகச் சொல்வர். முருகன் வழிபட்ட சிவன் கந்தபுரீஸ்வரர் என்ற பெயரில் இங்கிருக்கிறார்.